Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
குரோதி தமிழ் புத்தாண்டு இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Krodhi Tamil New Year 2024 Rasi Palan: இன்னும் ஓரிரு நாட்களில் குரோதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. 60 தமிழ் ஆண்டுகளில் 38 ஆவது தமிழ் ஆண்டு தான் குரோதி ஆண்டு. 2024 ஆம் ஆண்டின் சித்திரை மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டின் போது, கிரகங்களின் நிலைகளால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில் குரோதி தமிழ் புத்தாண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது குரோதி தமிழ் புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணியிடத்தில் வெற்றிகளைக் குவிப்பீர்கள். முதலீடுகளால் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இந்த குரோதி ஆண்டு சிறப்பாக இருக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டானது சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைகளை சிறப்பாக முடித்து பாராட்டுக்களைப் பெறுவார்கள். முக்கியமாக சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். இது பிற்காலத்தில் உதவியாக இருக்கும். உங்களின் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரகமாக எதிர்பார்த்தப்படியே முடிவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டில் பணப் பிரச்சனையே வராது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வேலையில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். சிலர் சொந்தமாக தொழிலை தொடங்க வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டில் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும் முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சிலருக்கு இந்த ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டு அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையையும் பெறுவார்கள். எதிரிகளின் சதியை முறியடித்து, உங்கள் வேலையை சிறப்பாக செய்து வெற்றி காண்பீர்கள். ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும். இதுவரை ஏதேனும் ஒரு நோயால் அவதிப்பட்டு வந்தால், இந்த ஆண்டில் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். முழு ஈடுபாட்டுடன் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications