Latest Updates
-
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க
Krishna Jayanti 2024: கிருஷ்ண ஜெயந்தி நாளில் இவற்றை வாங்குனா.. லட்சுமியின் அருளால் செல்வம் பெருகுமாம்..
Krishna Jayanti 2024: இந்து மதத்தில் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியானது ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தியானது நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டில் கிருஷ்ண பாதங்களை வரைந்து, கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து கிருஷ்ணரை வழிபடுவது வழக்கம். இப்படி வழிபடும் போது கிருஷ்ணரின் அருளால் வாழ்வில் உள்ள அனைத்து வகையான கஷ்டங்களும் நீங்கி, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை.

ஜோதிடத்தின் படி, கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் ஒருசில பொருட்களை வீட்டிற்கு வாங்கி வருவதன் மூலம், கிருஷ்ணரின் அருள் கிடைப்பதோடு, லட்சுமி தேவியின் ஆசியும் கிடைத்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண பிரச்சனைகள் நீங்கும், வீட்டில் மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்கும். இப்போது கிருஷ்ண ஜெயந்தி நாளன்று எவற்றையெல்லாம் வாங்கினால், வீட்டின் நிதி நிலையில் உயர்வு ஏற்படும் என்பதைக் காண்போம்.
குட்டி கிருஷ்ணரின் சிலை
உங்கள் வீட்டில் குட்டி கிருஷ்ணரின் சிலை இல்லையா? அப்படியானால் கிருஷ்ண ஜெயந்தி நாளில் குட்டி கிருஷ்ணரின் சிலையை வாங்குவது நல்லதாக கருதப்படுகிறது. இப்படி வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம், கிருஷ்ணர் மற்றும் லட்சுமி தேவியின் ஆசியால் செல்வம் பெருகும்.
புல்லாங்குழல்
கிருஷ்ணருக்கு புல்லாங்குழல் மிகவும் பிடிக்கும். அதனால் தான் அவர் எப்போதும் கையில் புல்லாங்குழலுடன் இருக்கிறார். இப்படிப்பட்ட புல்லாங்குழலை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வீட்டிற்கு வாங்கி வருவது நல்லது. வீட்டில் புல்லாங்குழல் இருந்தால், வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும். அதுவும் வீட்டில் இதை தொங்க விடுவதன் மூலம், வணிகம் மற்றும் தொழிலில் நல்ல வெற்றியுடன், லாபமும் கிடைக்கும். அதுவும் புல்லாங்குழலை படுக்கை அறையில் வைத்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மயில் இறகு
புல்லாங்குழலுக்கு அடுத்தப்படியாக கிருஷ்ணரிடம் இருக்கும் மற்றொரு பொருள் தான் மயில் இறகு. இந்த மயில் இறகு ராதாவின் அன்பின் அடையாளமாக கருதப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த மயில் இறகை வாங்கி வந்தால், வீட்டில் செல்வம் பெருகும். மேலும் வீட்டில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.
பசு மற்றும் கன்று சிலை
கிருஷ்ண ஜெயந்தி நாளில் பசு மற்றும் கன்று சிலையை வீட்டிற்கு வாங்கி வருவது மிகவும் நல்லது. பாற்கடலை கடையும் போது வெளிவந்த 14 செல்வங்களில் ஒன்றாக கருதப்படும் காமதேனுவாக பசு கருதப்படுகிறது. எனவே இந்த பசுவின் சிலையை வீட்டில் வைத்திருந்தால், மகிழ்ச்சி பெருகும். மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதோடு வீட்டில் பண வரவும் அதிகரிக்கும்.
வெண்ணெய்
கிருஷ்ணருக்கு வெண்ணெய் என்றால் ரொம்பவும் பிடிக்கும். வெண்ணெயுடன் கிருஷ்ணருக்கு தொடர்புடைய பல கதைகள் உள்ளன. எனவே இந்த வெண்ணெயை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்கி கிருஷ்ணருக்கு படைத்து வழிபட்டால், வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications