Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்
கிருஷ்ணனின் அருளைப் பெற வேண்டுமா? அப்ப உங்க ராசிக்கேற்ற மந்திரத்தை சொல்லுங்க...
Krishna Janmashtami 2023: பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள் தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இதை கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்றும் அழைப்பார்கள்.
விஷ்ணு பகவான் கம்சனை அழிக்க கிருஷ்ணனாக ஆவணி மாதம் கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியானது செப்டம்பர் 06 மற்றும் 07 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணனின் அருளைப் பெற பூஜைகள் மற்றும் யாகங்கள் செய்யப்படுகின்றன. இருப்பினும் கிருஷ்ணரின் பரிபூர்ண அருளைப் பெற விரும்பினால், ராசிக்கேற்ற மந்திரங்களை சொல்வது நல்லது.
இதனால் கிருஷ்ண பகவான் மகிழ்ச்சியடைந்து ஆசீர்வாதத்தை வழங்குவார். இப்போது கிருஷ்ண ஜெயந்தி நாளன்று ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த கிருஷ்ண மந்திரங்களை சொல்ல வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் ஓம் விஸ்வரூப நமஹ என்ற மந்திரத்தை சொல்வதன் மூலம் கிருஷ்ணரின் அருளைப் பெறலாம். மேலும் இந்த மந்திரமானது அனைத்துவிதமான பிரச்சனைகளையும் போக்கி, மன கவலைகளை நீக்கி அமைதி தரும்.
ரிஷபம்
ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் ஓம் உபேந்திரா நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு கிருஷ்ணரின் அருளைப் பெற உதவுவதோடு, நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஓம் அனந்தாய நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இது மன கவலைகள் மற்றும் கஷ்டங்களைப் போக்கி, கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெற உதவும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஓம் தயாநிதியை நமஹ என்ற கிருஷ்ண மந்திரத்தை சொல்ல வேண்டும். இது கிருஷ்ணனின் அருளைப் பெற உதவுவதோடு, அனைத்திலும் வெற்றி காண உதவி புரியும்.
சிம்மம்
சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணனை மகிழ்விக்கவும், அவரது பரிபூர்ண அருளைப் பெறவும் ஓம் ஜோதிராதித்ய நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரமானது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், கிருஷ்ணனின் அருளைப் பெறவும் ஓம் அனிருத்தாய நமஹ என்ற கிருஷ்ண மந்திரத்தை சொல்ல வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கிருஷ்ண பகவானின் அருளைப் பெறவும், செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழவும் ஓம் ஹிரண்யகர்பாய நமஹ என்ற கிருஷ்ண மந்திரத்தை கூற வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் கிருஷ்ணனின் ஆசீர்வாதத்தைப் பெற ஓம் ஓம் அச்யுதாய நமஹ என்ற கிருஷ்ணனின் மந்திரத்தை கிருஷ்ண ஜெணந்தி நாளில் சொல்ல வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை மாயமாய் மறையும்.
தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவும், கிருஷ்ணனின் ஆசீர்வாதங்களைப் பெறவும் கிருஷ்ண ஜெயந்தி நாளில் ஓம் ஜகத்குர்வே நமஹ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணனின் அருளைப் பெற ஓம் அஜயாய நமஹ என்ற கிருஷ்ண மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இந்த மந்திரத்தை கிருஷ்ண ஜெயந்தி நாளில் மனதில் நாள் முழுவதும் கூறுவதன் மூலம், கிருஷ்ணனின் கருணையைப் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஓம் அனாதியை நமஹ என்ற கிருஷ்ணருக்குரிய மந்திரத்தை கூறுவதன் மூலம், கிருஷ்ணனின் ஆசியையும், வெற்றியையும், வளமான வாழ்க்கையையும் வாழலாம்.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஓம் ஜகன்னாதாய நமஹ என்ற கிருஷ்ணரின் மந்திரத்தை எப்போதும் சொல்ல வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications