100 ஆண்டுகளுக்கு பின் குரு சுக்கிரனால் உருவான சமசப்தம யோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..

Samsaptak Rajyog After 100 Years: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அந்த வகையில் குரு மற்றும் சுக்கிரன் சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். சுக்கிரன் மற்றும் குருவால் உருவாகியுள்ள சமசப்தம யோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இதனால் இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.

Jupiter Venus Made Samsaptak Rajyog After 100 Years: These Zodiac Signs Luck Will Shine In Tamil

குறிப்பாக இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொட்ட காரியத்தில் எல்லாம் வெற்றி கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சமசப்தம யோகமானது அற்புதமான பலன்களை வழங்கும். ஏனெனில் சுக்கிரன் 11 ஆவது வீட்டிலும், குரு 5 ஆவது வீட்டிலும் உள்ளனர். இதனால் புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.

திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வணிகர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பைப் பெறலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சமசப்தம யோகமானது சிறப்பான பலன்களை அள்ளித் தரும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். சௌகரியங்களும், வசதிகளும் அதிகரிக்கும். முக்கியமாக உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும் மற்றும் அவர்களால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சமசப்தம யோகமானது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். சுக்கிரன் 4 ஆவது வீட்டில் இருப்பதால், வசதிகள் பெருகும். புதிய வீடு, சொத்து மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். சுக்கிரனின் அருளால் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, December 6, 2023, 8:49 [IST]
Desktop Bottom Promotion