Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
குரு நட்சத்திர பெயர்ச்சியால் இன்னும் 5 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் உயரப் போகுது...
Jupiter Transit in Rohini Nakshatra On June 2024: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். கிரகங்களில் குரு மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. ஒருவர் நல்ல செழிப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், அந்நபரின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றுவார். அந்த வகையில் தற்போது குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதி குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழையவுள்ளார். குரு ரோகிணி நட்சத்திரத்தில் நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.

ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அதில் 4 ஆவது நட்சத்திரமாக ரோகிணி கருதப்படுகிறது. ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை இருப்பார். குரு சந்திரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் சற்று சிறப்பாக இருக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு நட்சத்திர பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதுவும் புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் ரகசிய எதிரிகள் இக்காலத்தில் யாரென்று உங்களுக்கு தெரிய வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகளும், செல்வமும் பெருகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மிதுனம்
குரு நட்சத்திர பெயர்ச்சியானது மிதுன ராசிக்கார்ர்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்கவுள்ளது. புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வாய்ப்புக்கள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். புதிய வேலைகளைத் தொடங்கினால், அதில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். மன உளைச்சலால் இதுவரை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட காலமாக வேலை தேடி கிடைக்காமல் இருந்தால், இந்த குரு நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும்.
கடகம்
குரு நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. அபரிமிதமான செல்வத்தைப் பெறக்கூடும். உடன் பிறந்தவர்களுடன் இனிமையாக பொழுதைக் கழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைப்பதால், வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்களின் பிள்ளைகள் முன்னேறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications