Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
குரு ராகு சேர்க்கை முடிவு: இன்று முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் நீங்கி, கையில் பணம் அதிகம் சேரப்போகுது...
Jupiter Rahu Conjunction Ends: வேத ஜோதிடத்தின் படி, நிழல் கிரகங்களான ராகு, கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி இன்று நிகழ்ந்துள்ளது. 18 மாதங்களுக்கு பின் ராகுவும், கேதுவும் ராசியை மாற்றியுள்ளனர். இதுவரை ராகு மேஷ ராசிலும், கேது துலாம் ராசியில் பயணித்து வந்தனர். அதுவும் ராகு மேஷ ராசியில் குரு பகவானுடன் சேர்ந்து குரு சண்டாள யோகத்தை உருவாக்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று நிகழ்ந்துள்ள ராகு கேது பெயர்ச்சியால், குரு சண்டாள யோகம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த யோகத்தால் இதுவரை பல ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான பண பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். சிலர் எதிர்பாராத அளவில் கஷ்டப்பட்டிருக்கலாம்.

இப்படிப்பட்ட யோகம் முடிவுக்கு வந்துள்ளதால், இன்று முதல் கஷ்டப்பட்டு வந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது. கையில் பணம் அதிகம் சேரப் போகிறது மற்றும் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தை காணப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு சண்டாள யோகம் முடிவு பெறுவதால், இன்று முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்குகிறது. இதுவரை திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இனிமேல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். கூட்டு தொழிலில் நல்ல பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
மிதுனம்
குரு சண்டாள யோகம் முடிவடைவதால், இன்று முதல் மிதுன ராசிக்காரர்களுக்கு வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். இதுவரை போதுமான வருமானத்தைப் பெற முடியாமல் இருந்தவர்களுக்கு, வருமானத்தில் உயர்வு ஏற்படலாம்.
தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான சிறப்பான பல வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, லாட்டரியில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி
குரு சண்டாள யோகம் முடிவடைவதால், கன்னி ராசிக்காரர்கள் இன்று முதல் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலர் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள்.
நிதி ரீதியாக, பண வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். கையில் பணம் அதிகம் புரளும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலைகளை தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம. சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications