Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
12 ஆண்டுகளுக்கு பின் குரு கேதுவால் உருவாகும் நவபஞ்ச யோகம்: மே முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது!
Jupiter Ketu Will Make Navpancham Yog 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, சுப மற்றும் அசுப யோங்களுடன், ராஜயோகத்தையும் உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தேவர்களின் குருவான குரு பகவான் மே மாதம் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். அதே வேளையில் நிழல் கிரகமான கேது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இதனால் இவ்விரு கிரகங்களின் நிலைகளினால் நவபஞ்ச யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் இவ்விரு கிரகங்களால் உருவாகிறது.

இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவதோடு, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகமானது அற்புதமான பலன்களை வாரி வழங்கவுள்ளது. முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறப் போகிறது. வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவுள்ளது. தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரக்கூடியதாக இருக்கும். பணிபுரிபவர்கள் புதிய வேலையைத் தேடினால் நல்ல வேலை கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகமானது சாதகமான பலன்களை வழங்கும். குறிப்பாக வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். இந்த நட்பால் பல நன்மைகளைப் பெறும் வாய்ப்புள்ளது. முக்கியமாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகமானது அதிர்ஷ்டத்தை வழங்கப் போகிறது. நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்குகளால் அலைந்து கொண்டிருந்தால், அது இந்த யோக காலத்தில் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மே மாதம் முதல் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆளுமையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம் ஆதரவாக இருப்பதால், அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications