Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
குரு வக்ர நிவர்த்தியடைவதால் 2024 ஆம் ஆண்டு இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது..
Jupiter Direct In Aries: நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இந்த குரு பகவான் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைந்தார். மேஷ ராசியில் நுழைந்த குரு பகவான் சில மாதங்களில் மேஷ ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கத் தொடங்கினார்.
வக்ர நிலையில் உள்ள குரு பகவான் 2023 ஆம் ஆண்டின் இறுதியில், அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவானால் 2024 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக, அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது.

குரு வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் குரு பகவானின் அருளைப் பெற்று, வாழ்வில் பலவிதமான நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட முடியும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கம். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏராளமான லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பணப் பிரச்சனைகள் நீங்கும். கடனில் இருந்து முழுமையாக விடுபடுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுபெறும். பணியிடத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
