Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ஜப்பான் பாபா வாங்காவின் ஆபத்தான கணிப்பு 25 நாட்களுக்கு பின் பலித்துள்ளது... 44 நாடுகள் ஆபத்தில் இருக்காம்...!
சமீபத்தில் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது பசிபிக் பெருங்கடல் பகுதியில் 44 நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் அனுப்பும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானிய பாபா வாங்கா என்று அழைக்கப்படும் மங்கா கலைஞரும் தீர்க்கதரிசியுமான ரியோ டாட்சுகி, பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்ட கணிப்பில் இந்த பேரழிவை துல்லியமாக கணித்திருக்கலாம் என்று பலரும் நம்புகின்றனர்.

ஜப்பான் பாபா வாங்காவின் கணிப்பு
ஜப்பானின் ஹொக்கைடோ தீவு வரை சுனாமி பேரலைகளை ஏற்படுத்திய கம்சட்கா பூகம்பம், 1999 ஆம் ஆண்டு ரியோ டாட்சுகியால் வெளியிடப்பட்ட வாட்டாஷி கா மிதா மிராய் (நான் பார்த்த எதிர்காலம்) என்ற கணிப்பில் குறிப்பிட்டுள்ள சில வாரங்களுக்குப் பிறகு நிகழ்ந்ததுள்ளது சமூக வலைதளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதனால்தான் அவர் புதிய பாபா வாங்கா என்று அழைக்கப்படுகிறார். அவரது கணிப்பில் அவர் ஜூலை 2025 இல் இதேபோன்ற பேரழிவு நிகழும் என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த கால கணிப்புகள்
ரஷ்ய நிலநடுக்கம் ரியோ டாட்சுகியின் தீர்க்கதரிசனங்கள் மீது மீண்டும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. ஏனெனில் அவரை பின்தொடர்பவர்களில் பலர், இளவரசி டயானா மற்றும் ஃப்ரெடி மெர்குரியின் இறப்புகள், கோவிட்-19 வெடிப்பு, மார்ச் 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் ஜப்பானில் சுனாமி உள்ளிட்ட முக்கிய உலக நிகழ்வுகளை டாட்சுகி துல்லியமாக கணித்துள்ளார் என்று நம்புகிறார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், டாட்சுகியின் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள், ஜூலை மாதம் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் அவர் கணித்ததாகக் கூறினர், ஆனால் அன்று அவர் குறிப்பிட்டது போல எதுவும் நடக்கவில்லை, இதனால் அவரது கணிப்புகள் ஏமாற்று வேலைகள் என்றும், இதுபோன்ற தீர்க்க தரிசனங்களை நம்ப வேண்டாமென்றும் ஒரு சாரார் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
ரியோ டாட்சுகி பற்றி சமூக வலைத்தளங்களில் என்ன பேசுகிறார்கள்?
ரியோ டாட்சுகியின் ஜூலை மாத தீர்க்கதரிசனங்கள் ஏமாற்று வேலை என்று கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேசியா, ஜப்பான் முதல் ஆஸ்திரேலியா வரை உலகெங்கிலும் உள்ள 44 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, இதன் மூலம் ரியோ டாட்சுகி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சமீபத்திய நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கைகளுடன் தட்சுகியின் தீர்க்கதரிசனத்தை பலர் இணைப்பதாக சமூக ஊடகங்கள் பரபரப்பாக உள்ளன. ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, ஜப்பானின் முழு கடற்கரைக்கும் 3 அடி சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, 2011 நிலநடுக்கத்தை முன்னறிவித்த ரியோ டாட்சுகி, அவரது தீர்க்கதரிசனம் மூலம், மீண்டும் அதைச் செய்துள்ளார்! ஜப்பான், பாதுகாப்பாக இருங்கள்," என்று சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்படுகிறது.
கம்சட்கா நிலநடுக்கம்
புதன்கிழமை ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. USGS அறிக்கையின் படி, 19.3 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்கின் கிழக்கு-தென்கிழக்கில் 25 கிமீ தொலைவில் அவாச்சா விரிகுடாவின் கடற்கரையில் மையமாக இருந்தது.
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவைக் காட்டின, நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின, அதே நேரத்தில் பல இடங்களில் உள்கட்டமைப்பு சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.



Click it and Unblock the Notifications
