Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்..
கடந்த 30 ஆண்டுகளில் ஜப்பானை தாக்கிய சில சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்!
Japan Earthquake: 2024 ஆம் ஆண்டில் நுழைந்து முழுமையாக மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு முன், இந்த ஆண்டு எவ்வளவு மோசமாக இருக்கப் போகிறது என்பதை உணர்த்தும் வகையில் ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதுவும் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு, அங்குள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் குறைந்தது 6 பேர் இந்த நிலநடுக்கத்தால் இறந்துள்ளனர்.

கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடு தான் ஜப்பான். இது வடமேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ளது. கடலால் சூழப்பட்டுள்ள ஜப்பானில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,000 நிலநடுக்கங்களை மக்கள் உணர்கின்றனர்.
2024 ஆம் ஆண்டின் முதல் நாளில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், அது மீண்டும் வாபஸ் பெறப்பட்டது. இப்போது கடந்த 30 ஆண்டுகளில் ஜப்பானில் பதிவான சில சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களைக் காண்போம்.
* 1995 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி மத்திய ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மேற்கு துறைமுக நகரமான கோபி (Kobe) நாசமானது. இந்த நிலநடுக்கம் தான் அந்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகவும் மோசமான நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கத்தால், சுமார் 6,400-க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் 100 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.
* 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி டோக்கியோவிற்கு வடக்கே சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள நைகாட்டா பகுதியில் சுமார் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 65 பேர் இறந்தனர் மற்றும் 3,000 பேர் பலத்த காயமடைந்தனர்.
* 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மட்டுமின்றி சுனாமியும் ஜப்பானைத் தாக்கியது. இதில் சுமார் 20,000 பேர் இறந்தனர் மற்றும் ஃபுகுஷிமாவில் உருகலை ஏற்படுத்தியது. முக்கியமாக இது மிகவும் மோசமான அணுசக்தி பேரழிவுக்கு வழிவகுத்தது.
* 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி ஜப்பானின் தெற்கு தீவில் உள்ள குமாடோட்டோவில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் சுமார் 220 பேர் இறந்தனர்.
* 2018 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று ஜப்பானின் இரண்டாவது பெரிய நகரமான ஒசாகாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 4 பேர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.
* அதே 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதி ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 7 பேர் இறந்தனர் மற்றும் அந்த நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. அப்போது 5.3 மில்லியன் மக்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
* 2021 ஆம் ஆண்டு பிப்ரவர் 13 ஆம் தேதி கிழக்கு ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா கடற்கரையில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்தனர் மற்றும் அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
* 2022 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி ஃபுகுஷிமா கடற்கரையில் மீண்டும் 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 2 பேர் இறந்தனர், 94 பேர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கமானது பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே மாதத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியை நினைவுபடுத்தியது.



Click it and Unblock the Notifications











