Latest Updates
-
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்த ஜப்பான்: உலக புகழ்பெற்ற இந்திய மாம்பழ வகைகளும்.. அவற்றின் பிறப்பிடமும்..
Japan Bans Indian Mangoes After 20 Years: சமீபத்தில் ஜப்பான் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகையான மாம்பழங்களுக்கு தடை விதித்துள்ளது. அதுவும் மாம்பழங்களைக் கிருமி நீக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் புகைமூட்டும் செயல்முறையிலும், அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டதன் காரணமாக இந்த தடையை விதித்துள்ளது. இந்த தடையால் முக்கியமான கோடை மாம்பழப் பருவத்தில் ஏற்றுமதியைப் பாதித்ததோடு, அல்போன்சோ, கேசர், லங்ரா மற்றும் பங்கனபள்ளி போன்ற உயர்தர இந்திய ரகங்களையும் பாதித்துள்ளது.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளில் விதிக்கப்பட்ட முதல் கட்டுப்பாடு இதுவாகும். முன்னதாக, பழ ஈக்கள் குறித்த அச்சம் காரணமாக ஜப்பான் இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதித்திருந்தது. ஆனால் அந்த தடை 2006 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது விதிக்கப்பட்ட தடையால் இந்திய மாம்பழ உற்பத்தியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியா உலகின் மிகப்பெரிய மாம்பழ உற்பத்தியாளராக அறியப்படுகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாம்பழ வகைகள் விளைவிக்கப்படுகின்றன. "பழங்களின் ராஜா" என்று அழைக்கப்படும் மாம்பழம், இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளது.
இந்தியாவில் மட்டும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் சில உலகளாவிய புகழைப் பெற்றுள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு மாம்பழ வகையும் அதன் தனித்துவமான சுவை, மணம் மற்றும் வரலாற்றைக் கொண்டுள்ளது. ஜப்பான் இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்த இந்த சூழலில், இந்தியாவின் பிரபலமான சில மாம்பழ வகைகள் மற்றும் அவை தோன்றிய பகுதிகள் குறித்து தெரிந்து கொள்வது சற்று சுவாரஸ்யமானதாக இருக்கும்.
1. அல்போன்சசோ
இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் விலை உயர்ந்த மாம்பழ வகை என்றால் அது அல்போன்சோ மாம்பழம் தான். இந்த மாம்பழம் மகாராஷ்டிராவின் ரத்னகிரி, தேவ்கட் மற்றும் சிந்துதுர்க் பகுதிகள் போன்ற பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றன. இந்த மாம்பழம் சிவப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கும் மற்றும் நல்ல நறுமணத்துடனும், மிகுந்த இனிப்புச் சுவையுடனும் இருக்கும். இந்த மாம்பழமானது ஜப்பானைத் தவிர, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
2. பங்கனப்பள்ளி
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மாம்பழம் தான் பங்கனப்பள்ளி. இது ஆந்திர பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இந்த மாம்பழம் நீள வடிவத்திலும், மஞ்சள் நிறத்திலும், அதிக சதைப்பகுதியுடன், இனிப்புச்சுவையைக் கொண்டிருக்கும்.
3. இமாம் பசந்த்
தென்னிந்தியாவின் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச எல்லைகளில் விளைவிக்கப்படக்கூடிய மாம்பழ வகை தான் இமாம் பசந்த். இந்த வகை மாம்பழம் தனித்துவமான நறுமணத்துடனும், அதிக இனிப்புச் சுவையுடனும் இருக்கும். இந்த மாம்பழத்தை "ஹிமாயத்" என்றும் அழைப்பர்.
4. மல்கோவா
தமிழகத்தில் மிகவும் பழமையான மாம்பழ வகைகளில் ஒன்றாகும். இதுவும் இந்த வகை மாம்பழம் தமிழ்நாட்டின் சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது. இந்த மாம்பழம் பெரிய அளவில், உருண்டையாக, இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும். இந்த வகை மாம்பழம் உள்நாட்டு சந்தையில் அதிக வரவேற்பைப் பெறுகிறது.
5. தசேரி
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான மாம்பழ வகை தான் தசேரி. இது உத்திர பிரதேசத்தின் மலிஹாபாத் என்னும் பகுதியில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இந்த வகை மாம்பழம் நீளமான வடிவத்தில், மென்மையான சதைப்பகுதி மற்றும் மிகுந்த நறுமணத்துடன் இருக்கும். இந்த மாம்பழமானது நூற்றாண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.
6. லங்க்ரா
வடஇந்தியாவில் பிரபலமான மற்றொரு மாம்பழ வகை தான் லங்க்ரா. இது உத்திர பிரதேசம் மற்றும் பீகார் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த மாம்பழம் பச்சை நிற தோலுடன், குறைவான நார் மற்றும் அதிக இனிப்புச் சுவையைக் கொண்டிருக்கும். இந்த வகை மாம்பழத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
7. கேசர்
இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றொரு மாம்பழம் தான் கேசர். இந்த வகை மாம்பழம் குஜராத்தின் ஜூனாகட் மாவட்டத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த மாம்பழம் ஆரஞ்சு நிற சதைப்பகுதியையும், அதிக இனிப்பு மற்றும் நல்ல நறுமணத்தைக் கொண்டிருக்கும். இந்த வகை மாம்பழம் தான் பழச்சாறுகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
8. ஹிம்சாகர்
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் பிரபலமான ஒரு மாம்பழ வகை தான் ஹிம்சாகர். இந்த வகை மாம்பழத்தில் நார் அதிகமாக இருக்காது. ஆனால் அதிக இனிப்புச் சுவையுடனும், சாறுத்தன்மை மிக்கதாகவும் இருக்கும். இந்த வகை மாம்பழம் இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் மிகவும் பிரபலமானது.
9. சௌசா
சௌசா என்னும் மாம்பழ வகை பீகார் மற்றும் உத்திர பிரதேச பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இந்த மாம்பழம் மிகவும் இனிப்புச் சுவையுடனும், அதிக சதைப் பகுதியைக் கொண்டிருக்கும். இந்த வகை மாம்பழம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாம்பழ வகையாகும்.
10. நீலம்
நீலம் என்னும் மாம்பழ வகையானது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா பகுதிகளில் பரவலாக விளையக்கூடியது. இந்த மாம்பழமானது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் தன்மைக்கு பெயர் பெற்றது. இது அளவில் சிறியதாகவும், நீள்வட்ட வடிவத்திலும் இருக்கும். இந்த பழம் நன்றாக பழுத்தவுடன் தங்கம் போன்ற மஞ்சள் நிறத்தைப் பெறும். இந்த வகை பழமும் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications