Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
IPL 2023: சூதாட்டம் முதல் பாலியல் துன்புறுத்தல் வரை IPL போட்டிகளில் நடந்த மோசமான சர்ச்சைகள்...!
இந்திய விளையாட்டு ரசிகர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஐபிஎல் தான். இந்தியன் பிரீமியர் லீக் உலகின் மிகவும் பிரபலமான டி20 லீக் ஆகும். இதில் எவ்வளவு பொழுதுபோக்குகள் உள்ளதோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் நிறைந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, ஏராளமான சர்ச்சைகள் இதனை சுற்றி வருகிறது.
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்று அழைக்கப்பட்டாலும், கிரிக்கெட் ஆடுகளத்திலேயே சர்ச்சை காட்சிகள் அரங்கேறியதை நாம் பார்திருப்போம். அண்டர்பிரஷர் கேமை விளையாடும்போது, வீரர்கள் தங்கள் நிதானத்தை இழந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். இதற்கு ஐபிஎல் போட்டிகளும் விதிவிலக்கல்ல. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து ஐபிஎல் போட்டிகளில் ஏற்பட்ட மோசமான சர்ச்சைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு சீசன் தடை விதிக்கப்பட்டது
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, தான் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தெரியாமல், மற்றொரு டீமின் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயன்றதால், ஐபிஎல்லில் விளையாட ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட தடை விதிக்கப்பட்டது
தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அனைத்து சக்திவாய்ந்த ஐபிஎல் நிர்வாகக் குழுவும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது மற்றும் குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தனே போன்ற லெஜண்ட்கள் உட்பட மொத்தம் 13 இலங்கை வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி சென்னையில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.
ராகுல் சர்மா மற்றும் வெய்ன் பார்னெல் "ரேவ் பார்ட்டியில்" பிடிபட்டனர்
புனே வாரியர்ஸின் இரண்டு வீரர்கள், ராகுல் சர்மா மற்றும் வெய்ன் பார்னெல் ஆகியோர் 2012 இல் மும்பையில் நடந்த ரேவ் பார்ட்டியில் போதைப்பொருள் உட்கொண்டதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். கிரிக்கெட் வீரர்கள், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த பல பிரபலமான நபர்களுடன் கைது செய்யப்பட்டனர், ஆனால் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
லூக் போமர்ஸ்பேக் ஒரு அமெரிக்கப் பெண்ணைத் துன்புறுத்தினார்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமான ஆஸ்திரேலிய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன், அடுத்த பெரிய ஐபிஎல் நட்சத்திரமாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டார். 2011-ல் நடந்த ஐபிஎல் சீசனில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் $50,000க்கு வாங்கப்பட்டார், ஆனால் அவர் அமெரிக்கப் பெண்ணைத் துன்புறுத்தியதற்காக டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
சவுரவ் கங்குலி கொல்கத்தா அணியால் வெளியேற்றப்பட்டார்
ஐபிஎல் முதல் மூன்று சீசன்களில் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலியை வெளியேற்றியது ஐபிஎல்-ல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, இது இந்தியா முழுவதும் உள்ள கங்குலி ரசிகர்களை கோபப்படுத்தியது.
KKR இன் உரிமையாளரும் பாலிவுட் ஹீரோவுமான ஷாருக்கான், கங்குலியை அணியில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்தார். இருப்பினும், முன்னாள் இந்திய கேப்டன் நான்காவது சீசனில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார்.
வான்கடேயில் ஷாருக்கான் போட்ட பெரிய சண்டை
சர்ச்சையையும், ஷாருக்கானையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. சமீபத்தில் பதான் பட வெளியீட்டிலேயே நாம் அதனை பார்த்திருப்போம். 2012 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் பாதுகாப்புப் பணியாளர்களுடன் ஷாருக்கானுக்கு மோதல் ஏற்பட்டது. அவர் பாதுகாப்பு ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஷாருக் மைதானத்திற்குள் நுழைய தடை விதித்தது.
ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் சண்டை
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் சம்பந்தப்பட்ட பிரச்சினை இன்றும் பிரபலமானது. ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை மைதானத்திலேயே அறைந்தது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. உலகம் முழுவதும் காட்டப்பட்ட இந்த சம்பவம், ஐபிஎல்-ல் மட்டுமில்லாமல் விளையாட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சூதாட்ட சர்ச்சை
ஐபிஎல் தொடரில், ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா மற்றும் அங்கீத் சவான் ஆகிய மூன்று இந்திய வீரர்களை டெல்லி போலீசார் பிடித்தபோது, ஸ்போர்ட் பிக்சிங் மீண்டும் தலை தூக்கியது. மும்பை காவல்துறையின் விசாரணைக்கு பின்னர் குருநாத் மெய்யப்பன் கைதுக்கு வழிவகுத்தது. அவர்தான் சென்னை அணியின் ஓனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாக சிஎஸ்கே அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications

