மனித வரலாற்றிலேயே அதிக உயிர்களை கொன்ற ஆயுதம் இதுதானாம்... நாம நினைக்கிற மாதிரி அது அணுகுண்டு இல்ல...!

உலகிலேயே மிகவும் ஆபத்தான ஆயுதம் என்றால் அனைவரின் நினைவிற்கும் முதல் வருவது அணுகுண்டுதான். ஏனெனில் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஜப்பான் மீது நடத்திய அணுகுண்டு தாக்குதலின் விளைவுகள் இன்றுவரை தொடர்கிறது, மேலும் 2 லட்சத்திற்கும் லெமன் மக்கள் இந்த தாக்குதலில் இறந்தனர். ஆனால் உலகின் மிகவும் ஆபத்தான ஆயுதம் என்றால் அது நிச்சயம் அணுகுண்டு இல்லை.

துப்பாக்கி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது AK-47 தான். சமீபத்தில் வெளிவந்த KGF-2 படத்தில் ஹீரோ இந்த துப்பாக்கியை வாங்கும் சீன் உச்சக்கட்ட மாஸாக இருக்கும். துப்பாக்கிகளுக்கு அடையாளமாகவே மாறிவிட்ட இந்த துப்பாக்கி உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது.

Interesting Facts about the AK-47 in Tamil

இது நம்பமுடியாத அளவிற்கு நீடித்த உழைக்கக் கூடியது, குறைந்தபட்ச பராமரிப்பு தேவைப்படுகிறது, எளிதில் பாகங்கள் கிடைக்கிறது, மேலும் போரில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இது உலகை ஆள்கிறது. இந்த பதிவில் உலகின் மிகவும் ஆபத்தான இந்த ஆயுதம் பற்றிய சுவராஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

மனித வரலாற்றின் மோசமான ஆயுதம்

உலகிலேயே அதிக மக்களைக் கொன்ற ஆயுதமென்றால் அது AK-47 துப்பாக்கிதான். உலகம் தோன்றிய கடந்த சில ஆயிரமாண்டுகளில் ஈட்டிகள் மற்றும் அம்புகள் மூலம் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கையை நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் நவீன வரலாற்றில், AK-47 ஐ விட அதிகமான மக்களைக் கொன்ற ஆயுதம் எதுவுமில்லை.

1940-களின் பிற்பகுதியில் இந்த ஆயுதம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு AK-47 துப்பாக்கியால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் உள்ளது. ஒப்பிடுகையில், இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட அணுகுண்டுகள் 200,000 மக்களைக் கொன்றன. ஆண்டுதோறும் பீரங்கி குண்டுகள், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் போன்ற அனைத்தையும் விட AK-47 துப்பாக்கி அதிகமான மக்களைக் கொன்று வருகிறது.

சதாம் உசேன் தங்க முலாம் பூசப்பட்ட AK-47 வைத்திருந்தார்

2003 ஈராக் போருக்குப் பிறகு, அமெரிக்க வீரர்கள் சதாம் உசேனின் புதையலைக் கண்டுபிடித்தனர். 1.2 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள புதையல்களை சதாம் ஹுசைன் பதுக்கி வைத்திருந்தார். தங்கக் கழிப்பறைகள், தங்க ப்ரஷ்கள், ஆடம்பரமான கார்கள் போன்றவை சதாம் உசேனிடம் இருந்தது. ஆனால் தங்கம் மற்றும் வைரங்கள் மீதான அவரது காதல் அவரது குளியலறையில் மட்டும் இல்லை. அவர் கலெக்ஷனில் பல தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கிகள் இருந்தன. அதில் பல AK-47 துப்பாக்கிகளும் இருந்தது.

18 ஆண்டுகள் புதைக்கப்பட்ட துப்பாக்கி வேலை செய்தது

மொசாம்பிக்கில், 18 ஆண்டுகளாக புதைக்கப்பட்டிருந்த ஆயுதக் களஞ்சியத்தை அரசாங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த ஆயுதங்களில் பல AK-47 கள் இருந்தன. இந்த ஆயுதங்கள் இன்னும் செயல்படுகிறதா இல்லையா என்பதை சோதிக்க முடிவு செய்தனர். குறிப்பாக துருப்பிடித்த AK-47-ஐ எடுத்துக்கொண்டு, அதில் ஒரு சிறிய மோட்டார் எண்ணெயை ஊற்றினர். AK ஆனது எந்த பிரச்சனையும் இல்லாமல் பல ரவுண்டுகள் சுட்டது.

பல தேசத்தின் கொடிகளில் AK-47 உள்ளது

AK-47-யை தங்கள் கொடியில் பயன்படுத்தும் சில நாடுகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள் உள்ளன. ஒரு கொடியில் ஆயுதத்தை பயன்படுத்துவது புதிதல்ல ஏனெனில் கென்யா கொடியில் ஈட்டிகள், சவுதி அரேபியாவின் கொடியில் வாள், அங்கோலா கொடியில் கத்தி, வர்ஜீனியா கொடியில் ஈட்டி போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நவீன ஆயுதம் கொடியில் பயன்படுத்துவது நவீன உலகில் ஒரு தனித்துவமான கருத்தாகும்.

மொசாம்பிக் அதன் கொடியில் பயோனெட்-தயாரிக்கப்பட்ட AK-47 ஐக் கொண்டுள்ளது, மேலும் ஜிம்பாப்வே கோட் ஆஃப் ஆர்ம்ஸ் பின்னணியில் மறைந்துள்ளது.

கலாஷ்னிகோவ் ஆயுதமாக வடிவமைக்கப்படவில்லை

விவசாய உபகரணங்களை உருவாக்க விரும்பிய ஏழை விவசாயி ஒருவரின் மகனால் AK-47 உருவாக்கப்பட்டது. ஆனால் ரஷ்ய விவசாயிகள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் கூட்டுமயமாக்கலுடன் அது மாறியது. 1938 இல் ஒரு டேங்கர் குழுவின் ஒரு பகுதியாக இராணுவத்தில் சேர்ந்த பிறகு, 1941 இல் பிரையன்ஸ்க் போரின் போது அவரது டேங்கர் நாஜி ஷெல் மூலம் தாக்கப்பட்டது, இதனால் அவருக்கு தோளில் காயம் ஏற்பட்டது.

கலாஷ்னிகோவ் ஆறு மாதங்கள் சோவியத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொது, ​​காயமடைந்த மற்ற வீரர்களின் தற்போதைய துப்பாக்கிகள் எதிரி படைகளுடன் ஒப்பிடும்போது எப்படி வலிமையற்றதாக இருக்கிறது என்று பலமுறை புலம்புவதைக் கேட்டார். அதனால் அவர் உலக வரலாற்றை மாற்றப்போகும் AK-47-யை உருவாக்கினார்.

அமெரிக்க பொதுமக்களிடம் அதிக AK-47 உள்ளது

2012 இல் அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை மிகவும் அதிகமாக இருந்தது, மேலும் இந்த விற்பனையில் அதிக எண்ணிக்கையில் ஏகே-47 ரக துப்பாக்கிகள் இருந்தன. இந்த ஆண்டில் ரஷ்ய இராணுவம் மற்றும் காவல்துறையை விட அதிகமான AK-47 களை அமெரிக்க பொதுமக்கள் வாங்கியுள்ளனர்.

அமெரிக்கர்கள் ரஷ்யர்களை விட அதிகமாக வாங்குவதற்கு ஒரு காரணம், ரஷ்யர்கள் தொடர்ந்து புதிய ஆயுதங்களை உருவாக்கி வருகின்றனர்.

பூமியில் 70 பேருக்கு ஒரு AK-47 துப்பாக்கி உள்ளது

இந்த துப்பாக்கியின் மலிவான உற்பத்திச் செலவுதான் இந்த துப்பாக்கியை அனைவரும் விரும்புவதற்கு முக்கியக் காரணமாகும். 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில், இராணுவ தரம் வாய்ந்த AK-47 சுமார் $30க்கு விற்கிறது. மோதல் காலங்களில் அந்த மலிவான விலையும், இந்த துப்பாக்கிக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பராமரிப்பும் AK-47 ஐ மிகவும் எளிதான ஆயுதமாக மாற்றுகிறது.

Desktop Bottom Promotion