Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இந்தியாவின் மூவர்ணக்கொடி உருவானக்கதை பற்றி தெரியுமா?
உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த கொடி உள்ளது. கொடி என்பது ஒரு சுதந்திர நாட்டின் சின்னமாகும்... 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தற்போதுள்ள கொடி உருவாக்கப்பட்டது.. அதாவது ஜூலை22ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு அன்று நடைபெற்ற அரசியலமைப்புச் சபையின் கூட்டத்தில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு முன்பாகவே இந்த கொடி முதன் முதலாக, முதல் இந்திய தேசியக் கொடி ஆகஸ்ட் 7, 1906 அன்று கொல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. கொடி சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று முக்கிய வண்ணங்களைக் கொண்டிருந்தது.
அதன் பின்னர் ஏப்ரல் மாதம் 1921 இல், மகாத்மா காந்தி இந்தியக் கொடியின் அவசியத்தைப் பற்றி முதன் முதலாக எழுதினார். அதில் மகாத்மா காந்தி ஒரு மூவர்ண கொடியில் நடுவில் நூற்புச் சக்கரத்தைச் சேர்க்குமாறு வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு சிவப்பு, பச்சை ஆகிய இரு வர்ணங்களைக் கொண்ட ஒரு கொடியை உருவாக்கினார். அத்தகைய சிறப்பு வரலாற்றைக் கொண்ட இந்த இந்திய தேசியக் கொடி உருவான கதை மற்றும் சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

1.தேசியக் கொடிக்கு இறுதியாக வடிவம் கொடுத்தவர் யார்?
1904 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் தேசியக் கொடியை சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா வடிவமைத்தார். இன்று நாம் பயன்படுத்தும் இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா. இவர் ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ஆரம்பகால இந்திய தேசியக் கொடியின் அடிப்படையிலான கொடியை வடிவமைத்தவர்.. அவர் ஒரு விரிவுரையாளர் , எழுத்தாளர், புவியியலாளர் , கல்வியாளர், வேளாண்மையாளர் மற்றும் பலமொழியாளர் ஆவார்.. காந்தி முதன்முதலில் 1921 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு கொடியை முன்மொழிந்தார்.. பின்னர் 1931-ல் மூவர்ணக் கொடியை நமது தேசியக் கொடியாக ஏற்று ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கொடி, தற்போதுள்ள கொடி, தேசியக் கொடியின் வடிவமைப்பு 22 ஜூலை 1947 அன்று இந்திய அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2. தேசியக் கொடி அதிகாரப்பூர்வமாக ஏற்றப்பட்டது எப்போது?
ஜூலை 22, 1947 அன்று, இந்திய தேசியக் கொடி அதிகாரப்பூர்வமாக ஏற்றப்பட்டது. அதன் கோடுகள் குங்குமப்பூ-வெள்ளை-பச்சை நிறமாகவே இருந்தன, ஆனால் சுழலும் சக்கரம் நீலசக்கரத்தால் மாற்றப்பட்டது - தர்ம சக்கரம் ("சட்டத்தின் சக்கரம்")
3. தேசிய கொடியில் உள்ள நிறம் எதை குறிக்கிறது?
இந்திய தேசியக் கொடியில் உள்ள காவி நிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. வெள்ளை நிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.
4. முதல் இந்திய தேசியக் கொடி எங்கு உள்ளது?
முதல் இந்திய தேசியக் கொடி ஆகஸ்ட் 15, 1947 அன்று ஏற்றப்பட்டது, செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
5. இந்திய தேசியக் கொடியை யார் ஏற்றுவார்கள்?
சுதந்திர தினத்தன்று பிரதமரால் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. அது கீழிருந்து மேலே இழுக்கப்பட்டு பின்னர் கட்டப்படுகிறது. மறுபுறம் குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவரால் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது...
6. நமது தேசிய கொடியை வடிவமைத்த இஸ்லாமிய பெண் யார்?
சுரையா தியாப்ஜி (Surayya Tyabji - 1919) பிரித்தானியாவின் இந்தியாவின், ஐதராபாத்தில் (ஆந்திரா, இப்போது தெலுங்கானாவின் தலைநகரம்) 1919 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிரபல வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளரும், இந்திய தேசிய காங்கிரசின் முஸ்லிம் தலைவரும் ஆன பத்ருதின் தியாப்ஜியின் மனைவியாவார்.
7. இந்தியக் கொடியில் ஏன் 24 ஆரங்கள் உள்ளன?
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜெந்திர பிரசாத் அவர்கள் இந்தியக்கொடியை வடிவமைக்க ஒரு குழுவினை அமைத்து 22 ஜூலை 1947 அன்று இந்தியக் கொடியில் நடுவிலுள்ள கைராட்டைகளுக்கு பதிலாக 24 கோல்களை கொண்ட அசோகச் சக்கரத்தை இடம்பெறசெய்தனர். அச்சக்கரம் தர்மத்தையும் நீதியையும் குறிக்கிறது .
8. இந்திய தேசிய கொடியின் நீளம் அகலத்தின் விகிதம் என்ன?
இந்தியாவின் கொடி குறித்த சட்டத்தின் படி 1.3 மற்றும் 1.4-ன்படி தேசியக்கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும். இந்தக் கொடி எந்த அளவினதாகவும் இருக்கலாம். ஆனால், தேசியக் கொடியின் நீளம் உயரம் (அகலம்) விகிதம் 3:2 என்பதாக இருக்க வேண்டும்
9. தேசியக் கொடி முதன் முதலாக ஏற்றப்பட்டது எங்கே?
அகிம்சை முறையின் மூலம் போராடிப் பெற்ற சுதந்திரத்தை இந்திய மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் 'ஜாக்' கொடி இறக்கப்பட்டு, கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் முதன்முதலாக இந்திய நாட்டின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
10. இந்திய தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் நிறுவனம் எது?
இந்திய தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாக நம் நாட்டில் தயாரிக்கும் ஒரே ஒரு ஃபாக்டரி மட்டுமே உள்ளது. அது கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பெங்கேரி என்ற கிராமத்தில் உள்ள 'கர்நாடக காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கா' (KKGSS) என்ற இடத்தில் அமைத்துள்ள தொழிற்சாலையில் மட்டுமே இந்திய கொடிகள் தயாரிக்கப்படுகின்றன..
11. தேசியக் கொடி ஏற்றும் போது பாடப்படும் தேசிய கீதம் எப்போது இயற்றப்பட்டது?
ரவீந்திரநாத் தாகூர் 1911 இல் 'பரோதோ பாக்யோ பிதாதா' பாடலை இயற்றினார், பின்னர் அது 'ஜன கன மன' என மறுபெயரிடப்பட்டது.
12. மக்களும் தேசிய கொடியை ஏற்ற அனுமதி பெற்றது எப்போது?
முன்னர் எல்லாம் மிகவும் முக்கிய தருணம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர, இந்திய குடிமக்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை . தொழில் அதிபர் நவீன் ஜிண்டால் ஒரு தசாப்த கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 23, 2004 அன்று உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பில் மக்களும் எல்லா நிகழ்வுகளில் போதும் கோடி ஏற்றலாம் என்ற அனுமதி பெற்றார்.
12. இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை தேசிய கொடி ஏற்றுவது ஆனது எப்போது?
2004 இல், உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் 19(1) (a) பிரிவின் பொருளின்படி மரியாதையுடனும் கண்ணியத்துடனும் சுதந்திரமாக தேசியக் கொடியை பறக்கவிடுவதற்கான உரிமை இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை என்று அறிவித்தது.
13. எந்தெந்த நாடுகள் சுதந்திர தினத்தை இந்தியாவுடன் கொண்டாடுகின்றன..?
ஐந்து நாடுகள் தங்கள் சுதந்திர தினத்தை இந்தியாவுடன் கொண்டாடுகின்றன. இந்த நாடுகளில் அடங்கும் - காங்கோ குடியரசு, தென் கொரியா, வட கொரியா, லிச்சென்ஸ்டைன் மற்றும் பஹ்ரைன்
14. அரை கம்பத்தில் ஏற்றும் போது என்ன செய்ய வேண்டும்?
இந்திய அரசின் உத்தரவு இல்லாத தருணங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கப்படக்கூடாது. அரைக் கம்பத்தில் பறக்க வேண்டிய போது முதலில் கம்பத்தினீ உச்சிவரை ஏற்றப்பட்டு அதன் பிறகு அரை கம்பம் வரையில் இறக்கப்பட வேண்டும். அதேபோல தேசியக் கொடியை இறக்கும்போதும், உச்சிவரை ஏற்றப்பட்டு பின்பு முழுவதும் இறக்கப்பட வேண்டும்..
15. ஏன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கின்றன தெரியுமா?
முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற பொறுப்பில் உள்ளவர்கள் மரிக்கும் போது அவர்களுக்கு மரியாதை செய்வதற்காக தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கச் செய்வது வழக்கம். இன்று உலகத்தில் பெரும்பாலான நாடுகள் இந்தப் பழக்கத்தைக் கடைபிடிக்கின்றன.
16. செய்ய வேண்டியவை
தேசியக் கொடியை கல்வி நிறுவனங்களில் (பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு முகாம்கள், சாரணர் முகாம்கள், முதலியன) கொடியின் மரியாதையை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றலாம். பள்ளிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சியின் போது உறுதிமொழியும் இடம் பெற்றுள்ளது.
ஒரு பொது, ஒரு தனியார் அமைப்பு அல்லது ஒரு கல்வி நிறுவனம் தேசியக் கொடியை அனைத்து நாட்களிலும், சந்தர்ப்பங்களிலும் ஏற்றலாம்.. மேலும் புதிய குறியீட்டின் பிரிவு 2 அனைத்து தனியார் குடிமக்களும் தங்கள் வளாகத்தில் கொடியை பறக்கவிடுவதற்கான உரிமையை ஏற்றுக்கொள்கிறது.
17. செய்யக்கூடாதவை
கொடியை வகுப்புவாத ஆதாயங்களுக்காகவோ, துணிமணிகளுக்காகவோ அல்லது ஆடைகளுக்காகவோ பயன்படுத்த முடியாது. முடிந்தவரை, வானிலையைப் பொருட்படுத்தாமல், சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை பறக்க வேண்டும். கொடியை வேண்டுமென்றே தரையையோ அல்லது தண்ணீரில் தடம் பிடிப்பதையோ அனுமதிக்க முடியாது.
வாகனங்கள், ரயில்கள், படகுகள் அல்லது விமானங்களின் பேட்டை, மேல் மற்றும் பக்கவாட்டு அல்லது பின்புறம் ஆகியவற்றில் அதை பறக்க விடக்கூடாது.. தேசியக் கொடியை விட உயரமாக வேறு எந்தக் கொடியும், பந்தலும் வைக்க கூடாது... மேலும், கொடியின் மீது அல்லது மேலே மலர்கள், மாலைகள் அல்லது சின்னங்கள் உள்ளிட்ட எந்தப் பொருளையும் வைக்கக் கூடாது.



Click it and Unblock the Notifications











