Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுடன் சேர்ந்து எந்தெந்த நாடுகள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன தெரியுமா?
Independence Day 2024: பல ஆண்டு போராட்டங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று பிரிட்டிஷ்காரரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் கிடைத்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் சுதந்திர தினத்தன்று உலகெங்கிலும் உள்ள சில நாடுகளும் தங்களின் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன என்பது தெரியுமா? ஆம், இந்தியா எப்படி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுந்திர தினத்தை கொண்டாடுகிறதோ, அதேப் போன்று உலகில் உள்ள சில நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. இப்போது அந்த நாடுகள் எவையென்பதைக் காண்போம்.

காங்கோ குடியரசு
காங்கோ பிராசாவில் என்று அழைக்கப்படும் காங்கோ குடியரசு, பிரான்சில் இருந்து 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. காங்கோ குடியரகூ மத்திய ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் கபோன், வடமேற்கில் கேமரூன், வடக்கே மத்திய ஆப்பிரிக்க குடியரசு, கிழக்கு மற்றும் தெற்கில் காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் தென்மேற்கில் அங்கோலா எக்ஸ்கிளேவ் கபிண்டா ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் 100 மைல் நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது.
லிச்சென்ஸ்டீன்
லிச்சென்ஸ்டீன் ஐரோப்பாவில் உள்ள சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவைச் சுற்றியுள்ள ஒரு சிறிய நாடு. இது ஜெர்மனிய ஆட்சியில் இருந்து 1866 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. இருந்தாலும், 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 வரை, சுதந்திர தினமாக அறிவிக்காமலேயே இருந்தது.
பஹ்ரைன்
பஹ்ரைன் பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய தீவு நாடு ஆகும். இந்நாடு 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஐக்கிய ராஜ்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இருப்பினும், ஷேக் இசா பின் சல்மான் அல் கலீஃபா அரியணை ஏறிய நாளைக் குறிக்கும் வகையில், அதிகாரப்பூர்வ தேசிய தின கொண்டாட்டங்கள் டிசம்பர் 16 ஆம் தேதி நடத்தப்படுகின்றன.
தென் கொரியா மற்றும் வட கொரியா
கொரியாவானது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜப்பானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. இதனால் வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடி வருகின்றன.
இவ்விரு நாடுகளும் கிழக்கு ஆசியாவில் உள்ள கொரிய தீபகற்பத்தில் உள்ளன. இதில் தென் கொரியா சந்தை பொருளாதாரம் கொண்ட ஜனநாயக நாடு. இந்த தென் கொரியாவின் தலைநகரம் சியோல் ஆகும். இது தென் கொரியாவில் உள்ள அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் மற்றும் உலகின் ஆறாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரம்.
வட கொரியா ஒரு சர்வாதிகார நாடு. இது எந்த ஒரு முக்கிய சர்வதேச அமைப்புகளிலும் உறுப்பினராக இல்லை. இந்த வடகொரியாவின் தலைநகரம் பியோங்யாங் ஆகும்.



Click it and Unblock the Notifications
