Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
சித்திரையில் வரக்கூடிய ஆன்மீக விஷேசங்கள் என்னென்ன? முழு விவரங்கள் இதோ..!
சித்திரை மாதத்தின் துவக்க நாள், தமிழர்களின் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. 60 ஆண்டுகளை கொண்ட தமிழ் ஆண்டுகளில் தற்போது நடைபெறும் சோபகிருது ஆண்டு நிறைவடைந்து வரும் ஏப்ரல் 14ம் தேதியான நாளை குரோதி எனப்படும் புதிய ஆண்டு பிறக்க உள்ளது. சித்திரை தமிழ் வருடத்தின் முதல் மாதம் ஆகும். இந்த மாதத்தின் தொடக்கம் சூரியனை வழிபடக்கூடிய சிறப்புமிக்க நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் அறுசுவை உணவு சமைத்து சாப்பிடுவது தமிழர்களின் வழக்கம். ஏப்ரல் 14ம் தேதி துவங்கி, மே 14ம் தேதி வரை இருக்கும் சித்திரை மாதத்தில் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா, சித்ரா பவுர்ணமி, ராம நவமி, அட்சய திரிதியை உள்ளிட்ட பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். வெயில் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரமும் துவங்கும் மாதமும் சித்திரை மாதம்தான்.

வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துவது போல நம் முன்னோர்கள் இந்த தமிழ் வருட பிறப்பு நாளில் வேப்பம் பூ பச்சடி செய்வது வழக்கம். இந்த வேப்பம் பூ உடன், வெல்லம், புளி, உள்ளிட்டவை சேர்த்து செய்யப்படும். இது இனிப்பு, கசப்பு, புளிப்புடன் இருக்கும். இது வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் விதமாக இருக்கின்றது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
சித்ரா பௌர்ணமி
பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுவது சித்ரா பௌர்ணமி. இந்த மாதத்தில் வரக்கூடிய 'சித்ரா பெளர்ணமி' மிக விசேஷமானது. 2023 சித்ரா பெளர்ணமி மே 05ஆம் தேதி வருகிறது. இந்த தினத்தில் எமலோகத்தில் நம் புண்ணிய - பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்ரகுப்தனை வழிபட்டு தான தர்மங்கள் செய்தால், அவரின் அருள் கிடைக்கும். அதனால் நீண்ட ஆயுளை பெறலாம்.
சித்திரை மாத திருவிழாக்கள்
சித்திரை திருவிழா என்றதும் நம் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா. கிட்டத்தட்ட 12 நாட்கள் நடக்கக் கூடிய இந்த திருவிழா, மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்டவையும், கள்ளழகர் எதிர்சேவை, வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும், தசாவதாரம் உள்ளிட்டவையும் அடங்கியது. இந்த திருவிழாவை காண மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். சைவ, வைணவ சமயத்தின் ஒற்றுமையைக் காட்டுவதாக இந்த திருவிழா அமைகிறது.
அட்சய திருதியை
எதை செய்தாலும் பல மடங்கு பலன் பெறக் கூடிய நாளாக அட்சய திருதியை பார்க்கப்படுகிறது. இந்த பொன்னான நாள் சித்திரை மாதத்தில்தான் வருகிறது. இந்த அட்சய திருதியை நாளில் செய்யக் கூடிய தானம், பித்ருக்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணம் உள்ளிட்டவை நமக்கு பல மடங்கு பலனை தர வல்லது.
சித்திரை மாதம் 2024 விசேஷ நாட்கள்
1. சித்திரை 01 - ஏப்ரல் 14 (ஞாயிறு) - தமிழ் புத்தாண்டு
2. சித்திரை 04 - ஏப்ரல் 17 (புதன்) - ஸ்ரீராம நவமி
3. சித்திரை 08 - ஏப்ரல் 21 (ஞாயிறு) - மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், மகாவீர் ஜெயந்தி
4. சித்திரை 09 - ஏப்ரல் 22 (திங்கள்) - கள்ளழகர் எதிர்சேவை
5. சித்திரை 10 - ஏப்ரல் 23 (செவ்வாய்) - சித்ரா பவுர்ணமி, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்
6. சித்திரை 18 - மே 01 - தொழிலாளர் தினம் ( புதன்)
7. சித்திரை 21 - மே 04 (சனி) - அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
8. சித்திரை 27 - மே 10 ( வெள்ளி) - அட்சய திரிதியை
9. தமிழ் புத்தாண்டு 2024 : சித்திரை திருநாள் வழிபாட்டை இந்த நேரத்தில் செய்தால் 16 செல்வங்களும் கிடைக்கும்
சித்திரை மாதம் 2024 விரத நாட்கள்
1. அமாவாசை - மே 07 (சித்திரை 24) செவ்வாய்
2. பவுர்ணமி - ஏப்ரல் 23 (சித்திரை 10) செவ்வாய்
3. கிருத்திகை - மே 08 (சித்திரை 25) புதன்
4. திருவோணம் - மே 01 (சித்திரை 18) புதன்
5. ஏகாதசி - ஏப்ரல் 19 (சித்திரை 06) வெள்ளி, மே 04 (சித்திரை 21) சனி
6. சஷ்டி - ஏப்ரல் 14 (சித்திரை 01) ஞாயிறு, ஏப்ரல் 29 (சித்திரை 16) திங்கள், மே 13 (சித்திரை 30) திங்கள்
7. சங்கடஹர சதுர்த்தி - ஏப்ரல் 27 (சித்திரை 14) சனி
8. சிவராத்திரி - மே 06 ( சித்திரை 23) திங்கள்
9. பிரதோஷம் - ஏப்ரல் 21 (சித்திரை 08) ஞாயிறு, மே 05 (சித்திரை 22) ஞாயிறு
10. சதுர்த்தி - மே 11 (சித்திரை 28) சனி



Click it and Unblock the Notifications