Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்தியாவில் மொத்தம் எத்தனை டோல்கேட்கள் உள்ளன? டோல்கேட் மூலம் தினமும் கிடைக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் எந்த தேசிய நெடுஞ்சாலை அல்லது விரைவு சாலையில் பயணிப்பதாக இருந்தாலும் நாம் பல சுங்கச் சாவடிகளை கடந்து சென்றுதான் ஆக வேண்டும். ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் நாம் வரி கட்டியே தீர வேண்டும், அதுதான் நம் விதி. இந்த சுங்கச் சாவடி கட்டடனம் அந்த சாலையில் நாம் பயணிப்பதற்கும், அந்த சாலையில் பயணிக்கும் போது குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கும் வசூலிக்கப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக சுங்கச்சாவடிகள் என்னென்ன சேவைகளை வழங்கக்கூடும் என்பதை பெரும்பாலான மக்கள் அறிவதில்லை, பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் அதற்குரிய சேவைகளும் வழங்கப்படுவதில்லை. ஆனால் சுங்கச்சாவடிகள் நம் நாட்டிற்க்கு பல ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டித்தருகிறது. இந்தியாவில் எத்தனை சுங்கச்சாவடிகள் உள்ளன, இந்த சுங்கச்சாவடிகளிலிருந்து ஒரு வருடத்திற்கு எவ்வளவு வருவாய் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த கேள்விக்களுக்கான பாட்டில்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சுங்கச்சாவடிகள்
இந்தியாவில் சாலைகளின் எண்ணிக்கையும், நெட்வொர்க்கும் வேகமாக அதிகரித்து வரும் அதே நிலையில், சுங்கச்சாவடிகலிங் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றன, மேலும் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மொத்தம் எத்தனை சுங்கச்சாவடிகள் உள்ளன?
இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்படி, ஜூன் 2025 நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 1,087 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த அனைத்து சுங்கச்சாவடிகளும் 1.5 லட்சம் கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக உள்ளது.
இந்த சுங்கச்சாவடிகளில் சுமார் 45,000 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நாட்டில் தற்போது உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், 457 சுங்கச்சாவடிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
சுங்கச்சாவடிகள் மூலம் ஈட்டும் வருமானம் எவ்வளவு?
சுங்கச்சாவடிகள் மூலம் ஈட்டும் வருமானத்தைப் பொறுத்தவரை, மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, இந்த 1,087 சுங்கச்சாவடிகள் ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.168.24 கோடி வருமானத்தை ஈட்டுகின்றன. அதாவது, சுங்கச்சாவடிகள் மூலம் ஒரு ஆண்டு ஈட்டும் வருமானம் என்பது சுமார் ரூ.61,408.15 கோடியாகும்.
இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் சுங்கச்சாவடி எது?
சுங்கச்சாவடிகள் வசூலிக்கும் அதிக கட்டணங்கள் பயணிகளுக்கு எப்போதுமே மக்களுக்கு ஒரு பெரிய கவலையாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் எந்த சுங்கச்சாவடி அதிக வருவாயை ஈட்டுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? குஜராத்தின் பரதனா கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடிதான் நாட்டிலேயே மிகவும் விலை உயர்ந்தது.
இந்த சுங்கச்சாவடி தேசிய தலைநகரான டெல்லியை நிதி தலைநகரான மும்பையுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48 இல் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் சுங்கச்சாவடி ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த சுங்கச்சாவடி ஆண்டுதோறும் சுமார் ரூ.400 கோடி வருமானத்தை ஈட்டுகிறது. இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் அறிக்கையின் படி, இந்தியாவில் 1,087 சுங்கச்சாவடிகள் உள்ளன, அவற்றில் 14 சுங்கச்சாவடிகள் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகின்றன.



Click it and Unblock the Notifications
