Latest Updates
-
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்..
15000 கோடி மதிப்புள்ள முகேஷ் அம்பானி வீட்டில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? அவங்க சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் யாரென்றால் முகேஷ் அம்பானிதான் என்று இந்தியாவில் அனைவருமே கூறுவார்கள். அந்த அளவிற்கு முகேஷ் அம்பானியும், அவரது குடும்பத்தினரும் இந்தியா முழுவதும் புகழ் பெற்றவர்களாக உள்ளனர். சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை 5000 கோடி செலவில் நடத்தி உலகையே ஆச்சரியப்படுத்தினர்.
முகேஷ் அம்பானி அவரது மனைவியான நீதா அம்பானி மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் உலகின் மிக ஆடம்பரமான வீடுகளில் ஒன்றான ஆன்டிலியாவில் வசிக்கிறார். 27 மாடிகளை கொண்ட இந்த பிரம்மாண்ட வீட்டின் 27 வது மாடியில் அம்பானி குடும்பத்தினர் அனைவரும் வசிக்கின்றனர். இந்த பிரம்மாண்ட மாளிகையின் மதிப்பு 15,000 கோடிக்கும் மேல் இருக்கும் கூறப்படுகிறது.

ஒரு சாதாரண பங்களாவை நிர்வகிக்கவே பல வேலையாட்கள் தேவைப்படும் சூழலில் இவ்வளவு பெரிய மாளிகையை நிர்வகிக்க உண்மையில் எத்தனை தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்று நினைத்து பார்க்கவே தலைசுற்றுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் வீட்டில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அதிகளவிலான பணியாளர்கள் அன்றாட நடவடிக்கைகளை சீராக நிர்வகிக்க உதவுகிறார்கள். தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கு அவர்கள் பெரும் நம்ப முடியாத சம்பளம் எவ்வளவு என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம்
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி அவரது வீட்டில் பணிபுரிபவர்களுக்கு சாதாரண மக்களால் நினைத்து பார்க்க முடியாத சம்பளத்தை வழங்குகிறார். அவர்கள் வாங்கும் சம்பளத்தைப் பற்றிப் பேசுகையில், 500 ஊழியர்களும் பெரிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிக்கு நிகரான சம்பளத்தைப் பெறுகிறார்கள், அவர்களில் பலர் மாதத்திற்கு ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.
அம்பானி இல்லத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெறும் வசதிகள்
அம்பானி இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நம்ப முடியாத சம்பளத்தை பெறுவதுடன், மருத்துவ காப்பீடு மற்றும் பிற சலுகைகள் போன்ற பெருநிறுவன ஊழியர்கள் பெறும் அனைத்து சலுகைகளையும் அவர்கள் பெறுகிறார்கள். அவர்களின் ஊதியம் மற்றும் வசதிகள் அவர்களின் குறிப்பிட்ட வேலை மற்றும் பதவியை பொறுத்தது.
அவர்களின் வேலையில் இருக்கும் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் அவர்கள் வகிக்கும் பொறுப்புகள் அவர்களுக்கு நல்ல சம்பளம் அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது. வீட்டு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பாளர்கள் முதல் சமையல்காரர்கள் மற்றும் தனிப்பட்ட உதவியாளர்கள் வரை, ஒவ்வொரு ஊழியரும் வீட்டின் செயல்திறனைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
மகா கும்பமேளாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகளின் புனித நீர் பிரயாக்ராஜில் சங்கமிக்கும் வேளையில், மில்லியன் கணக்கானவர்கள் மகா கும்பமேளா 2025-க்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வாக இது கருதப்படுகிறது. கடவுளின் அருளை பெறுவதற்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பான இந்த பயணம் பலருக்கு சவாலானது. இதை உணர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கும், அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் ஒரு விரிவான முயற்சியான 'தீர்த் யாத்ரி சேவா'வைத் தொடங்கியுள்ளது.
'We Care' என்ற கருத்தின் அடிப்படையில், ரிலையன்ஸ், யாத்ரீகர்களுக்கு ஊட்டமளிக்கும் உணவு மற்றும் அத்தியாவசிய சுகாதாரப் பராமரிப்பு முதல் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் தடையற்ற இணைப்பு வரை பல்வேறு சேவைகளை வழங்கி வருவதாக அவர்களின் அறிக்கைக் கூறுகிறது.



Click it and Unblock the Notifications

