Latest Updates
-
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கருட புராணத்தின் படி மரணம் நெருங்கும் போது ஒருவர் இந்த 6 விஷயங்களை பார்ப்பார்களாம்... என்னென்ன தெரியுமா?
இந்து மதத்தில் பல்வேறு புராணங்கள் உள்ளது, அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று கருட புராணம். இந்த புராணம் மனிதர்கள் வாழும்போதும், வாழ்க்கைக்குப்பிறகும் என்ன நடக்கும் என்பதைப் பற்றி விளக்குகிறது. கருட புராணத்தின்படி, ஒவ்வொரு மனிதனும் தனது நல்ல மற்றும் கெட்ட செயல்களின் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். ஒருவருக்கு மரணத்திற்கு முன் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதும் இந்தப் புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
கருட புராணம் இந்து மதத்தின் புகழ்பெற்ற புராணங்களில் ஒன்றாகும். பதினெட்டு புராணங்களில், கருட மகாபுராணம் தனக்கென ஒரு தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது, ஏனெனில் அதன் தெய்வம் காக்கும் கடவுளான மகாவிஷ்ணு கருதப்படுகிறார். கருட புராணம் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளைப் பற்றி விரிவாக விவரிக்கிறது. இது சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம், ஞானம், நீதி, விதிகள் மற்றும் தர்மம் ஆகியவற்றைப் பற்றி மக்களுக்கு விளக்குகிறது.

கருட புராணத்தின்படி, மனிதர்கள் தனது பாவம் மற்றும் புண்ணிய செயல்களுக்கான விளைவுகளை நிச்சயம் அனுபவிக்க வேண்டும்; அவற்றில் சிலவற்றை வாழும் போதும், சிலவற்றை மரணத்திற்குப் பிறகும் அனுபவிக்கிறார்கள். பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான அனைத்து உண்மைகளையும் மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் வீட்டில் கருட புராணம் வாசிக்கப்படுகிறது. கருட புராணத்தின்படி, மரணம் ஒருவரை நெருங்கும் போது, அதற்கு முன்பே அவர்களுக்கு சில அறிகுறிகள் தென்படத் தொடங்கும். அவை என்னென்ன அறிகுறிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மரணத்திற்கு முன் தோன்றும் அறிகுறிகள்
- கருட புராணத்தின் படி, ஒருவரை மரணம் நெருங்குவதற்கு முன் அறிகுறிகள் உடலில் தோன்றும். ஒருவரை மரணம் நெருங்குவது உறுதியாகிவிட்டால் அவர்களால் அவர்களுடைய மூக்கை பார்க்க முடியாது என்று கருட புராணம் கூறுகிறது.
- மரணம் நெருங்கும் போது, ஒருவரால் எண்ணெய் அல்லது தண்ணீரில் தனது நிழலைக் காண முடியாது என்று கருட புராணம் கூறுகிறது. அதனால்தான், மரண நேரத்தில் ஒருவரின் நிழலும் அவரை விட்டுப் பிரிந்துவிடுகிறது என்று கூறப்படுகிறது.
- கருட புராணத்தின் படி இறப்பதற்கு முன் ஒருவரின் கையில் உள்ள ரேகைகள் மிகவும் மங்கலாகிவிடும். சிலருக்கு அவை முற்றிலும் தெரியாமலேயே போய்விடும். மரணம் நெருங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னரே இந்த அறிகுறி தெரியலாம்.
- மரணம் ஒருவரை நெருங்கும் போது ஒருவருக்கு சில விசித்திரமான கனவுகள் வரக்கூடும் என்று கருட புராணம் கூறுகிறது. ஒரு நபர் தனது கனவுகளில் அணைந்துபோன விளக்கு போன்ற சில விசித்திரமான விஷயங்களைக் காணத் தொடங்குவார்.
- கருட புராணத்தின் படி, இறப்பதற்கு முன்பு, ஒருவர் தன்னைச் சுற்றி ஆன்மாக்களை உணரத் தொடங்குகிறார். அவை அவரது மூதாதையர்களின் ஆன்மாக்களாக இருக்கலாம். தங்கள் உறவினர் இப்போது மறுவுலகத்திற்கு வரப்போவதால், அவர்கள் அவரது வருகையைக் கொண்டாடத் தொடங்குவார்கள். இதனால் அவர்களின் ஆன்மாக்கள் மரணமடையப் போகிறவர்களின் கண்களுக்கு தெரியத் தொடங்கலாம்.
- கருட புராணத்தின்படி, ஒருவர் இறப்பதற்கு முன்பு, அவரது சுவாசம் எதிர் திசையில் செல்லத் தொடங்குகிறது. மேலும் அவர் எம தூதர்களை மிகவும் அருகில் பார்ப்பதால், தன்னைச் சுற்றியுள்ளவர்களை அவரால் பார்க்க முடியாமல் போகலாம்.



Click it and Unblock the Notifications
