Latest Updates
-
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம் -
சந்திரன்-சுக்கிரனால் உருவாகும் அரிய லட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும்
Vastu Tips: உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் பொழியனுமா? இந்த வாஸ்து டிப்ஸ்களை பின்பற்றுங்கள்!
நம் வாழ்க்கையில் நிலையாக இல்லாமல் இருக்கக்கூடிய விஷயம் செல்வம். அந்த செல்வத்தை அருளக்கூடிய மகாலட்சுமியின் அருள் என்றும் உங்கள் வீட்டில் நிலைத்து இருக்க வேண்டுமெனில், இந்த பொருட்களை உங்கள் வீட்டில் எந்த தசையில் வைக்க வேண்டும் என்று பார்த்து வைத்தால் அவரின் நல்லருள் கிடைக்கும். இதனால் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக அமையும்.உங்களின் வருமானம் அதிகரிக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் வாஸ்து படி தனது வீட்டை கட்ட முயற்சிக்கின்றனர். ஏனெனில் சரியான திசை மற்றும் வாஸ்து முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், வீட்டில் உள்ளவர்கள் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், வீட்டில் உள்ள பொருள்கள் மற்றும் காட்சிப் பொருட்களை சரியான திசையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். அப்படி வாஸ்து சொல்லும்படி பொருட்களை வைத்தால் வீட்டில் மகாலட்சுமி குடியேறுவாள் என்று வாஸ்து கூறுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சில பொருட்களை தெற்கு திசையில் வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கருதுகின்றனர். எமனின் ஆதிக்க திசையாக தெற்கு கருதப்படுகிறது. இந்த திசை பூமிக்கு சொந்தமானது.எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பணத்தை இந்த திசையில் வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த திசையில் வைக்கப்படும் சில விஷயங்களும் உங்களை நிதி ரீதியாக பலப்படுத்தும்.
வாஸ்து படி, துடைப்பத்தை வீட்டின் தெற்கு திசையில் வைப்பது நல்லது என்று கருதப்படுகிறது. இது வீட்டின் உரிமையாளரை ஒன்றிணைக்கும் என்று நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரமும் நிதி ஆதாயம் ஏற்படும் என்று கூறுகிறது.இது தவிர, எப்பொழுதும் செடியை ஹால் அல்லது டிராயிங் அறையில் தெற்கு திசையில் வைக்கவும். வாஸ்து படி இது வீட்டிற்கு மிகவும் நல்லது மற்றும் செழிப்பை தருகிறது.வருமானத்தையும் ம் தேடி தரும்.
வாஸ்து படி வீட்டின் தெற்கு திசையில் பீனிக்ஸ் பறவையின் படத்தை வைப்பது நல்லது. இது வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டு வருகிறது. படுக்கையில் தலையை தெற்கு திசையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.
தென்கிழக்கு திசை எப்போதும் தூங்குவதற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனுடன், இந்த திசையில் கனமான பொருட்களை வைப்பதும் பொருத்தமானதாக கருதப்படுகிறது. வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை எப்போதும் தெற்கு திசையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் பாக்கியம் உண்டாகும், பணத்திற்கு பஞ்சம் இருக்காது.
மாலையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வரும் நேரம். எனவே சூரிய அஸ்தமனத்தின் போது வீட்டில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் லட்சுமி தேவியை அவமதிப்பது போல் ஆகிவிடும். இது லட்சுமி தேவிக்கு கோபத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, வீட்டில் வறுமை அதிகரிக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்..
வீட்டில் லட்சுமி கடாக்ஷம் பெற தினமும் மாலையில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி அதில் இரண்டு கிராம்பு வைக்க வேண்டும். இந்த விளக்கை கதவின் இருபுறமும் வைக்க வேண்டும். இப்படி செய்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தில் கற்பூரம் ஒரு முக்கியமான பொருளாகக் கருதப்படுகிறது. வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்குகிறது. வாஸ்து தோஷத்தை நீக்குகிறது. தினமும் வீட்டில் கற்பூரம் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் மணம் வீசும். இதன் மூலம் லட்சுமி தேவியின் அருளும் கிடைக்கும். இதனால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் வருமானமும் பொங்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications











