Latest Updates
-
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
Fathers Day 2025 Wishes: தந்தையர் தினத்தன்று உங்க அப்பாகிட்ட 'இத' சொல்லுங்க.. ரொம்ப சந்தோஷப்படுவாரு...
Fathers Day 2025 Wishes In Tamil: இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்குமே அவரது அப்பா தான் முதல் ஹீரோ. இந்த அப்பாக்கள் தனது குடும்பத்துக்காக ஏராளமான தியாகங்களை செய்து, தனது பிள்ளைகள் கஷ்டப்படாமல் சுகமாக வாழ வாழ்நாள் முழுவதும் அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்றனர். சொல்லப்போனால், ஒரு தாய் தனது பிள்ளையுடன் நீண்ட நேரத்தை செலவிட முடிகிறது.
இதனால் தாயின் பாசத்தை அனைவராலும் நன்கு உணர முடியும். ஆனால் தந்தையோ அப்படியில்லை. தனது பிள்ளையுடன் அளவாகவே நேரத்தை செலவிடுவர். இருப்பினும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயை விட ஒருபடி அதிகமான பாசம் தந்தையின் மீது இருக்கும். ஏனெனில் தந்தை மறைமுகத் தூணாக இருந்து அந்த குடும்பத்தை, தனது பிள்ளைகளின் கனவுகளை, தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட தந்தையை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தந்தையர் தினம் ஜூன் 15 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் உங்கள் தந்தையை சந்தோஷப்படுத்த விரும்பினால், அவரது மனதை வருடும் வகையில் அவருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்து கவிதைகளை சொல்லுங்கள்.
1. கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு
கடவுளே கிடைத்தார் வரமாக அப்பா..
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
2. பிள்ளைகளுக்காக பல தியாகம் செய்தாலும்
அதை முகத்தில் காட்டாமல்
சிறு புன்னகையுடன் இருப்பவர் தான் அப்பா..
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
3. பெண்கள் வைக்கும் அன்பில்
ஏமாற்றத்தை அளிக்காத
ஒரே ஆண் தன் தந்தை மட்டுமே!
4. உலகை நமக்கு அறிமுகம்
செய்வது தாய் என்றால்
உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்துவது
தந்தை தான்..
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
5. நம் வாழ்க்கையை விருச்சமாக்க
தன்னை வேராக்கி கொண்டவர் தந்தை..
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
6. வில்லன்போல் நீ நடித்ததெல்லாம்,
கவசம்போல் என்னை காக்கவேயென்று
நற்பெயரில் நனைந்தபோது உணர்ந்தேன் அப்பா!
இந்நாளில் உனை வாழ்த்துகிறேன்!
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!



Click it and Unblock the Notifications





