Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
தீபாவளி அன்னிக்கு இந்த சிலைகளை வீட்டில் வாங்கி வையுங்க.. லட்சுமி தேவியின் அருளால் சீக்கிரம் கோடீஸ்வரராவீங்க.
Diwali 2024: பொதுவாக பண்டிகை வரப்போகிறது என்றாலே வீட்டை சுத்தம் செய்து, அழகாக அலங்கரிப்போம். அதுவும் தீபாவளி பண்டிகை வரப்போகிறது. இந்த தீபாவளியை முன்னிட்டு வீட்டை அலங்கரிக்க பலரும் பலவாறு யோசித்திருப்போம். சிலர் ஒவ்வொரு தீபாவளிக்கும் வீட்டில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள்.
வாஸ்துப்படி நம் வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே எந்த ஒரு பொருளை வீட்டிற்கு வாங்குவதாக இருந்தாலும், சற்று வாஸ்து பார்த்து வாங்கி வைத்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிப்பதோடு, லட்சுமி தேவியின் ஆசி கிடைத்து, செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும் என்பது நம்பிக்கை.

அதுவும் ஒருசில சிலைகளை வாங்கி வீட்டில் வைத்தால், அது நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதனால் தான் பெரும்பாலான பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் ஒருசில சிலைகளை வைத்திருக்கிறார்கள்.
இந்த தீபாவளிக்கு நீங்கள் உங்கள் வீட்டிற்கு ஏதாவது ஒன்றை வாங்க நினைத்தால், லட்சுமி தேவியின் ஆசியுடன் உங்கள் வீட்டின் நிதி நிலையை மேம்படுத்தும் சிலைகளை வாங்கி வையுங்கள். அது எந்தெந்த சிலைகள் என்பதை காண்போம்.
யானை சிலை
வாஸ்துப்படி, யானை சிலையை வீட்டில் வைத்திருப்பது நல்லது. அதுவும் வெள்ளி, பித்தளை, செம்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட யானை சிலையை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. யானை ஆற்றல், செல்வம், பெருமை ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த யானை சிலையை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, லட்சுமி தேவியின் ஆசியை பெற செய்யும். இதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும்.
ஆந்தை சிலை
ஆந்தை லட்சுமி தேவியின் வாகனமாகும். இந்த ஆந்தையின் சிலையை வீட்டில் வைத்திருந்தால், லட்சுமி தேவியே வீட்டில் குடியேறி, வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. அதோடு இந்த சிலை நிதி நிலையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
காமதேனு சிலை
புராணங்களின் படி, காமதேனு அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் பசுவாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, இந்த காமதேனு சிலையை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த சிலை வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் பணத்திற்கும், உணவிற்கும் பஞ்சம் இருக்காது.
பிரமிட் சிலை
வாஸ்துப்படி, உலோகம் அல்லது படிகத்தால் செய்யப்பட்ட பிரமிட்டை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை முழுமையாக வெளியேற்றி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மேலும் பிரமிடு வீட்டில் இருந்தால் வீட்டில் லட்சுமி தேவி குடியிருப்பார். முக்கியமாக இந்த சிலை வீடு கட்டும் ஆசையை நிறைவேற்றும்.
ஆமை சிலை
ஆமை விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, இந்த ஆமையின் சிலையானது வீட்டில் இருப்பது லட்சுமி தேவியை வீட்டில் வசிக்க வைத்து, வீட்டின் நிதி நிலையை உயர்த்தும். அதுவும் பித்தளை, தாமிதம், வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆமை சிலை வீட்டில் இருப்பது இன்னமும் நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
