Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு?
தந்தேராஸ் நாளான இன்னிக்கு 13 தீபங்களை இந்த 13 இடங்களில் ஏற்றி வையுங்க.. வீட்டில் 13 மடங்கு செல்வம் பெருகும்...
Dhanteras 2025: ஒவ்வொரு ஆண்டும் தந்தேராஸ் தீபாவளி பண்டிகைக்கு முன் கொண்டாடப்படுகிறது. சொல்லப்போனால் வடஇந்தியாவில் இந்த தந்தேராஸ் தீபாவளி பண்டிகையின் தொடக்க காலத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தந்தேராஸ் அக்டோபர் 18 ஆம் தேதி, சனி பிரதோஷத்தில் வருகிறது. இதனால் இந்த ஆண்டின் தந்தேராஸ் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இந்த தந்தேராஸ் நாளானது ஒரு மங்களகரமான நாள். இந்நாளில் எந்த பொருளை வாங்கினாலும், அது பெருகும் என்பது நம்பிக்கை. இந்த தந்தேராஸ் நாளில் லட்சுமி தேவி, குபேரர் மற்றும் தன்வந்திரியை மக்கள் செல்வம், செழிப்பு, ஆயுள் போன்றவற்றிற்காக வழிபாடு செய்வார்கள். மேலும் இந்நாளில் 13 தீபங்களை ஏற்றும் வழக்கம் உள்ளது.

இப்படி ஏற்றும் 13 தீபங்களானது நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, ஒருவரது வாழ்க்கையை பிரகாசமாக்கும் என்று நம்பப்படுகிறது. இப்போது தந்தேராஸ் நாளில் ஏன் 13 தீபங்கள் ஏற்றப்படுகின்றன மற்றும் எந்தெந்த இடங்களில் இந்த தீபங்களை வைக்க வேண்டும் என்பது குறித்தும் காண்போம்.
தந்தேராஸில் 13 தீபங்கள் ஏன் ஏற்றப்படுகிறது?
வடஇந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரம்பரியத்தில், தந்தேராஸ் நாளில் 13 தீபங்களை ஏற்றும் வழக்கம் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த தீபங்களானது ஆரோக்கியம், செல்வம், செழிப்பு ஆகியவற்றிற்காக ஏற்றப்படுவதாகவும், நேர்மறை ஆற்றல்களை அதிகரித்து, எதிர்மறை ஆற்றல்களை நீக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது. இப்போது தந்தேராஸ் நாளில் 13 தீபங்களை எந்தெந்த இடத்தில் ஏற்ற வேண்டும் என்பதைக் காண்போம்.
எந்தெந்த இடங்களில் இந்த 13 தீபங்களை வைக்க வேண்டும்?
முதல் தீபம் - ஆயுளை நீட்டிக்கவும், அகால மரணத்தை தடுக்கவும், குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தெற்கு நோக்கி குப்பை தொட்டி அருகே ஒரு தீபத்தை வைக்க வேண்டும்.
இரண்டாவது தீபம் - தீபாவளி இரவில் பூஜை அறைக்கு முன் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். இது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
மூன்றாவது தீபம் - வீட்டில் செல்வம், செழிப்பு மற்றும் வெற்றிக்காக லட்சுமி தேவிக்கு முன் ஒரு தீபத்தை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
நான்காவது தீபம் - வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நீடித்திருக்க துளசி செடிக்கு முன் ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
ஐந்தாவது தீபம் - வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை தடுத்து, நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்க வீட்டு வாசலில் ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
ஆறாவது தீபம் - அரச மரத்தின் அடியில் கடுகு எண்ணெய் பயன்படுத்தி ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். இது ஆரோக்கியம் மற்றும் பண பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.
ஏழாவது தீபம் - வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் அல்லது உங்களுக்கு பிடித்த கோவிலில் ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
எட்டாவது தீபம் - தீய சக்திகளை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை தடுக்க குப்பை தொட்டிக்கு அருகில் ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
ஒன்பதாவது தீபம் - நேர்மறை ஆற்றலையும், செழிப்பையும் ஈர்க்க கழிவறைக்கு முன் ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும்.
பத்தாவது தீபம் - எதிர்மறை ஆற்றல்களில் இருந்து வீட்டிற்கு பாதுகாப்பை வழங்க வீட்டிற்கு மேல் ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
பதினொன்றாவது தீபம் - இருளை மற்றும் எதிர்மறை சக்தியை எதிர்கொள்ள வீட்டின் ஒரு ஜன்னலில் ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும்.
பன்னிரண்டாவது தீபம் - நல்ல ஆரோக்கியத்திற்கு வீட்டின் மொட்டை மாடிக்கு நடுவில் ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
பதிமூன்றாவது தீபம் - நேர்மறை சக்திகளையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் ஈர்க்க உங்கள் வீட்டின் முச்சந்தியில் ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications