Latest Updates
-
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம்
இன்னைக்கு இந்த பொருட்களை வாங்குனா.. வீட்டுல பணத்துக்கு பஞ்சமே இருக்காதாம்.. மறக்காம வாங்குங்க...
Dhanteras 2023: தீபாவளி பண்டிகை வரப்போகிறது. வடஇந்தியாவில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் தான் தந்தேராஸ் எனப்படும் தனத்திரயோதசி நாள். இந்நாள் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.
இந்நாளில் வாங்கும் பொருட்கள் ஆண்டு முழுவதும் பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் மக்கள் இந்நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதோடு, சில முதலீடுகளையும் செய்வார்கள். இந்த ஆண்டின் தந்தேராஸ் நாள் நவம்பர் 10 ஆம் தேதி, அதாவது இன்று தான்.

இந்நாளின் மாலை வேளையில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு சிறப்பு பூஜைகளை செய்து மக்கள் வழிபடுவார்கள். அதோடு இன்று இரவு தான் எமதீபம் ஏற்றப்படுகிறது. இப்படிப்பட்ட நல்ல நாளில் உங்கள் வீடு செல்வ செழிப்போடு இருக்க விரும்பினால், தங்கம், வெள்ளியைத் தவிர வேறு எந்த பொருட்களையெல்லாம் வாங்கலாம் என்பது குறித்து இப்போது காண்போம்.
1. தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள்
தந்தேராஸ் நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இவற்றை இந்நாளில் வாங்கும் போது அது பலமடங்கு பெருகும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை தங்கம் வாங்க முடியாவிட்டால், லட்சுமி கணேச வெள்ளி நாணயம் ஒன்றை வாங்கினாலே போதும். வீட்டில் செல்வம் பெருகும்.
2. துடைப்பம்
துடைப்பம் லட்சுமி தேவி வாசம் செய்யும் பொருளாக கருதப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட துடைப்பத்தை தந்தேராஸ் நாளில் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் துடைப்பத்தை வாங்குவதன் மூலம், வறுமை, கஷ்டம், ஆரோக்கிய பிரச்சனைகள் போன்ற அனைத்துவிதமான கஷ்டங்களும் நீங்குவதாக கூறப்படுகிறது.
3. வாகனம்
நீண்ட நாட்களாக கார், பைக், ஸ்கூட்டர் போன்ற வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அதை வாங்க சிறந்த நாள் தந்தேராஸ் நாள் தான். ஏனெனில் இந்நாளில் வாகனம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
4. லட்சுமி மற்றும் விநாயகர் சிலை
தந்தேராஸ் நாள் மங்களகரமான நாள் என்பதால், நம்பிக்கைகளின் படி இந்நாளில் லட்சுமி மற்றும் கணேச சிலைகளை வாங்குவது நல்லது. இப்படி வாங்குவதன் மூலம், அது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும், நிதி நன்மைகளையும் வழங்கும்.
5. பித்தளை பொருட்கள்
புராணங்களின் படி, சமுத்திரத்தை கலக்கும் போது தன்வந்திரி தோன்றினார். அப்போது அவரது கையில் ஒரு பித்தளை கலசம் இருந்தது. அந்த கலசத்தில் தேன் நிரம்பியிருந்தது. எனவே தன்வந்திரி பகவானுக்கு பித்தனை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் தந்தேராஸ் நாளில் பித்தளை பொருட்களை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications