இந்தியாவையே நடுங்க வைத்த முதல் பெண் சீரியல் கில்லர் இவர்தான்... இவர் எத்தனை பெண்களை கொன்றார் தெரியுமா?

உலகம் தோன்றிய காலம் முதலே சீரியல் கில்லர் என்பவர்கள் இருந்து வந்துள்ளனர். பொதுவாக சீரியல் கில்லர்களுக்கு பாலின பேதம் கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில், மூன்று மாத கால இடைவெளியில் ஐந்து பெண்கள் இறந்து கிடந்தனர். அவர்களின் உடலில் துன்புறுத்தப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை, பாலியல் அல்லது உடல்ரீதியான தாக்குதல் நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அவர்களின் பிரேத பரிசோதனையில், அவர்களின் உடலில் சயனைடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கொலைகளைச் செய்தது யார்? இந்த கொலைகளுக்கான நோக்கம் என்னவாக இருக்கும்? ஆரம்பத்தில் இந்த சீரியல் கில்லர் ஒரு ஆணாக இருக்குமென்று காவல்துறையும், பொதுமக்களும் நினைத்தனர். ஆனால் நிஜம் கற்பனைக்கும் எட்டாததாக இருந்தது.

Cyanide Mallika India s First Female Serial Killer

கர்நாடகாவைச் சேர்ந்த கே.டி. கெம்பம்மா, 'சயனைடு மல்லிகா' என்றும் அழைக்கப்படுகிறார், அவர்தான் குற்றம் நிருபிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பெண் தொடர் கொலையாளி ஆவார். 1998 மற்றும் 2007 க்கு இடையில், கர்நாடக மாநிலத்தில் ஆறு பெண்களின் மரணத்திற்கு அவர் காரணமாக இருந்தார். தனது முதல் கொலைக்குப் பிறகு அவர் ஏழு ஆண்டுகள் நீண்ட கொலை செய்யாமல் இருந்தார். ஆறு பெண்களை ஒரு பெண் கொலை செய்தது விசாரணை அதிகாரிகளையும், பொதுமக்களையும் நீண்ட காலமாக வியப்பில் ஆழ்த்தியது.

யார் இந்த கே.டி. கெம்பம்மா?

1970 ஆம் ஆண்டு பிறந்த கெம்பம்மாவும் அவரது குடும்பத்தினரும் பெங்களூருவின் புறநகர்ப் பகுதிகளில் வசித்து வந்தனர். அவர் மிகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தார். இருப்பினும், கெம்பம்மா எப்போதும் பணக்கார வாழ்க்கை மீது மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் அவர் தனது இலக்குகளை அடைய குறுக்கு வழியில் செல்ல முடிவெடுத்தார். கெம்பம்மா இளம் வயதிலேயே ஒரு டைலரை மணந்து விரைவில் ஒரு தாயானார்.

அதன் பிறகு அவருக்கு மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. தனது பொருளாதார நிலை குறித்து அவர் மிகுந்த அதிருப்தி அடைந்தார். கர்நாடகாவின் காக்லிபுராவில் வீட்டு உதவியாளராக பணியாற்றினார். கெம்பம்மா விரைவில் பணக்காரராக மாற முடிவு செய்து, வீட்டு உதவியாளராக வேலை செய்த வீடுகளில் திருடத் தொடங்கினார்.

முதல் திட்டம்

இதை தொடர்ந்து, தனது இலக்குகளை அடையவதற்காக தனது வீட்டிற்கு அருகில் ஒரு சிட் ஃபண்டைத் தொடங்க முடிவு செய்தார். இருப்பினும், அவரது நிறுவனம் குறிப்பிடத்தக்க இழப்பை சந்தித்தது, மேலும் அவரது குடும்பம் இதனால் கடனில் மூழ்கியது. இதனால் கோபமடைந்த கெம்பம்மா தனது கணவரால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார், மேலும் 1998 இல், அவரது கணவர் அவரைக் கைவிட்டார். தனது தொழிலை இழந்ததைத் தொடர்ந்து, சயனைடு மல்லிகா பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே பெண்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். துன்பத்தில் உள்ள நல்ல குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் குறிவைக்கப்பட்டனர்.

சதித் திட்டம்

பின்னர் அவர் ஒரு தங்க நகை செய்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அஜூ அவர் சயனைடின் பயன்பாடு பற்றி அறிந்து கொண்டார். அதன்பின் தினமும் கோவிலுக்கு சென்று அங்கு வரம் பெண்களை கண்காணிக்கத் தொடங்கினார். அங்கு அதிக பிரச்சினைகளுடன் வரும் பெண்களை குறிவைத்தார். அந்த பெண்களை அணுகி அவர்களுக்கு ஒரு 'மண்டல பூஜை' மூலம் உதவ முடிவு செய்தார், அது அவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் என்று அவர் உறுதியளித்தார். இந்த பூஜையில் அவர்களின் மிகவும் விலையுயர்ந்த ஆடை மற்றும் அனைத்து நகைகளையும் அணியச் சொல்வார். கெம்பம்மா பெரும்பாலும் அவர்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கோவிலுக்கு அழைப்பார். அதன் பிறகு கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்யச் சொல்வார். பின்னர் சயனைடு கலந்த தண்ணீரை "புனித நீர்" என்றுசொல்லி அவர்களை குடிக்க வைப்பார்.

முதல் கொலை

1999 ஆம் ஆண்டு, சயனைடு மல்லிகாவின் முதல் கொலை பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் 30 வயது பணக்காரப் பெண்மணியாக இருந்தார். அவரால் கொல்லப்பட்ட அனைவரும் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் கடினமான காலங்களைச் சந்திக்கும் வயதான பெண்களாக இருந்தார்கள். ஆஸ்துமாவிலிருந்து விடுபட விரும்பிய ஒரு பெண், காணாமல் போன தனது பையனைக் கண்டுபிடிக்க விரும்பிய 59 வயது பெண் என பலவீனமான பெண்கள் அவருடைய குறியாக இருந்தனர்.

முதல் கைது

ஒவ்வொரு கொலைக்குப் பிறகும் கெம்பம்மா தனது அடையாளத்தை முழுவதுமாக மாற்றிக் கொள்வாள். 2000 ஆம் ஆண்டில், ஒரு வீட்டில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்களைத் திருட முயன்றதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அங்கு ஒரு பூஜையை நடத்த கெம்பம்மா அழைக்கப்பட்டார், ஆனால் அந்தப் பெண் அலறி அழுததால், அவரது உறவினர்களால் மீட்கப்பட்டார். இருப்பினும், அவர் செய்த குற்றத்திற்காக அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது.

கெம்பம்மா தனது முதல் கொலைக்குப் பிறகு 7 ஆண்டுகள் யாரையும் கொலையில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர் பலரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது, ஆனால் இது இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது. அதேசமயம் கெம்பம்மா, 2007 ஆம் ஆண்டில் மூன்று மாத காலப்பகுதியில் ஒரு 5 பேரை தொடர்ச்சியாகக் கொன்றார்.

அடுத்தடுத்த கொலைகள்

பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகாவின் உடல் ஒரு கெஸ்ட் ஹவுஸில் கண்டெடுக்கப்பட்டது, 2006 ஆம் ஆண்டு சயனைட் மல்லிகாவால் கொல்லப்பட்டார். காவல்துறை அறிக்கையின்படி, கொலையாளியின் பெயர் ஜெயம்மா என்று குறிப்பிடப்பட்டது. போலீசார் ஜெயம்மாவைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​கெம்பம்மா தனது அடுத்த பலியாக நாகவேணியைத் தேர்ந்தெடுத்தார். நாகவேணிக்கு குழந்தை இல்லாததால், சயனைட் மல்லிகாவின் ஏமாற்று வேலையில் அவள் பலியானார்.

சயனைடு மல்லிகா

கெம்பம்மா கடைசியாக கொலை செய்தவரிடம் தன்னை மல்லிகா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதனால் அவருக்கு 'சயனைடு மல்லிகா' என்று பெயர் சூட்டப்பட்டது. சயனைடு மல்லிகா 2012 இல் கைது செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். 'சயனைடு மல்லிகா' வழக்கு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை வைத்து பல திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் உருவாக்கப்பட்டது.

Desktop Bottom Promotion