Latest Updates
-
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க..
விபச்சாரியை உயிருக்கு உயிராக காதலித்த இந்திய பேரரசர்...உயிருடன் புதைக்கப்பட்ட காதலி..காவியமாக மாறிய காதல் கதை!
இந்திய வரலாறு உலகின் மிகவும் வளமான மற்றும் தொன்மையான வரலாறுகளில் ஒன்றாகும். நம்முடைய வரலாற்றில் போர்களும், கலையும் எவ்வளவு முக்கியமானவையாக இருக்கிறதோ அதேபோல நம் வரலாறு முழுவதும் காலத்தால் அழியாத காதல் கதைகளும் நிறைந்துள்ளன.
இந்திய வரலாற்றில் பல தலைமுறைகளாக மக்களின் இதயங்களைக் கவர்ந்த புகழ்பெற்ற மற்றும் அழியாத காதல் கதைகளால் நிறைந்துள்ளன. அதற்கு சான்றாக நிற்பதுதான் தாஜ்மஹால், பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் காதலின் அசைக்க முடியாத சின்னமாக தாஜ்மஹால் உள்ளது.

இந்த ஒவ்வொரு காதல் கதையும் பக்தி, தியாகம் மற்றும் சமூகத்தால் ஏற்பட்ட சவால்கள் என அவரவர் வாழ்ந்த காலங்களுக்கு ஏற்ப பிரச்சினைகளை எதிர்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக வெகுசில காதல் கதைகளைத் தவிர பிற கதைகளை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த பதிவில் இந்திய வரலாற்றின் சிறந்த மற்றும் மறக்க முடியாத காதல் கதைகள் சிலவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஷாஜகான் மற்றும் மும்தாஜ் மஹால்
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் மற்றும் காதலின் சின்னமாகவும் கருதப்படும் தாஜ்மஹாலின் கட்டுமானத்துடன் தொடர்புடைய காதல் கதை இது. இவர்களின் காதல் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானது. முகலாயப் பேரரசரான ஷாஜகான், தனது 14வது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது காலமான தனது மனைவி மும்தாஜ் மஹாலுக்கான தனது தீராத காதலின் அடையாளமாக இந்த கல்லறையைக் கட்டினார்.
சலீம் மற்றும் அனார்கலி
பிரபலமான நாட்டுப்புறக் கதைகளின் படி, முகலாய பேரரசர் அக்பரின் மகன் சலீம், அழகில் சிறந்த விபச்சாரியாக இருந்த அனார்கலியை காதலித்தார். இருப்பினும், சமூக அந்தஸ்தில் உள்ள வித்தியாசம் காரணமாக அவர்களது காதல் அக்பரிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்தது.
அவர்களின் காதல் பல இன்னல்களை எதிர்கொண்டது, இறுதியில் அனார்கலி உயிருடன் புதைக்கப்பட்டார். சலீம் பின்னர் ஜஹாங்கீராக முகாலய சாம்ராஜ்ஜியத்தின் அரசராகி ஆட்சி புரிந்தார். ஆனால் இறுதிவரை அவர் அனார்கலியை மறக்கவில்லை. அவர்களின் காதல் கதை புராணமாக மாறியது மற்றும் பல்வேறு கலை வடிவங்களில் எப்போதும் அழியாததாகும் இருக்கும்.
தோலா மற்றும் மாரு
இது ராஜஸ்தானின் பிரபலமான காதல் கதை. தோலா என்ற இளவரசனும், மாரு என்ற இளவரசியும் சிறு வயது முதலே காதலித்து வந்தனர். இருப்பினும், அரசியல் காரணங்களால் மாரு மற்றொரு இளவரசருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். தோலா, மாருவை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார், மாறுவேடமிட்டு அவரின் அரண்மைக்குள் புகுந்து மாருவை காப்பாற்றினார், இந்த துணிச்சல் அவர்களின் காதலின் வெற்றிக்கு வழிவகுத்தது.
ஹீர்-ராஞ்சா
ஹீர்-ராஞ்சாவின் காதல் கதை மற்றொரு பிரபலமான பஞ்சாபி காதல் கதை, இந்த கதை கவிஞர் வாரிஸ் ஷாவால் பிரபலப்படுத்தப்பட்டது. இது ஜாட் பெண்ணான ஹீர் மற்றும் ஏழை மேய்ப்பரான ராஞ்சா ஆகியோரின் கதையைச் சொல்கிறது. வெவ்வேறு சமூக வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் காதலித்தார்கள். இருப்பினும், அவர்களது குடும்பங்கள் அவர்களது எதிர்கின்றனர். இது தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் இன்னல்களுக்கு வழிவகுக்கிறது. கதை அவர்களின் அழியாத காதலையும் அவர்கள் எதிர்கொள்ளும் சமூகத் தடைகளையும் சித்தரிக்கிறது.
பாஸ் பகதூர் மற்றும் ரூப்மதி
பாஸ் பகதூர் மால்வா இராச்சியத்தின் கடைசி சுதந்திர ஆட்சியாளராக இருந்தார், ரூப்மதி ஒரு திறமையான பாடகி மற்றும் கவிஞராக இருந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் மாண்டுவில் இருவரும் சந்தித்துக் காதலித்து வந்தனர்.
ரூப்மதியின் மயக்கும் குரல் பாஸ் பகதூரைக் கவர்ந்தது, மாண்டுவின் இயற்கை அழகுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. இருப்பினும், முகலாய பேரரசர் அக்பர் மாண்டுவைத் தாக்கியபோது அவர்களின் கதை சோகமாக முடிந்தது, இது அவர்களின் பிரிவுக்கு வழிவகுத்தது.
மிர்சா-சாஹிபா
மிர்சா-சாஹிபா என்பது பஞ்சாபில், குறிப்பாக ஜாட் சமூகத்தினரிடையே பிரபலமான காதல் கதை. இது ஒரு முஸ்லீம் மிர்சாவிற்கும் ஜாட் இளவரசியான சாஹிபாவிற்கும் இடையிலான தடைசெய்யப்பட்ட காதலைச் சுற்றி வருகிறது.
சிறுவயது நண்பர்களாக இருந்தாலும், அவர்களது காதலை சாஹிபாவின் குடும்பத்தினர் எதிர்த்தனர், மேலும் அவர்கள் ஒன்றாக இருப்பதற்கு பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். சாஹிபாவின் துரோகம் மிர்சாவின் மரணத்திற்கு இட்டுச் செல்லும் சோகமான முடிவுக்கு கதை அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications












