Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
இன்று விண்ணில் ஏவப்படும் சந்திரயான்-3 விண்கலத்தின் மூளையாக இருப்பவர் ஒரு தமிழர் என்பது தெரியுமா?
Chandrayaan 3 Launch: இந்தியாவின் மூன்றாவது சந்திர பயணமான சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்விஎம் 3 ராக்கெட் மூலம் ஜூலை 14 ஆம் தேதி, அதாவது இன்று பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.
இந்தியாவின் இந்த சந்திர பயணத்திற்கான கவுன்டவுன் ஏற்கனவே வியாழக்கிழமை அன்று தொடங்கிவிட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள சுமார் 17,000 ஊழியர்கள் இந்த விண்கலத்தை நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குவதைக் காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சந்திரயான்-3 என்பது இந்தியாவில் இருந்து நிலவிற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் தொடரின் மூன்றாவது விண்கலமாகும். ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. இந்தியா தற்போது எடுத்துள்ள சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவை அடைவதற்காக, இதை உருவாக்க மூளையாக இருப்பவர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி என்பது தெரியுமா?
ஆம், தற்போது இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருக்கும் வீரமுத்துவேல் என்பவர் தான் இந்த சந்திரயான்-3 திட்டத்தின் மூளையாக செயல்பட்டுள்ளார். இந்த வீரமுத்துவேல் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் உள்ள ஐஐடி-யில் தனது படிப்பை முடித்தவர்.
இவர் 2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 திட்டத்திலும் பணியாற்றியுள்ளார். ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. இந்த விஷயத்தில் வீரமுத்தவேல் தனது திறமையையும் நிபுணத்துவத்தையும் நிறுவியதால், சந்திரயான்-3 திட்டத்தில் திட்ட இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
வீரமுத்துவேல், தென்னக ரயில்வேயில் பணியாற்றி வந்த பழனிவேல் என்பவரின் மகனாவார். விழுப்புரத்தில் உள்ள ரயில்வே குடியிப்பில் தான் இவர்கள் வசித்து வந்தனர். வீரமுத்துவேல் அங்கிருந்த ரயில்வே பள்ளியில் தான் படித்து வந்தார்.
அதன் பின் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். அதன் பின்பு சென்னையில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் தனது இன்ஜினியரிங் படிப்பை முடிந்தார். பின்னர் சென்னை ஐஐடி-யில் ஆராய்ச்சி பட்டத்தைப் பெற்றார்.
வீரமுத்துவேல் அவர்கள் தனது படிப்பை முடித்ததும், அவருக்கு பல்வேறு மத்திய அரசு வேலைகள் தேடி வந்தன. ஆனால் இவருக்கு சிறுவயதில் இருந்தே விஞ்ஞானியாக வேண்டுமென்பதே ஆசை மற்றும் கனவும் கூட.
எனவே இவர் எந்த ஒரு பணியிலும் சேர மறுத்தார். இவரது முயற்சியை தொடர்ந்து, இவர் 2014 ஆம் ஆண்டு இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர்ந்தார். தற்போது இந்தியாவின் கனவை நிறைவேற்றும் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்க மூளையாக செயல்பட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











