Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் எப்போதும் பலபடி மேலே இருப்பார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிஞர். இவர் மௌரிய பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் வழிகாட்டியாக இருந்தார். அவர் கௌடில்யர் என்றும் விஷ்ணுகுப்தர் என்றும் அழைக்கப்படுகிறார்.
சாணக்கியரின் புத்தகமான அர்த்தசாஸ்திரம் அரசியல், இராஜதந்திரம், மனித வாழ்க்கை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. அவர் பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றி நிறைய விஷயங்களை சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.

சாணக்கியர் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், ஆண்கள் மற்றும் பெண்களின் தகுதிகள் மற்றும் தீமைகள் பற்றிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளார். சில சூழ்நிலைகளில் ஆண்களை விட பெண்கள் முந்துகிறார்கள் என்கிறார். சாணக்கிய நீதியின் படி பெண்களின் அத்தகைய குணங்கள் என்னென்ன என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.
பெண்கள் பற்றிய சாணக்கியரின் கொள்கைகள்
சாணக்கியர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர், அவருக்கு நல்ல ராஜதந்திர உணர்வும் இருந்தது. சிறந்த அறிஞராக இருப்பதால், அவரது கொள்கைகள் மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை.
சாணக்கியாரின் கூற்றுப்படி, ஒரு நபர் வெற்றிபெற ஆர்வம், பொறுமை, இராஜதந்திரம் போன்ற சில குணங்களைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். அதேபோல், பெண்களைப் பற்றியும் சில கருத்துக்களைக் கூறியுள்ளார். அதன்படி சில குணங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்கிறார் சாணக்கியர்.
உணவுமுறை
சாணக்கியரின் கூற்றுப்படி, ஆண்களை விட பெண்கள் அதிக உணவை உண்கின்றனர். இதை சாணக்கிய நீதியில் 'ஸ்த்ரீனாம் திவகுண அபான்ஹோ' என்று கூறியுள்ளார். ஆண்களை விட பெண்களுக்கு இரண்டு மடங்கு பசி இருக்கும். ஆண்களை விட அவர்களின் உடல் அமைப்புக்கு அதிக கலோரிகள் தேவைப்படுவதாகவும், எனவே அவர்கள் எப்போதும் நன்றாக சாப்பிட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
அறிவாற்றல்
புத்திசாலித்தனத்தைப் பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்களின் புத்திசாலித்தனம் ஆண்களை விட சிறப்பாக செயல்படுகிறது. பெண்கள் எந்த ஒரு பயமும் இல்லாமல் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள்.
குடும்பத்தை வழிநடத்துவது எளிதான காரியம் அல்ல. அதற்கு மிகவும் பொறுமை, ஞானம் மற்றும் புத்திசாலித்தனம் தேவை என்றும் அந்த சூழ்நிலையில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
தைரியம்
ஆண்களை விட பெண்கள் தைரியசாலிகள் என்று சாணக்கியர் கூறுகிறார். இருப்பினும், பல ஆண்கள் இதனை ஒப்புக்கொள்ளாமல் போகலாம். ஆனால் எந்த ஒரு நெருக்கடியிலும் பெண்கள் தைரியமாக இருப்பார்கள் என்பதுதான் உண்மை.
ஆண்கள் வெளியில் தைரியமாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். சாணக்கிய நீதியில் அவர் 'சஹசன் ஷட்குணம்' எழுதியுள்ளார். அதாவது அவர்களுக்குள் இருக்கும் தைரியத்தின் பலம் ஆண்களை விட ஆறு மடங்கு அதிகம். சகிப்புத் தன்மையில் ஆண்களை விட பெண்கள் மிகவும் முன்னிலையில் உள்ளனர்.
பாலுறவு
சாணக்கிய நீதியில் 'காமோஸ்தகுன் உச்யதே' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது உடலுறவு விஷயத்தில் ஆண்களை விட பெண்களே உயர்ந்தவர்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, ஆண்களை விட பெண்கள் எட்டு மடங்கு அதிக பாலுறவு வேட்கை கொண்டவர்கள்.
ஆண்களை விட பெண்களின் பாலுறவின் சக்தி அதிகம் என்கிறார். இயற்கை அவர்களுக்கு அதிக செக்ஸ் டிரைவ், அதிக தைரியம் மற்றும் புத்திசாலித்தனத்தை கொடுத்துள்ளது.



Click it and Unblock the Notifications
