Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நண்பர்கள் உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்களாம்... இவங்ககிட்ட பழகாதீங்க...!
Chanakya Niti: சாணக்கியர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கூறிய இன்றும் பொருத்தமானவை. அவர் தனது சாணக்கிய நீதியில், மனித வாழ்க்கையை எளிமையாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுவது தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களைப் பற்றியும் அறிவுரைகளை வழங்கியுள்ளார். செல்வம், சொத்து, மனைவி, நட்பு மற்றும் திருமணம் போன்ற அனைத்து விஷயங்களைப் பற்றியும் சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஆழமாகக் கூறியுள்ளார்.

இன்றும் மக்கள் சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்க்கையில் வெற்றிபெற முயற்சிக்கின்றனர். சாணக்கியரின் கூற்றுப்படி, தன் நண்பன் யார், எதிரி யார் என்பதை அறிந்தவர் வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார். வாழ்க்கையின் முன்னேற்றம் அல்லது வீழ்ச்சி உங்கள் நிலைத்தன்மையைப் பொறுத்தது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக முன்னேற விரும்பினால், சாணக்கியரின் சில அறிவுரைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அவரைப் பொறுத்தவரை, வாழ்க்கையில் வெற்றியை அடைய குறிப்பிட்ட நபர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படுவார்கள்
சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கோபப்படுபவர்கள் தனக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பிரச்சனைகளை உண்டாக்குகிறார்கள். அத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் ஒருபோதும் தங்கள் தவறை உணர மாட்டார்கள். எது சரி எது தவறு என்று அவர்களால் எப்போதும் புரிந்து கொள்ள முடியாது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படுபவரை நம்பவேக் கூடாது. அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.
சுயநலவாதிகள்
ஒரு சுயநலவாதி எப்போதும் தனது சொந்த லாபத்திற்காகவே அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வாய்ப்பு கிடைத்தால் யாருக்கும் தீங்கு செய்வார்கள். தங்கள் சொந்த நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு சாணக்கியர் கூறுகிறார்.
அப்படிப்பட்டவர்கள் சில சமயங்களில் பிரச்சனைகள் இருக்கும்போது உங்கள் பிரச்சனையை இன்னும் மோசமாக்க முயற்சிப்பார்கள். அத்தகையவர்கள் யாருக்கும் உதவ விரும்ப மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் உதவி செய்தாலும் அதில் அவர்களின் சுயநலம் இருக்கும்.
பொய் சொல்பவர்கள்
நல்ல நோக்கத்திற்காக பொய் சொல்வது நல்லது என்று திருவள்ளுவரே கூறியுள்ளர். ஆனால் சிலர் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களை ஏமாற்றலாம். அத்தகையவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள். சாணக்கியர் அவர்களிடமிருந்து தூரமாக விலகியிருக்கச் சொல்கிறார்.
முகஸ்துதி பாடுபவர்கள்
தேவையில்லாமல் பிறரைப் புகழ்பவர்களிடம் இருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் உங்கள் குறைபாடுகளைப் பற்றிய உண்மையை பேசாமல் உங்களை எப்போதும் இருளில் வைத்திருக்கிறார். அவர்கள் தங்கள் ஆதாயத்திற்காக உங்களை பொய்யாக புகழ்ந்து பேசுவார்கள். உங்கள் அதிகாரத்தையும் பணத்தையும் பார்ப்பவர்கள் உங்களுக்கு ஆபத்தானவர்களாக மாறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
ஏமாற்று பேர்வழிகள்
மற்றவர்களை ஏமாற்றுபவர்கள், அவர்கள் உங்கள் நண்பர்களாக இருந்தாலும், சில நேரங்களில் உங்களை ஏமாற்றலாம். ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் உங்களையும், உங்கள் நம்பிக்கையையும் அழித்து விடுவார்கள். அத்தகைய நபரிடமிருந்து உடனடியாக விலகி விடுவது நல்லது.
ரகசியத்தை பாதுகாக்கத் தெரியாதவர்கள்
சாணக்கிய நீதியின் படி, மற்றவர்களின் ரகசியங்களை பாதுகாப்பது என்று தெரியாத ஒரு நபர் உண்மையில் ஆபத்தானவர். அப்படிப்பட்டவர்களிடம் ஏதேனும் ரகசியத்தை சொன்னால் அவர்கள் அதை பயன்படுத்தி உங்களை சிக்கலில் மாட்டிவிடுவார்கள். ரகசியங்களை காக்க முடியாத ஒரு நபர் உங்கள் வாழ்க்கையில் நிறைய சேதத்தை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து எப்பொழுதும் விலகியிருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications
