Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்கள் இருந்தால் எவ்வளவு பெரிய எதிரியையும் ஈஸியாக ஜெயிச்சிரலாமாம்...!
சாணக்கியர் ஒரு சிறந்த தத்துவஞானி, மேலும் அவர் வரலாற்றின் சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியின் கீழ், அவர் நாட்டை மிக உயரத்திற்கு கொண்டு சென்றார். சந்திர குப்த மௌரியரும் மற்றும் சாணக்கியரும் இணைந்து ஆட்சி செய்த காலம் மௌரியர்களின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மோசமான காலங்களில் ஒருவருக்கு உதவக்கூடிய விஷயங்கள் என்று சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார். வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒருவர் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். மோசமான நேரங்களுக்கு உங்களை எவ்வாறு தயார்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பயம் கொள்ளக்கூடாது
பயம்தான் நம்மை பலவீனமாக்குகிறது மற்றும் சூழ்நிலையை நம் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது. பயப்படுகிற மனிதனை விட தன்னம்பிக்கை கொண்ட ஒருவர் சூழ்நிலையை சிறப்பாக வெல்ல முடியும். அதிகம் பயப்படுபவர்கள் ஆபத்துக்களை நெருங்குவதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முடியாது. ஒரு சூழ்நிலையை எதிர்த்துப் போராட, ஒருவர் முதலில் பயத்தை எதிர்த்துப் போராட வேண்டும். எனவே பயம் உங்களை நெருங்கும்போது, ஒரு போர்வீரனைப் போல அதைத் தாக்கி அதைக் கொல்ல வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
நிகழ்காலத்தில் வாழ வேண்டும்
உங்கள் நேரம் மோசமாக இருப்பதற்கு தோல்வியே காரணம் என்று நீங்கள் நினைத்தால், சில முக்கியமான விஷயங்களை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் மோசமான காலங்களை கடக்க வேண்டியிருக்கும் போது, வலி அவர்களின் இதயத்தை ஆக்கிரமித்து அவர்களை விரக்திக்கு ஆளாக்குகிறது. கடந்த காலத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ சிந்திக்காமல், சூழ்நிலையைச் சமாளிக்க ஒருவர் தங்களால் இயன்றவரை முயற்சி செய்ய வேண்டும். மாற்றம் ஒன்றே உலகில் நிலையானது. எனவே, நேரம் சாதகமாக இல்லாதபோது, ஒருவர் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அவரால் எதுவும் செய்ய முடியாவிட்டால் நிலைமையைக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும். சாணக்கிய நீதி கூறுவது போல உங்கள் கடந்த காலத்தை பற்றி வருந்தாதீர்கள், உங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள், மாறாக உங்கள் நிகழ்காலத்தை நன்றாக வாழுங்கள்.
மகிழ்ச்சியே எதிரிகளைக் கொல்லும்
உங்கள் கெட்ட நேரங்களுக்கு உங்கள் எதிரிகள் காரணமாக இருக்கலாம். ஆனால் உங்கள் எதிரியை நீங்கள் எளிதாக தோற்கடிக்கலாம், எவ்வாறெனில் நீங்கள் அவர்களின் மன உறுதியைத் தாக்க முயற்சிக்க வேண்டும். தன்னம்பிக்கையே மனிதனுக்குத் தேவையான பலத்தை அளிக்கும் என்பதால், தன்னம்பிக்கையைக் கொல்வது எதிரியை பலவீனப்படுத்தும். உங்களை மகிழ்ச்சியாக பார்க்க முடியாதவர்களுக்கு உங்களின் நிலையான மகிழ்ச்சியே மிகப்பெரிய தண்டனையாக இருக்கும். சாணக்கிய நீதி கூறுவது என்னவெனில், உங்கள் மகிழ்ச்சியே உங்கள் எதிரிகளுக்கு மிகப்பெரிய தண்டனை.
உங்களை வலிமையானவராக காட்டிக் கொள்ள வேண்டும்
எதிரியின் நம்பிக்கையில் கவனம் செலுத்துங்கள், அவரது வெற்றிக்கான வாய்ப்புகளைத் தீர்மானிக்கும் பலமே அதுதான். எதிராளி பலமாக இருக்கும்போது எல்லோருக்கும் பயம் ஏற்படுவது இயற்கைதான். தீங்கிழைக்கும் எண்ணம் கொண்ட பெரும்பாலான மக்கள் தங்களை விட வலிமையானவர்களிடமிருந்து விலகி இருக்கிறார்கள். அவர்கள் முதலில் பலவீனமானவர்களைத் தாக்குகிறார்கள். எனவே, நீங்கள் எப்போதும் உங்களை ஒரு வலிமையான நபராக சித்தரிக்க வேண்டும். சாணக்கிய நீதி கூறுவது என்னவெனில் ஒரு பாம்பு தான் ஆபத்தானதாகை இல்லாவிட்டாலும் தன்னை அப்படி காட்டிக்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications