Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சாணக்கிய நீதி படி பெண்கள் கணவரின் இந்த 4 பழக்கங்களை மன்னித்தால் அவர்களின் வாழ்க்கையே பாழாகிருமாம்...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கையின்படி, கணவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் சரி, கெட்டவராக இருந்தாலும் சரி, பெண்கள் தங்கள் கனவர்களின் கெட்ட பழக்கங்களையோ அல்லது சில கசப்பான உண்மையையோ மறைக்கக் கூடாது.
கணவனின் சில தீய பழக்கங்களை பெண்கள் மறைத்து விட்டால், பிற்காலத்தில் அந்த கெட்ட பழக்கங்கள் இன்னும் பயங்கரமானதாக மாறி, எதிர்காலத்தில் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமில்லாத சூழ்நிலைக்கு செல்லலாம்.

ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் கணவரிடம் உள்ள மறைக்க கூடாத சில கெட்ட பழக்கங்களை நீங்கள் மறைத்தால் அல்லது மன்னித்தால், அவரும் தங்களின் கெட்ட பழக்கங்கள் இருப்பதை உங்கள் கணவர் ஒருபோதும் உணரமாட்டார். எனவே அவர் உங்கள் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள மாட்டார், உங்களை துன்புறுத்துவார். அத்தகைய பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.
பொய் சொல்வது
சாணக்கிய நீதியிள் கூறியுள்ளபடி, பெரும்பாலான பெண்கள் பெரும்பாலும் தங்கள் கணவரின் பொய் சொல்லும் பழக்கத்தை தங்கள் வீடு மற்றும் மாமியாரிடம் இருந்து மறைக்கிறார்கள். இதனை மனைவி மறைக்கும் போது பொய் சொல்லும் பழக்கம் அதிகமாகி, பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதபோதும் அவர்கள் பொய் சொல்வார்கள். இதனால் அவர்கள் பின்னர் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.
மனைவி மீது சந்தேகம்
திருமணமாகி சில வருடங்கள் கழித்து, கணவன் மனைவியை சந்தேகிக்கத் தொடங்கும் சூழ்நிலைகள் சில சமயங்களில் ஏற்படுகின்றன.
இந்த சந்தேகப் பழக்கம் அவர்களின் மனதை மோசமானதாக மாற்றுகிறது. சந்தேகம் ஒரு கொடிய நோய், அதற்கான மருந்து எந்த மருத்துவரிடமும் கிடைக்காது என்று கூறப்படுகிறது. பெண்கள் இந்த கெட்ட பழக்கத்தை சமூகத்திடம் இருந்தும் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்தும் மறைக்கவே கூடாது.
கோபம்
கோபம் என்பது ஒரு உணர்வு, ஆனால் யாராவது அளவில்லாமல் கோபப்படுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கை மிகவும் மோசமாகிவிடும். கோபத்தைக் கட்டுப்படுத்துபவரே வாழ்க்கையில் வெற்றியடைய முடியும் என்கிறார் சாணக்கியர்.
காதலுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கணவனின் கோபமான நடத்தையைப் பொறுத்துக்கொள்வது பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்கிறார் சாணக்கியர். ஒரு கட்டத்தில் இந்த கோபம் வன்முறையாக வெளிப்படலாம். இதனால் பல பெண்கள் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
கணவரின் கள்ளத்தொடர்பு
ஒவ்வொரு மனைவியும் தங்கள் கணவரை நம்ப வேண்டியது அவசியம் என்கிறார் சாணக்கியர். ஆனால் சில சமயங்களில் சில ஆண்கள் தங்கள் மனைவியின் நம்பிக்கையை உடைத்து மற்ற பெண்களுடன் உறவு கொள்ளத் தொடங்குகிறார்கள்.
ஆரம்பத்தில் இந்த பழக்கம் மிகவும் பொதுவானதாகத் தோன்றினாலும், காலப்போக்கில் இது திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். மனைவிகள் தங்கள் கணவரின் இந்தப் பழக்கத்தை ஒருபோதும் மறைக்கக் கூடாது. அப்படி மறைத்து வைப்பது திருமணத்தை ஆபத்தில் ஆழ்த்திவிடும்.



Click it and Unblock the Notifications
