Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்கள் இருந்தால் அவர்கள் வாழ்க்கை நரகத்தை விட மோசமாக இருக்குமாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் அறிவுரைகள் இருளில் செல்லும் எந்த மனிதனையும் வெளிச்சத்திற்கு அழைத்து வருகின்றன. சாணக்கியரின் கொள்கைகளை வாழ்க்கையில் சரியாகப் பின்பற்றினால், ஒரு நபர் அனைத்து சிரமங்களையும் சமாளிக்க முடியும். வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க சாணக்கியரின் கொள்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அனைவருமே வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இருப்பினும், மனிதனின் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறிக்கும் சில விஷயங்களைப் பற்றி சாணக்கிய நீதியில் பேசியுள்ளார். சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி வாழ்க்கையில் சிலர் எப்போதும் நிம்மதியாக வாழ முடியாது.

வசிக்கும் இடம்
நீங்கள் வசிக்கும் இடம் நன்றாக இல்லை என்றால், அங்கு வசிக்க வேண்டாம் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால், அத்தகைய இடங்களில் வாழ்வது ஒரு நபருக்கு வாழ்க்கையில் பல ஆபத்துகளைத் தரும் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் இழப்புகளை மட்டுமே சந்திப்பார்கள். இது உங்கள் குழந்தையின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.
தவறு செய்பவர்களுக்கு உதவாதீர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, தவறு செய்பவருக்கு உதவுவது அநீதியாக கருதப்படுகிறது. அத்தகைய நபர்களுடனான தொடர்பு அவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்களின் சகவாசத்தால் ஒரு நல்ல மனிதனும் கெட்டவனாகிறான். எனவே நீங்கள் ஒருபோதும் தவறு செய்பவர்களுக்கு உதவக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
மோசமான உணவு
தீங்கு விளைவிக்கும் உணவை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். வாழ்க்கைக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதை உண்ணும் முறையும் முக்கியம். உணவை அவமதிப்பது உங்களின் வாழ்க்கையில் பெரிய பாவமாக மாறும். மோசமான உணவை சாப்பிட்டால், நோய்களின் பிடியில் சிக்கி உங்கள் வாழ்க்கை பாழாகிவிடும்.
மனைவியின் குணம்
மனைவி நல்லவராக இருந்தால் ஒருவரின் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ஆனால் அவர்களின் நடத்தை மோசமாக இருந்தால், அவர் மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் பெண்ணாக இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் அதிக சிரமப்படுவீர்கள். அத்தகைய மனைவியைக் கொண்டவர்களின் வாழ்க்கை எப்போதும் ஆபத்தில் இருக்கும், அவர்களது திருமண வாழ்க்கை எப்போதும் சர்ச்சைகளில் சிக்கியிருக்கும்.
முட்டாள் மகன்
மகன் முட்டாளாக இருந்தால், பெற்றோரின் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். தவறான செயல்களில் ஈடுபடும் ஒரு முட்டாள் மகன் எப்போதும் பிரச்சனையை உருவாக்குவான் என்று அவர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
