Latest Updates
-
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்!
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் எதிரிகளே இருக்க மாட்டார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மனிதர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக பல வழிகளைக் கூறியுள்ளார். சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி மனிதர்கள் அனைவருக்குமே எதிரிகள் உள்ளனர். எதிரிகள் இல்லாத வாழ்க்கையில் ஒருபோதும் வளர்ச்சி இருக்காது. தனது எதிரியை பலவீனமாகக் கருதுபவர்கள் எப்போதும் வெற்றியை அடைய முடியாது.
எனவே எதிரிகளிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் எதிரி வாய்ப்பு கிடைக்கும் போது உங்களை வீழ்த்தி விடுவார்கள். சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் இரண்டு வகையான எதிரிகள் இருக்கிறார்கள். ஒருவர் நம் கண்ணுக்குத் தெரியும் எதிரி, மற்றொருவர் கண்ணுக்கு தெரியாத நோய்கள் போன்ற எதிரி.

நீங்கள் எதிரியை தோற்கடிக்க விரும்பினால், சாணக்கியரின் சில அறிவுரைகளை உங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் எதிரிகளை தோற்கடிக்க சில அறிவுரைகளைக் குறிப்பிட்டுள்ளார், அவற்றை பின்பற்றினால் உங்கள் எதிரிகளை எளிதில் வெல்ல முடியும். எதிரிகளை தோற்கடிக்க சாணக்கியர் சொல்லும் தந்திரங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தவறான நண்பர்களைத் தவிர்க்க வேண்டும்
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, ஒருவர் தனது குடும்பத்தை விட, தனது நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களுடன்தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். எனவே ஒருவர் தான் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் தவறான நபர்களுடன் நண்பராக இருந்தால், எதிரிகள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பார்கள். எனவே நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பேச்சில் கவனம் செலுத்துவது முக்கியம்
சாணக்கிய நீதியின் படி, ஒருவர் எப்போதும் தனது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், உங்கள் எதிரிகள் அதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். உங்கள் பேச்சு மோசமாக இருந்தால், அது உங்கள் உறவுகளை மோசமாகப் பாதிக்கும். உங்களின் பேச்சு மோசமானதாக இருந்தால் உங்களுடைய நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூட உங்களை விட்டு விலகத் தொடங்குவார்கள். பொதுவாக மக்கள் தவறாகவும், கடுமையாகவும் பேசுபவர்களிடமிருந்து விலகி இருப்பார்கள். ஒற்றுமையே பலம் என்பதை மறந்து விடாதீர்கள்.
தவறான பழக்கங்களை கைவிட வேண்டும்
ஒருவர் வாழ்க்கையில் வெற்றிபெற போதைப் பழக்கம் போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். போதைக்கு அடிமையானவர்களை எதிரிகளால் எளிதில் தோற்கடிப்படுவார்கள். ஒரு குடிகாரன் தனது புத்திசாலித்தனத்தையும், திறமையையும் ஒருபோதும் சரியாக பயன்படுத்த முடியாது, அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் பல தவறுகளைச் செய்கிறார்கள், அதை அவர்களின் எதிரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எதிரியைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்
உங்கள் எதிரியை நீங்கள் தோற்கடிக்க விரும்பினால், உங்கள் எதிரி பற்றிய அனைத்து விஷயங்களையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் எதிரியின் பலத்தை நீங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. உங்கள் எதிரியைப் பற்றிய முழுமையான தகவல்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் அவர்களை எளிதாக தோற்கடிக்கலாம்.
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்
மரத்தில் உள்ள சிறு நெருப்பு அதை முழுவதுமாக அழிப்பது போல, ஒரு மனிதனுக்குள் எரியும் கோபம் எனும் நெருப்பு அவருடைய மொத்த புத்திசாலித்தனத்தையும் அழிக்கிறது. கோபத்தில், ஒரு நபர் தனது சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனை இழக்கிறார். இதை அவர்களின் எதிரிகள் சாதகமாக்கிக் கொள்வார்கள். நீங்கள் தோல்வியே அடைந்தாலும், அதை உங்கள் எதிரிகள் தெரிந்து கொள்ள அனுமதிக்காதீர்கள். மனதை அமைதியாக வைத்துக் கொண்டால், எதிரியை வெல்லும் ஆற்றல் உங்களுக்குள் வளரும்.



Click it and Unblock the Notifications
