Latest Updates
-
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள்
சாணக்கிய நீதி படி இந்த 6 விஷயங்களை சரியா பண்றவங்களுக்கு அழகான மற்றும் நிம்மதியான வாழ்க்கை கிடைக்குமாம்...!
Chanakya Niti: ஒருவர் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனநிலை இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் வாழ்க்கை இனிமையாகத் தோன்றும். பண்டைய இந்தியாவின் சிறந்த இராஜதந்திரியான சாணக்கியரும் இதைத்தான் சொல்கிறார்.
சாணக்கியர் அறிவுரைகள் இருள் நிறைந்த வாழ்க்கையில் ஒளிவிளக்காக உதவும். அவரின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் எந்த போராட்டத்திலும் இருந்து எதிர்நீச்சல் போட்டு வெளியே வந்து விடலாம். சாணக்கியரின் அறிவுரைகள் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. அழகான வாழ்க்கைக்கு சாணக்கியர் கூறும் சிறந்த அறிவுரைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கல்வி
படித்தவர்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் மதிக்கப்படுகிறார்கள். கல்வி இளமையையும் அழகையும் எளிதில் வென்றுவிடும். நீங்கள் படித்தவராக இருந்தால், நீங்கள் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவீர்கள். ஒரு பணக்காரனின் செல்வமும் அழகும் காலப்போக்கில் மங்கலாம், ஆனால் கல்வியும் அறிவும் ஒருபோதும் அழியாது. வேறு யாரும் அதை உங்களிடமிருந்து பறிக்க முடியாது.
பணத்தை சேமிக்க வேண்டும்
வாழ்க்கையில் ஒழுக்கமாக இருப்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்கிறார் சாணக்கியர். அனைவரும் பண விஷயத்தில் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இது சாணக்கிய நீதியில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. பணத்தை எவ்வாறு சரியாக கையாள்வது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
உங்களிடம் பணம் இல்லையென்றால், உங்கள் நிலை மோசமாகிவிடும். குறிப்பாக, நீங்கள் வயதாகும்போது, இதனால் நீங்கள் அதிகம் பாதிக்கப்படுகிறீர்கள். எனவே பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதை அனைவரும் கற்றுக்கொள்வது அவசியம். உங்களின் கஷ்ட காலத்திற்கு உங்கள் சேமிப்பிலிருந்து கொஞ்சம் பணத்தை சேமிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
நேரம் தவறாமை
வாழ்க்கையில் நேரம் மிகவும் முக்கியமானது. சாணக்கியர், தங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து, தங்கள் பணிகளை ஒழுங்கமைப்பவர்கள் ஒருபோதும் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று கூறுகிறார்.
ஒழுக்கமான வாழ்க்கையை நடத்துபவர்கள் தங்கள் இலக்குகள் அனைத்தையும் அடைவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அதாவது சரியான நேரத்திற்கு உணவு உண்பது, தூங்குவது, சரியான நேரத்திற்கு எழுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பது அவசியம்.
தானம்
அறம் சார்ந்த வாழ்க்கையே அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சாணக்கியர் கூறுகிறார். நாம் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை நற்செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு நீங்கள் தன்னலமின்றி உதவி செய்யும் போது, நீங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் சோகமாகவும் மகிழ்ச்சியற்றவராகவும் இருக்க மாட்டீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
இன்று நீங்கள் செய்யும் தன்னலமற்ற உதவி உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும். எனவே உங்கள் முதுமை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். எனவே உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.
புத்திசாலித்தனமான முடிவுகள்
ஒருவரின் நடத்தையே அவரது ஆளுமையின் அடையாளமாகும். எனவே ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள ஒவ்வொருவருக்கும் புத்திசாலித்தனம் தேவை. இல்லையெனில், அவர்கள் எளிதில் சிக்கலில் சிக்குவார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு மனிதன் மோசமான நேரங்களிலும் தன் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் எப்போதும் கஷ்டங்களை சந்திக்க நேரிடும். எனவே, வாழ்வின் இலக்கை அடையவும், சுயநலம் நிறைந்த இவ்வுலகில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஒவ்வொருவரும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ரகசியங்களை பகிர்ந்து கொள்ளகூடாது
உங்கள் ரகசியங்களை ஒருபோதும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, எந்த சூழ்நிலையிலும் உங்கள் பலவீனங்களையோ பலத்தையோ யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு எதிராக எப்போது இந்த விஷயங்களைப் பயன்படுத்துவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. அதுபோன்ற தருணத்தில் உங்களின் தோல்வி தவிர்க்க முடியாததாக மாறிவிடும்.



Click it and Unblock the Notifications
