Latest Updates
-
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள்
சாணக்கிய நீதி படி திருமணமானவர்கள் இந்த தவறுகளை அவங்க வாழ்க்கையில் தெரியாம கூட பண்ணிடக்கூடாதாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் தத்துவஞானி. அவர் ஒரு திறமையான அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரியாகவும் இருந்தார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தவிர மனித வாழ்வின் பல அம்சங்களை சாணக்கியர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியரின் கொள்கைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன, அதனால்தான் இன்றும் சாணக்கிய நீதி மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.

சாணக்கிய நீதியில் திருமண வாழ்க்கையைப் பற்றிய பல விஷயங்களை சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். திருமண வாழ்வில் சாணக்கியரின் அறிவுரைகளை பின்பற்றினால் மகிழ்ச்சியான திருமணத்தை அனுபவிக்க முடியும்.
திருமண வாழ்க்கையை அழிக்கும் சில தவறுகளைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். கணவன்-மனைவி செய்யும் இந்த சிறு தவறுகள் அவர்களது உறவை விரைவில் முறித்துவிடும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கிண்டல்
வாழ்க்கையில் மகிழ்ச்சியும், துக்கமும் சூரியனும் நிழலும் போல மாறி மாறி வரக்கூடியவை. ஒரு மனிதனின் வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். கணவனும் மனைவியும் எந்த விஷயத்திற்காகவும் ஒருவரை ஒருவர் கேலி செய்யக்கூடாது.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நம்முடைய வாய்தான் முக்கிய காரணம் என்று சாணக்கியர் நம்புகிறார். உங்கள் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை புறக்கணிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உங்கள் திருமண வாழ்க்கை விரைவில் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது.
பேசாமல் இருப்பது
உங்கள் திருமண வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், நீங்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்தக் கூடாது. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் அதுக்காக ஒருவரோடொருவர் பேசுவதை நிறுத்தாதீர்கள். இல்லையேல் சிறு சண்டையே பெரியதாக மாறும்.
ஒத்துழைப்பில் குறைபாடு
கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனைத்து பணிகளிலும் ஒத்துழைக்க வேண்டும். பெரும்பாலானோர் வீட்டு வேலைகள் பெண்களுக்கானது என்று நினைத்து அவர்களிடமே அனைத்து வேலைகளையும் விட்டு விடுகின்றனர். இது ஆரம்பத்தில் நன்றாகத் தோன்றினாலும் காலப்போக்கில் அது மோதலுக்கு வழிவகுக்கும். திருமண வாழ்வில் கணவன் மனைவி பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, இருவரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க வேண்டும்.
செலவு
வாழ்க்கையை ஒழுங்காக வாழ பணம் மிகவும் அவசியம். பணத்தைப் பயன்படுத்துவதில் தம்பதிகளிடையே தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே கணவன்-மனைவி இடையேயான உறவு சுமூகமாக இருக்கும். தம்பதிகளில் ஒருவர் மட்டும் இதைக் கையாளத் தொடங்கினால், திருமண வாழ்க்கைப் பாழாகிவிடும்.
அவமரியாதை
ஒரு உறவில் மரியாதை குறையும்போது அது பல்வேறு பிரச்சினைகளை நோக்கி அழைத்துச் செல்லும். சாணக்கிய நீதியின்படி, இந்த தவறை தம்பதிகள் அவசியம் தவிர்க்க வேண்டும். திருமண உறவில் ஒரு ஆணோ பெண்ணோ அவமரியாதையாக நடந்து கொண்டால், அது விரைவில் அவர்களின் திருமணத்தில் நிரந்தர பிரிவுக்கு வழிவகுக்கும்.
கோபம்
கோபம் என்பது கணவன் மனைவி உறவை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் ஒரு மோசமான உணர்ச்சியாகும். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். சாணக்கிய நீதியின்படி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கோபம் வரும்போது, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பிரச்சனையை நிதானமாகச் சமாளிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
