Latest Updates
-
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்கள் ஒருவர் பிறப்பதற்கு முன்னரே எழுதப்பட்டவை... இதை யாராலும் மாற்றமுடியாதாம்...!
கௌடில்யர் மற்றும் விஷ்ணுகுப்தர் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சாணக்கியர் இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு ஞானி ஆவார். அவரின் அறிவுரைகள் மற்றும் தத்துவங்கள் எக்காலத்திற்கும் பொருந்துபவையாக உள்ளன.
தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையில் வெற்றிக்கான ரகசியங்களையும், அதற்கான நெறிமுறைகளைப் பற்றியும் சாணக்கியர் விளக்கியுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி ஒருவரின் விதியானது அவர் தாயின் கருவில் இருக்கும்போதே எழுதப்பட்டு விடுகிறது. அவர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதனை மாற்ற முடியாது.

ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பே அவருக்கான சில விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆயுள்
ஒரு மனிதன் பிறந்த பிறகு, அந்த உடலில் அவர் பூமியில் எவ்வளவு காலம் செலவிடுவார் என்பது முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. அதாவது, அந்த நபரின் ஆயுட்காலம் முன்னரே தீர்மானிக்கப்பட்டது. அதன்படியே ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கிறார். உலக இன்ப துன்பங்களை அனுபவித்த பிறகு, ஒரு குறிப்பிட்ட தேதியில் இறந்து விடுகிறார். அவர் இந்த பூமியில் எத்தனை முயற்சி செய்தாலும் அவரால் விதியை வெல்லவோ, ஆயுளை அதிகரிக்கவோ முடியாது.
கர்மா
உங்கள் செயல்கள் நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அதற்கான பலன்களை நீங்கள் அடைந்தே தீருவார்கள் என்று சாணக்கியர்கூறுகிறார். கர்மவினையின்படியே ஒருவரின் வாழ்வின் தலைவிதியும் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி மற்றும் நிம்மதியின்மை உங்கள் கடந்தகால கர்மங்களின் விளைவு என்று சாணக்கியர் கூறுகிறார். நிகழ்காலத்தில் நல்லது செய்வதன் மூலம் உங்கள் கர்மாவை மேம்படுத்தலாம். ஆனால் கடந்த கால கர்மாவின் கணக்கை உங்களால் மாற்ற முடியாது. உங்கள் பிறப்பின் இன்ப துன்பங்கள் அனைத்தும் உங்கள் பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்டவை என்று சாணக்கியர் கூறுகிறார்.
செல்வம்
ஒரு நபர் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும், அவர் வாழ்க்கையில் எவ்வளவு கல்வி பெறுவார் என்பது அவரது விதியில் எழுதப்பட்டுள்ளது என்று சாணக்கியர் நம்புகிறார். அதைத் தாண்டி எதைச் சாதிக்க முயன்றாலும், ஏமாற்றமே மிஞ்சும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
மரணம்
ஒருவர் பிறக்கும் நாளிலேயே, அவர் இறக்கும் தேதி, இடம் மற்றும் நேரம் தீர்மானிக்கப்படுகிறது என்று சாணக்கியர் கூறுகிறார். மரணத்தைத் தவிர்க்க முடிவில்லா முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, இதனால் மற்றவர்களுக்கு வலி ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இவ்வுலகை விட்டு வெளியேற வேண்டும் என்று சாணக்கியர் கூறினார். உங்களாலும் உங்கள் அன்புக்குரியவர்களாலும் மரணத்தைத் என்ன செய்தாலும் தடுக்க முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications

