Latest Updates
-
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த குணங்கள் இருக்கும் பெண்கள் உங்க வாழ்க்கையில் நுழைந்தால் உங்க வாழ்க்கை நரகம்தான்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அறிஞர். அவர் அரசியல், இராஜதந்திரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நிபுணராக இருந்தார். சாணக்கியர் மனித வாழ்க்கையை பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளையும் அறிந்தவர். தனது புத்திக்கூர்மையால் சந்திரகுப்த மௌரியரை அரியணையில் அமர்த்தியவர்.
சாணக்கியர் தனது அனுபவத்தின் அடிப்படையில் மனித வாழ்க்கை தொடர்பான சில விஷயங்களைக் தன்னுடைய சாணக்கிய நீதி புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, சில பெண்களிடம் அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தீய குணங்கள் உள்ளன. பெண்களின் அழிவுக்குக் காரணமான, குடும்ப அமைதியைக் குலைக்கும் அந்த விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொய் பேசுதல்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெரும்பாலான பெண்கள் பொய் சொல்லும் போக்கைக் கொண்டுள்ளனர். பொய் சொல்வது அல்லது ஏமாற்றுவது மட்டுமல்ல, மற்றவர்களை தவறாகப் பேசுவதும் ஒரு தீய குணம்தான். இந்த பழக்கங்கள் ஒரு நாள் அவர்களின் வாழ்க்கையை மோசமாக்கும்.
சில பெண்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி கிசுகிசுப்பதையும், சிறிய விஷயங்களைக் கூட பெரிதுபடுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அத்தகைய பெண்களை யாரும் நம்ப மாட்டார்கள். இந்த பெண்களுக்கு குடும்பத்தினரிடம் இருந்தும், மற்றவர்களிடமிருந்தும் மரியாதை கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட பெண்களைக் கொண்ட வீடு எப்போதும் பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் இருக்கும்.
பெரியவர்களை மதிக்காமல் இருக்கும் பெண்கள்
பெரியவர்களை மதிக்காத பெண்கள் அனைவரிடமும் அநாகரிகமாக பேசுவார்கள் அல்லது அனைத்து விஷயங்களுக்கும் சண்டை போடுவார்கள். அத்தகைய பெண்கள் வீட்டின் அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அத்தகைய பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தால் ஒரு ஆண் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பெரியவர்களை மதிக்காத பெண்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு கேடு விளைவிப்பார்கள் என்கிறார் சாணக்கியர்.
கோபக்கார பெண்கள்
சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படுவது பெண்களின் பழக்கம். இருப்பினும், எல்லாவற்றுக்கும் கோபம் கொள்வது சரியல்ல. எனவே இதை மனதில் வைத்து எல்லாவற்றிலும் தந்திரமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் எதிரில் இருப்பவர் சில சமயங்களில் உங்கள் மீது அதிக கோபம் கொள்வதால் அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். கோபமான பெண்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பணத்தின் மீது பேராசை கொண்ட பெண்கள்
சில பெண்கள் பணத்தின் மீது பேராசை கொண்டவர்கள் என்கிறார் சாணக்கியர். பேராசையால் தவறான செயல்களையும் செய்கிறார்கள். இது பிற்காலத்தில் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் சிக்கலை ஏற்படுத்துகிறது. பணத்தின் மீது பேராசை ஒரு மோசமான பழக்கமாகும். உங்களிடம் இந்த பழக்கம் இருந்தால், விரைவில் இந்த தீய குணத்திலிருந்து வெளிவந்து விடுங்கள். இல்லாவிட்டால் அதன் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
சுயநலம் கொண்ட பெண்கள்
ஒரு பெண் தன் வாழ்க்கையைப் பற்றி மட்டுமின்றி, ஒட்டுமொத்த குடும்பத்தின் நன்மையைப் பற்றியும் நினைத்து வாழ வேண்டும். ஆனால் இது எல்லா வீட்டிலும் நடப்பதில்லை. சில பெண்கள் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது கடினம். சிலர் பணம் மற்றும் உடைமைகளில் அதிக சுயநலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெண்களின் இத்தகைய நடத்தை குடும்ப உறுப்பினர்களிடையே பிளவை ஏற்படுத்தும். அத்தகைய குடும்பத்தில் எப்போதும் வாக்குவாதங்கள் இருக்கும்.
கடவுள் நம்பிக்கை இல்லாத பெண்கள்
வீட்டில் உள்ள பெண்கள் தவறாமல் கடவுள் வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார் சாணக்கியர். பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யாத வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க ஆரம்பித்து வீட்டின் மகிழ்ச்சியும் அமைதியும் அழிந்துவிடும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.



Click it and Unblock the Notifications
