Latest Updates
-
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் மிகவும் மோசமான மனைவியாக இருப்பார்களாம்... இவங்ககிட்ட வந்தா ஓடிருங்க!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு சிறந்த அறிஞராவார். வாழ்க்கையின் அனைத்து விஷயங்களைப் பற்றியும் அவருக்கு ஆழ்ந்த ஞானம் இருந்தது. சாணக்கியரின் அனுபவங்களின் தொகுப்பான சாணக்கிய நீதியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான உறவையும் அவர்களின் குணங்களையும் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும் ஒருவரின் வாழ்வை மற்றொருவர் பூர்த்தி செய்கிறார்கள், ஆனால் பரஸ்பர ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால், கணவன்-மனைவி இடையேயான உறவு ஒருபோதும் நன்றாக இருக்காது. கணவன்-மனைவி இடையே ஒருவரையொருவர் புரிந்து கொள்வதின் அடிப்படையிலேயே உறவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது இல்லாத வீடுகளில் எப்போதும் அமைதியின்மையும் சோகமும் நிறைந்த சூழல் இருக்கும்.
திருமணத்திற்குப் பிறகு, ஒரு பெண் தனது கணவர் மற்றும் அவரது முழு தலைமுறையினரின் மகிழ்ச்சிக்கு காரணமானவராக மாறுகிறார். மனைவி நல்லொழுக்கமுள்ளவராக இருந்தால், அவர் கணவனுக்கு முன்னேற்றத்தையும் குடும்பத்திற்கு செழிப்பையும் தருகிறார். ஆனால் மனைவியின் குணாதிசயம் மோசமாக இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதிக்கும். சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள சில அறிகுறிகளை வைத்தே மோசமான மனைவியை அடையாளம் கண்டு கொள்ளலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிந்தித்து பேசாமல் இருப்பது
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு மனைவி தனது பேச்சில் கட்டுப்பாடு இல்லாத மற்றும் மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அது குடும்பத்தை நாசமாக்குவதாகக் கருதப்படுகிறது. அத்தகைய பெண்கள் மற்றவர்களை துன்பறுத்தும் வார்த்தைகளையும் சொல்கிறார்கள். அத்தகைய பெண்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. இது கணவருக்கும், குடும்பத்தாருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
புரியாமல் கோபப்படுபவர்கள்
கோபம் அனைவருக்கும் பொதுவான இயல்பாகும். ஆனால் காரணமே இன்றி, எதையும் புரிந்து கொள்ளாமல் கோபம் கொள்ளும் மனைவி தன் கணவரின் வாழ்க்கையை கஷ்டப்படுத்துகிறார். கணவர் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக கோபமான மனைவியை விட்டுவிடுவது நல்லது என்று சாணக்கியர் கூறுகிறார்.
குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள்
வீட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் மனைவியுடன் வாழ்க்கை அவ்வளவு சுமூகமாக இருக்காது. அத்தகைய பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்க முடியாது. இதனால் உங்கள் முழு தலைமுறையும் மோசமான விளைவுகளை அனுபவிக்கலாம். இப்படிப்பட்ட மனைவிகள் கணவனுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவார்கள் என்கிறார் சாணக்கியர்.
மோசமான வார்த்தைகளை பேசுபவர்கள்
சாணக்கிய நீதியின் படி, மோசமான மற்றும் கடுமையான வார்த்தை பேசுபவர்களை விட்டுவிடுவது நல்லது. ஏனென்றால் கெட்ட வார்த்தைகள் ஆயுதங்களை விட கடுமையாக தாக்கக்கூடியவை. அத்தகைய பெண்கள் சிந்திக்காமல் கெட்ட வார்த்தைகளைப் பேசுவார்கள், மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தும் மனைவி குடும்பத்தின் நன்மதிப்பைக் கெடுக்கிறார்கள்.
பேராசை கொண்ட மனைவி
அதிக பேராசை கொண்ட மனைவி தன் கணவனுக்கு கெட்ட காலத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்று சாணக்கியர் கூறுகிறார். மனைவி அதிகமாகச் செலவு செய்வதைத் தடுத்தாலோ அல்லது பணம் கொடுப்பதை நிறுத்தினாலோ கணவன் மனைவிக்கு எதிரியாகி விடுகிறார். தன்னுடைய பேராசையால் குடும்பத்தில் பிரச்சனைகளை உருவாக்க அவர் தயங்குவதில்லை. அப்படிப்பட்ட மனைவியை விட்டு விலகுவதே நல்லது என்கிறார் சாணக்கியர்.
வேறொரு ஆணுடன் உறவில் இருப்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணோ அல்லது நல்ல குணம் இல்லாத பெண்ணோ அவருடைய கணவருடைய மிகப்பெரிய எதிரி. சாணக்கியரின் கூற்றுப்படி, தவறான செயல்களில் ஈடுபடும் ஒரு மனைவி தன் கணவனை தன்னுடைய சுதந்திரத்தைத் தடுக்கும் எதிரியாகக் கருதத் தொடங்குகிறார். இதனால் கணவரின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். அப்படிப்பட்ட மனைவியை விட்டுவிடுவது நல்லது என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications
