Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வது உங்களுக்கு அளவில்லா அவமானத்தை தேடித்தருமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் உலகின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றியும், நிம்மதியையும் பெற வேண்டும் என்று பல கொள்கைகளை அவர் வழங்கியுள்ளார். இந்த அறிவுரைகளை இன்றும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர் எழுதிய சாணக்கிய நீதி இன்றும் பலருக்கு உத்வேகமாக உள்ளது. ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையில் வெற்றி மற்றும் முன்னேற்றம் அடைய பல ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

வாழ்க்கையில் ஒருவர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் சொல்லியிருக்கிறார். அதன் மூலம் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை தவிர்க்கலாம். சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் வாழ்க்கையில் சில ரகசியங்கள் உள்ளன, அதை நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பலவீனங்கள்
உங்கள் பலவீனத்தைப் பற்றி யாரிடமாவது சொல்வது உங்களை எதிர்காலத்தில் காயப்படுத்தலாம். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் தனது பலவீனத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது. உங்கள் குறைபாடுகளைப் பற்றி மக்கள் அறிந்தவுடன், அவர்கள் அவற்றைப் பயன்படுத்தி உங்களைத் துன்புறுத்தலாம்.
குடும்ப ரகசியங்கள்
உங்கள் குடும்பத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், நீங்கள் தற்செயலாக கூட வீட்டு விஷயங்களை யாரிடமும் சொல்லவேண்டாம். இதனால் உங்கள் குடுமபத்தினர் அவமானத்தை சந்திக்க நேரிடும். உங்கள் உறவில் ஏற்படும் விரிசல்களை மற்றவர்கள் தேவையில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால்தான் உங்கள் குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
உங்களின் கவலைகள்
பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது, மக்கள் தங்கள் கவலைகளை நண்பர்கள் அல்லது துணையிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் சாணக்கிய நீதியின்படி இது மிகவும் தவறானதாகும். நம் துக்கங்களை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால், அதை மற்றவர்களிடம் அவர்கள் கேலி செய்யலாம் என்கிறார் சாணக்கியர்.
உங்கள் பிரச்சனைகளை யாரிடமாவது சொன்னால் மற்றவர்கள் கேலி செய்வார்கள். எனவே உங்கள் துக்கங்களை நீங்களே வைத்துக் கொள்வது நல்லது. எனவே உங்கள் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு முன்னால் உங்கள் கவலைகளை ஒருபோதும் வெளிப்படுத்த வேண்டாம்.
மனைவியின் குணம்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, கணவன் தன் மனைவியின் மோசமான குணத்தைப் பிறர் முன்னிலையில் வெளிப்படுத்தக் கூடாது. இப்படிச் செய்வதால் உங்கள் மனைவி அவமதிக்கப்படலாம். மேலும், அவர்கள் எதிர்காலத்தில் அதனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
உங்களுக்குள் நடக்கும் சண்டைகள், துக்கங்கள் மற்றும் நடத்தை பற்றி மற்றவர்களிடம் சொன்னால், எதிர்காலத்தில் நீங்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். பெண்களோ அல்லது ஆண்களோ தங்கள் துணையைப் பற்றி மற்றவர்களிடம் தவறாகப் பேசக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
நிதிநிலை
சாணக்கிய நீதியின் படி, ஒரு நபர் பணத்தை இழந்த செய்தியை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. பெரும்பாலும் பண இழப்பு காரணமாக, பெரும்பாலானவர்கள் வருத்தப்பட்டு மற்றவர்களிடம் சொல்கிறார்கள். இப்படி செய்வது தவறு. ஏனென்றால், உங்கள் நிதி நிலை மோசமடைந்து வருவதை யாராவது அறிந்தால், யாரும் உங்களுக்கு உதவ மாட்டார்கள் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications
