Latest Updates
-
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
ஆந்திரா முட்டைக்கோஸ் பச்சடி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
தங்க நகைகள் ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி கொடுக்கப்படுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணுங்க.. -
அரிசி மாவும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அமெரிக்க டாலரில் $ சின்னம் ஏன் உள்ளது தெரியுமா? அதன் அர்த்தமும், வரலாறும் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்..
சாணக்கிய நீதி படி மனைவி இந்த 3 ரகசியங்களை கணவரிடம் தெரியாமல் கூட சொல்லிடக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
Chanakya Niti: உலகின் மிகவும் புனிதமான உறவுமுறைகளில் ஒன்று கணவன்-மனைவி இடையேயான உறவாகும். இது அன்பு, நம்பிக்கை மற்றும் மரியாதையை அடிப்படையாகக் கொண்டது. உறவில் இந்த விஷயங்கள் இல்லாததால் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவன்-மனைவி இடையே பரஸ்பர ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. கணவன்-மனைவி எப்போதும் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருக்க வேண்டும்.

வாழ்க்கையை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதுடன், அவர்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்கிறார்கள். துக்கமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, இருவரும் அனைத்தையும் ஒன்றாக பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் அந்த உறவு இறுதி வரை வலுவாக இருக்கும்.
திருமண பந்தம் வலுவாக இருக்க, ஒருவருக்கொருவர் ரகசியம் காக்கக்கூடாது. ஆனால் சாணக்கியரின் கூற்றுப்படி, பெரும்பாலான மனைவிகள் தங்கள் கணவரிடம் சொல்லாத சில விஷயங்கள் உள்ளன. அப்படி அந்த ரகசியத்தை வெளியே கூறினால் திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த பதிவில் மனைவி கணவரிடம் சொல்லக்கூடாத ரகசியங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மாமியாரின் தவறுகள்
திருமணத்திற்குப் பிறகு, பெண்கள் தங்கள் மாமியாரின் குறைகள் மற்றும் தவறுகளை மறைக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். தங்கள் கணவரிடம் இவற்றை பற்றி ஒருபோதும் சொல்லக்கூடாது. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படும். இதனால் கணவன் மனைவி உறவில் பாதிப்பும், விரிசலும் ஏற்படும்.
தானம்
ஒரு கை செய்யும் தானம் மற்றொரு கைக்கு தெரியாத போதுதான், தனத்தின் முழு பலனையும் பெறுவீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். தானத்தை அனைவர்களிடமும் வெளியே சொல்வது அதன் விளைவை நிறுத்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மனைவி ஏதாவது தானம் செய்தால், கணவரிடம் சொல்லவே கூடாது என்கிறார் சாணக்கியர்.
சேமிப்பு
சாணக்கியரின் கூற்றுப்படி, மனைவி தனது கணவரின் அல்லது தனது சொந்த சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை செலவழிக்காமல் வைத்திருக்க வேண்டும். அதை ஒருபோதும் தங்கள் கணவரிடமும் சொல்லக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். இந்த பணம் குடும்பத்தின் கடினமான காலங்களில் பயன்படுத்தப்படலாம். இதை செய்யாவிட்டால், சேமிப்பு ஏதாவது ஒரு வகையில் வீணாகிவிடும் என்கிறார் சாணக்கியர்.
மகிழ்ச்சியான திருமணத்திற்கான சாணக்கியரின் அறிவுரை
மனைவி தங்கள் கணவரை வேறொரு ஆணுடன் ஒப்பிடக் கூடாது. இப்படிச் செய்வதால் கணவரின் மானம் போவதுடன் திருமண வாழ்வில் பதற்றம் ஏற்படத் தொடங்கும் என்கிறார் சாணக்கியர். இது கணவர்களுக்கும் பொருந்தும். கணவன் தன் மனைவியை வேறொரு பெண்ணுடன் ஒருபோதும் ஒப்பிடவே கூடாது.
மரியாதைக்குரிய நடத்தை
சாணக்கியரின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்த வேண்டும். மரியாதை மற்றும் பணிவால் மனதை வெல்ல முடியும். கண்ணியமான நடத்தை கோபத்தை நீக்குகிறது, எனவே திருமண வாழ்க்கையில் உங்களுக்குள் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.



Click it and Unblock the Notifications
