Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி மனைவிகள் இந்த ரகசியங்களை ஒருபோதும் கணவரிடம் சொல்லக்கூடாதாம்...இல்லனா பிரச்சினைதான்!
கணவன்-மனைவி இடையே இருக்கும் உறவானது அன்பு, நம்பிக்கை, பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த விஷயங்கள் உறவில் குறையும்போது அது திருமண வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்துகிறது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவன்-மனைவி இடையே பரஸ்பர ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.
வாழ்க்கையை தனித்தனியாக வாழ்வதைத் தவிர்த்து, தம்பதிகள் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ வேண்டும். துக்கமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, இருவரும் அனைத்தையும் ஒன்றாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதனால் அந்த உறவு காலத்திற்கும் நிலைத்திருக்கும். திருமண பந்தம் வலுவாக இருக்க, தம்பதிகள் ஒருவருக்கொருவர் எந்த ரகசியத்தையும் வைத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் சாணகியரின் கூற்றுப்படி, பெரும்பாலான மனைவிகள் தங்கள் கணவரிடம் சொல்லாக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. ஏனெனில் அவர்கள் அந்த ரகசியத்தைக் கூறினால், திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மாமியாரின் தவறுகள்
திருமணத்திற்குப் பிறகு, பெண்கள் தங்கள் மாமியாரின் குறைகள் மற்றும் தவறுகளை மறைக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கணவன் மனைவி உறவில் பாதிப்பு ஏற்படும் மற்றும் திருமண வாழ்வில் இடையூறு ஏற்படும்.
தானம்
வலது கை செய்யும் தானம் இடது கைக்கு தெரியக்கூடாது, அப்போதுதான் நீங்கள் அதற்கான முழுப்பலனைப் பெறுவீர்கள். செய்த தானத்தை சொல்லிக்காட்டும்போது அதனால் பலன்கள் கிடைக்காமல் போகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவி ஏதாவது தானம் செய்தால் அதை கணவரிடம் ஒருபோதும் சொல்லக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
சேமிப்பு
சாணக்கியரின் கூற்றுப்படி, மனைவி தனது கணவரின் அல்லது அவரது சொந்த சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை செலவழிக்காமல் சேமிக்க வேண்டும். ஆனால் அதனை எப்போதும் கணவரிடம் சொல்லக்கூடாது. இந்த பணம் குடும்பத்தின் கடினமான காலங்களில் உதவியாக இருக்கும். இந்த சேமிப்பை முன்கூட்டியே கணவரிடம் சொன்னால் அது வேறு விஷயங்களுக்கு செலவு செய்யப்படலாம்.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான தந்திரங்கள்
மனைவிகள் தங்கள் கணவரை வேறொரு ஆணுடன் எப்போதும் ஒப்பிடக் கூடாது. இப்படிச் செய்வதால் கணவரின் சுயமரியாதையை பாதிக்கும், இதனால் திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படத் தொடங்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். இது கணவர்களுக்கும் பொருந்தும், அவர்கள் தங்கள் மனைவியை வேறொரு பெண்ணுடன் ஒருபோதும் ஒப்பிடவே கூடாது.
மரியாதைக்குரிய நடத்தை
சாணக்கியரின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்த வேண்டும். பணிவால் யாருடைய மனதையும் வெல்ல முடியும். கண்ணியமான நடத்தை கோபத்தை நீக்குகிறது, எனவே திருமண வாழ்க்கையில் உங்களுக்குள் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல்
கோபத்தைக் கட்டுப்படுத்தினால் திருமண வாழ்க்கை வெற்றி பெறும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒருவர் கோபமாக இருக்கும்போது அவரால் நல்லது கெட்டதை பிரித்து பார்க்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், உறவில் விரிசல் ஏற்படலாம். எனவே மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவனும் மனைவியும் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications

