Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
சாணக்கிய நீதி படி இந்த 5 விதிகளை பின்பற்றுபவர்கள் கோடி கோடியாக சம்பாதிப்பார்களாம்... உங்களால முடியுமா?
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அறிஞர். அவர் அந்த காலத்தில் உலகப் புகழ்பெற்ற தக்ஷஷிலா பல்கலைக்கழகத்தில் படித்தவர். பணம், உடல்நலம், வியாபாரம், திருமண வாழ்க்கை, சமூகம் என ஒரு மனிதனின் வாழ்க்கை பற்றி பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். மனிதர்களின் நலனுக்குத் தேவையானவற்றை சாணக்கிய நீதி என்ற நூலில் எழுதியுள்ளார். சாணக்கிய நீதியில் வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைக் காணலாம்.
ஒருவர் தனது வாழ்க்கையில் இந்த விஷயங்களை ஏற்றுக்கொண்டால், அவர் வெற்றியின் புதிய உயரங்களை அடைய முடியும். நீங்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ விரும்பினால், கண்டிப்பாக சாணக்கியரின் இந்த தந்திரங்களையும், அறிவுரைகளையும் மனதில் பின்பற்ற வேண்டும்.

அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்
அறிவே ஒரு மனிதனின் உண்மையான நண்பன். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபரின் அறிவு, அது புத்தக அறிவாக இருந்தாலும் அல்லது எந்த வேலை செய்யும் அனுபவமாக இருந்தாலும், ஒருபோதும் வீணாகாது. ஒரு புத்திசாலி தனது வாழ்க்கையில் எப்போதும் தோல்வியடைய மாட்டார். சாணக்கியர் அறிவு என்பது மனிதனுக்கு எல்லா காலங்களிலும் அமிர்தத்தை அளிக்கும் காமதேனு பசுவைப் போன்றது, எனவே அறிவு எப்போது, எங்கு கிடைத்தாலும் அதைப் பெற வேண்டும் என்று கூறுகிறார்.
அறிவு ஒருபோதும் வீணாகாது. அரசன் தன் ராஜ்ஜியத்தில் மட்டுமே மதிக்கப்படுகிறார், ஆனால் கற்றறிந்தவர் எல்லாப் பகுதிகளிலும் வணங்கப்படுகிறார்கள். ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் போது அறிவே ஒரு நபரின் மிகப்பெரிய பலமாகிறது. நீங்கள் கற்றுக்கொள்வதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது, ஏனென்றால் நீங்கள் எவ்வளவு கற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் முன்னேறுவீர்கள்.
நம்பிக்கை
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, தன்னம்பிக்கை என்பது ஒருவரை வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியடைய விடாது. தன்னம்பிக்கை கொண்ட மனிதனை யாராலும் வெல்ல முடியாது. தன்னம்பிக்கையின் துணையுடன், ஒருவர் மிகவும் கடினமான பணிகளிலும் சூழ்நிலைகளிலும் கூட வெற்றிக்கான பாதையை எளிதாகக் கண்டுபிடிப்பார்.
கடின உழைப்பு
ஒருவர் தனது கடின உழைப்பின் அடிப்படையில் சாத்தியமில்லாதது என்று நினைக்கும் அனைத்துக் காரியங்களையும் சாதிக்க முடியும். ஒருவர் தனது கடின உழைப்பிற்கான பலன்களை உடனடியாகப் பெறவில்லை என்றாலும் நிச்சயம் எதிர்காலத்தில் அடைவார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, கடின உழைப்பே வெற்றியின் அடிப்படை மந்திரம்.
எச்சரிக்கை
அனைத்து சூழ்நிலைகளிலும் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருப்பவர், வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியை சந்திக்க மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இது தவிர, சாணக்கியர் ஒருவர் தனது பணத்தை நன்கு பயன்படுத்த அறிவுறுத்துகிறார். சாணக்கிய நீதி படி, பணத்தை நன்றாகச் செலவழித்து, கெட்ட நேரங்களுக்குச் சேமித்து வைப்பவர் வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியடையமாட்டார்.
மற்றவர்களின் தவறுகளை கவனிப்பது
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு நபர் மற்றவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளும்போது, அவர் தனது சொந்த வாழ்க்கையில் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார். நீங்கள் வெற்றிபெற விரும்பினால், மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையின் அனைத்து பாடங்களையும் உங்களின் தவறுகளிலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.



Click it and Unblock the Notifications
