Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
சாணக்கிய நீதி படி நாயின் இந்த 4 குணங்கள் இருக்கும் ஆண்களை திருமணம் செய்யத்தான் பெண்கள் விரும்புவார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு திறமையான அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். மனித குலத்தின் நலனுக்காக அவர் பல நூல்களை எழுதியுள்ளார். புத்திசாலித்தனம் மற்றும் வாழ்க்கைப் பற்றி ஆழ்ந்த அறிவால் அவர் கௌடில்யர் என்று அழைக்கப்படுகிறார். இவர் எழுதிய சாணக்கிய நீதி நூலில் மனித வாழ்க்கை தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவரது கொள்கைகள் மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களைவிளக்குகின்றன. வாழ்க்கையில் வெற்றிபெற ஒரு மனிதன் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான விஷயங்களையும் சாணக்கியர் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சாணக்கியரின் கொள்கைகளின்படி, விலங்குகளின் குணங்களின் அடிப்படையில் மனித வாழ்க்கையில் சில விஷயங்கள் கூறப்படுகின்றன. இதில் சாணக்கியர், பெண்கள் காகத்தைப் போலவும், ஆண்கள் நாய்களைப் போலவும் இருக்க வேண்டும் என்கிறார். ஒரு நாயின் 5 குணங்கள் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவரது மனைவி எப்போதும் திருப்தியாக இருப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
அத்தகைய குணங்களைக் கொண்ட ஒரு ஆண் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் பராமரிக்கிறார். இத்தகைய குணங்கள் கொண்ட ஆண்களிடம் பெண்கள் அதிகளவில் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு மனிதன் நாயிடமிருந்து கற்றுக் கொள்ள விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எச்சரிக்கை குணம்
ஆழ்ந்த உறக்கத்தில் கூட நாய்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கும். அதேபோல ஒரு ஆண் தன் குடும்பம், மனைவி மற்றும் கடமைகளில் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். எப்போதும் எதிரிகளை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீங்கள் எவ்வளவு ஆழமாக தூங்கினாலும், ஒரு மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். எந்தவொரு நெருக்கடியிலும் தங்கள் அன்புக்குரியவர்களை ஆண்கள் பாதுகாக்க வேண்டும். இப்படிப்பட்ட குணங்கள் கொண்ட ஆணை மணக்கும் பெண் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்.
நேர்மை
நாய் என்றாலே நேர்மை மற்றும் விசுவாசத்திற்கு பெயர் பெற்ற உயிரினமாகும். அதேபோல், ஒரு ஆணும் தன்னிடம் இருக்க வேண்டுமென்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒவ்வொரு ஆணும் தன் மனைவியிடம் நூறு சதவீதம் நேர்மையாக இருக்க வேண்டும். அத்தகைய பெண் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்.
தைரியம்
நாய் ஒரு துணிச்சலான மற்றும் விசுவாசமான விலங்கு. அது தன்னுடைய உரிமையாளரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்ப்படிகிறது. அதேபோல ஒரு ஆண் துணைக்காக எதையும் செய்ய தைரியமாக இருக்க வேண்டும். நாய் தன் எஜமானுக்காக தன் உயிரைக் கூட தியாகம் செய்யும். அதே போல ஒரு மனிதனும் தன் மனைவிக்காக தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். ஆபத்துக் காலங்களில் குடும்பத்துக்காக தன் உயிரைப் பணயம் வைக்கும் ஆணைப் பெண்கள் எப்போதும் விரும்புவார்கள்.
இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
ஒரு மனிதன் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அந்த சம்பாதித்த பணத்தில் உங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். இதைச் செய்பவர் சிறந்தவராகக் கருதப்படுகிறார். உதாரணமாக, நீங்கள் ஒரு நாய்க்கு எந்த உணவை அளித்தாலும், அவர்கள் அதில் திருப்தி அடைகிறார்கள். ஒரு நாய் தனக்குக் கிடைக்கும் உணவில் திருப்தி அடைவது போல, ஒரு மனிதன் தனக்குக் கிடைக்கும் அன்பிலும், வருமணத்திலும் திருப்தி அடைய வேண்டும்.



Click it and Unblock the Notifications
