Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
சாணக்கிய நீதி படி இந்த குணங்கள் இருப்பவர்கள் மட்டும்தான் சிறந்த தலைவராக வரமுடியுமாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞரான சாணக்கியர் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான அனைத்து விசயங்களையும் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். அந்த வகையில் சிறந்த தலைவராக இருப்பதற்கான தகுதிகள் பற்றியும் தனது சாணக்கிய நீதியில் விளக்கியுள்ளார்.
தலைமைப்பதவியில் இருக்க வேண்டுமென்கிற ஆசை அனைவருக்கும் இருக்கும், ஆனால் அதற்கான தகுதி வெகுசிலரிடம் மட்டுமே இருக்கும். தற்போது பலரும் தலைமைத்துவ குணங்கள் பற்றி பேசுகிறார்கள், ஆனால் 4 ஆம் நூற்றாண்டிலேயே தலைவராக இருப்பதற்கான தகுதிகள் என்னவென்பதை சாணக்கிய விளக்கியுள்ளார்.

சுவாரஸ்யமாக அவரின் இந்த கருத்துக்கள் இந்த காலகட்டத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. இந்த பதிவில் தலைவராக இருப்பதற்கான சிறந்த தகுதிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
சிறந்த கம்யூனிகேஷன்
சாணக்கிய நீதியின் படி நீதிமன்றத்தில் இருக்கும்போது, அவர் ஒருபோதும் தனது மனுதாரர்களை வாசலில் காத்திருக்க வைக்க மாட்டார், ஏனென்றால் ஒரு ராஜா தன்னை தனது மக்களுக்கு அணுக முடியாதவராக மாற்றி, தனது உடனடி அதிகாரிகளிடம் தனது வேலையை ஒப்படைக்கும்போது, அவர் நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார். அதன் மூலம் பொதுமக்களின் அதிருப்தியையும், தன்னைத் தானே எதிரிகளுக்கு இரையாக்கிக் கொள்ள நேரிடும். ஒரு தலைவர் தனக்கு கீழ் பணிபுரிபவரின் பேச்சைக் கேட்க வேண்டும் . அவர் மக்களை எளிதில் அணுகக்கூடியவராக இருப்பார், அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பார். அனைவரும் அணுகும்படி படி இருப்பதற்கு கம்யூனிகேஷன் அவசியமாகும்.
முடிவெடுக்கும் திறன்
திறமையான தலைமை என்பது முடிவுகளைத் தள்ளிப் போடாமல் இருப்பது, பிரச்சனைகள் சரியான நேரத்தில் தீர்க்கப்படாவிட்டால், அவை கடினமாகவோ அல்லது சில சமயங்களில் நிறைவேற்ற முடியாததாகவோ மாறும். நாடுகள் மற்றும் நிறுவனங்கள் தாமதமாக முடிவெடுப்பதால் பெரும்பாலான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.
பெரும்பாலான நிறுவனங்களில் முடிவெடுப்பது மெதுவாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன: அதிகாரம் இல்லாததால், எல்லா முடிவுகளும் படிநிலையை கடந்து செல்வதே ஒரு காரணம். ஆனால் நல்ல தலைவர்கள் சிறந்த முடிவுகளை காலதாமதமின்றி எடுப்பார்கள்.
மகிழ்ச்சி
சாணக்கிய நீதியின் படி ஒரு நல்ல தலைவர் தனது மக்களின் மகிழ்ச்சியின் மகிழ்ச்சி அடைய வேண்டும். அவர்களின் நலனிலேயே அவரது நலன் உள்ளது. தனக்கு விருப்பமானதை அவர் நல்லதாகக் கருதமாட்டார், ஆனால் தனது குடிமக்களுக்குப் பிடித்தததை அவர் நல்லதாகக் கருதுவார்.
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல தலைவர் முதலில் தனது சகாக்களுக்கும் கீழ் பணிபுரிபவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார், அவருடைய முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் எப்போதும் இரண்டாம் நிலையில்தான் இருக்கும்.
பொறுப்புடைமை
சாணக்கியரின் கூற்றுப்படி, தங்களின் முடிவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வது என்பது ஒரு தலைவரின் மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்றாகும். மேலும், ஒரு நல்ல தலைவர் தனது செயல்களுக்கும், முடிவுகளுக்கும் பொறுப்பேற்கிறார். நாம் அடிக்கடி பார்ப்பது என்னவென்றால், சிறப்பாகச் செயல்படுபவர்கள் மேலும் பொறுப்பின் சுமைக்கு ஆளாகிறார்கள், மாறாக அவர்களின் செயல்திறன் இலக்குக்கு போதுமானதாக இல்லாதவர்கள் வேலையில் இருந்து விடுபடுகிறார்கள்.
சாணக்கியர் கூறுகையில், ஒரு தலைவர் உயர்ந்த செயல்பாட்டாளர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும் மற்றும் குறைந்த செயல்திறன் கொண்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
ரகசியத்தைக் காக்க வேண்டும்
சாணக்கியர் வழங்கிய மிகப்பெரிய அறிவுரை என்னவெனில், உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் ரகசியங்கள் உங்களை அழித்துவிடும், உங்களால் ஒரு ரகசியத்தை வைத்திருக்க முடியாவிட்டால், மற்றவர்கள் அதை ரகசியமாக வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு விசுவாசமான மற்றும் கண்டிப்பான தலைவர் நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார். நீங்கள் ஒருவரை மிகவும் நம்பினாலும், எச்சரிக்கையுடன் செயல்படுவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications
