Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
சாணக்கிய நீதி படி உங்ககிட்ட இந்த 5 விஷயங்கள் இருந்தா நீங்க போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் பண்ணிருக்கீங்களாம்!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவரது கொள்கைகளின் வலிமையால், ஒரு சாமானியராக இருந்த சந்திரகுப்தர், மௌரியப் பேரரசராக உயர்ந்தார். சாணக்கியரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. இன்றும் மக்கள் சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள். இந்த கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்ற முடியும்.

ஒரு மனிதன் பெரியவனாக மாறுவது குணத்தால் அல்ல, அவருடைய செயல்களால் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு மனிதனின் செயல்களே அவரது வாழ்க்கை நிலையையும் திசையையும் தீர்மானிக்கிறது.
ஒரு மனிதன் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பலனை நிகழ்காலத்தில் மட்டுமல்ல, அடுத்த ஜென்மத்திலும் பெறுகிறார்கள். வாழ்க்கையில் சில விஷயங்களை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நல்ல வாழ்க்கை துணையைப் பெற்றவர்கள்
அனைவருக்கும் ஒரு நல்ல மற்றும் பொருத்தமான வாழ்க்கை துணை கிடைப்பதில்லை. முற்பிறவியில் செய்த நற்செயல்களின் அடிப்படையில் தான் ஒருவருக்கு வாழ்க்கைத்துணை அமைக்கிறார்கள். நல்லொழுக்கமுள்ள வாழ்க்கைத் துணையை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண் முழு குடும்பத்தையும் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள்.
மறுபுறம், உங்களுக்கு சண்டையிடும் மனைவி இருந்தால், வீடு இரவும் பகலும் குழப்பமாக இருக்கும். சாணக்கிய நீதியின் படி, பெண்களை மதிப்பவர்கள், அவர்களின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் அவர்களுடன் இருப்பவர்கள், ஒவ்வொரு பிறவியிலும் புண்ணிய பலன்களைப் பெறுவார்கள்.
போதுமான பணம் உள்ளவர்கள்
பணம் இல்லாத வாழ்க்கை வாழ்வது மிகவும் கடினமாகும், எனவே அனைவருக்கும் வாழ்வதற்கு பணம் வேண்டும். சிலரிடம் பணம் குறைவாகவும் சிலரிடம் அதிகமாகவும் உள்ளது. ஆனால், பணத்தைச் சரியாகப் பயன்படுத்தும் திறன் எல்லாருக்கும் இருப்பதில்லை. லட்சுமி தேவியை ஒருபோதும் அவமரியாதை செய்யாமல் அதன் மதிப்பைப் புரிந்துகொள்பவர்கள் மட்டுமே பணத்தை சரியாகப் பயன்படுத்திய பலனைப் பெறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பணத்தை சரியாகப் பயன்படுத்துவதைப் பற்றி தெரியாவிட்டால், நம் வாழ்நாள் முழுவதும் பணத்தைப் பெற போராட வேண்டியிருக்கும். நீங்கள் பண விஷயத்தில் நிறைவானவராக இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். அத்தகையவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கியர் நம்பினார்.
தாராள மனப்பான்மை உடையவர்
உண்மையான மனதுடன் கொடுப்பது ஏழைகளையும் பணக்காரர் ஆக்கும். தானம் செய்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் முன்னேறுவார்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஏனெனில் உலகில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும் மனப்பான்மை இருப்பதில்லை.
மற்றவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. தர்மம் செய்பவர் பிறர் வாழ்க்கையை அழகுபடுத்துவது மட்டுமின்றி, தன் குடும்பத்தையும், நல்லொழுக்கத்தைப் பெற்று வாழ்க்கையையும் வளமாக்குகிறார் என்கிறார் சாணக்கியர்.
இரண்டு வேளை உண்பவர்கள்
ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு வேளை உணவைப் பெறுபவர்கால அதிர்ஷ்டசாலி என்று சாணக்கியர் நம்பினார். ஏனென்றால் நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். ஒருவேளை உணவு கூட சாப்பிடாதவர்கள் உலகில் கோடிக்கணக்கில் உள்ளனர். அந்தச் சூழலில், ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவைத் தவறாமல் சாப்பிடும் ஒருவர் தன்னை அதிர்ஷ்டசாலி என்று கருத வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
அதேபோல், உணவை ஜீரணிக்கும் ஆற்றல் பெற்றவர்களை மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கியர் கூறுகிறார். எவ்வளவு நல்ல உணவை சாப்பிட்டாலும், ஜீரணிக்க முடியாமல் போனால், உடல் வீணாகி, நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
தொழில் திறமை
நல்ல வேலை திறன் கொண்ட ஒரு நபர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் உலகின் எந்த மூலையிலும் வாழலாம். ஆனால், ஒருபோதும் தன் திறமையை நினைத்து தற்பெருமை கொள்ளவே கூடாது. ஏனெனில் நமது விதி எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று சாணக்கியர் எச்சரிக்கிறார்.



Click it and Unblock the Notifications
