Latest Updates
-
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்!
சாணக்கிய நீதி படி ஆண்களிடம் இருக்கும் இந்த மிருகத்தின் குணம் அனைத்து பெண்களுக்கும் பிடிக்குமாம்...!
இந்தியாவின் சிறந்த அரசியல் ஞானியான சாணக்கியர் பொருளாதாரம், தத்துவம் மற்றும் இராஜதந்திரம் போன்ற பல துறைகளில் நிபுணராக விளங்கினார்.
இந்தியாவின் சிறந்த அரசியல் ஞானியான சாணக்கியர் பொருளாதாரம், தத்துவம் மற்றும் இராஜதந்திரம் போன்ற பல துறைகளில் நிபுணராக விளங்கினார், அவரின் கருத்துக்கள் இன்றைய சமூகத்திற்கும் இன்னும் பொருத்தமானவையாக இருக்கிறது. அவரது கருத்துக்கள் மற்றும் அறிவுரைகள் இன்றைய சமுதாயத்திற்கு பயனுள்ள கண்ணாடியாக விளங்குகின்றன.
சாணக்கிய நீதியின் கொள்கைகள் வாழ்க்கையைப் பற்றி நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது. அதில் முக்கியமான ஒன்று ஆண் பெண் உறவு.

ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில், "ஒரு ஆணுக்கு நாயின் ஐந்து குணங்கள் இருந்தால், எந்த பெண்ணும் அவரிடம் திருப்தி அடைவார்" என்று கூறியுள்ளார்.
எந்த நிலையில் இருந்தாலும் திருப்தியாக இருக்க வேண்டும்
சாணக்கிய நீதி சாஸ்திரத்தின்படி, ஒரு ஆண் தன்னால் முடிந்தவரை கடினமாக உழைக்க வேண்டும். அதே சமயம், ஒருவர் தனக்குக் கிடைக்கும் பணத்தை வைத்து எப்போதும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். ஒரு நாய் தனக்கு கொடுக்கப்பட்ட உணவில் எப்போதும் திருப்தி அடையும். அதேபோல, ஒரு மனிதன் கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை அவரது குடும்பத்தை நடத்த பயன்படுத்த வேண்டும். சாணகியரின் கூற்றுப்படி, இந்த பண்பு கொண்ட ஆண்கள் எப்போதும் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
நாய் தூங்கும் போது கூட விழிப்புடன் இருப்பது போல, ஆண்கள் எப்போதும் தங்கள் குடும்பம் மற்றும் பணிகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்கள் குடும்பங்கள் மற்றும் தங்களின் நலனுக்காக, ஆண்கள் எப்போதும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எவ்வளவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும், நாய் சிறிய ஒலி கேட்டாலும் எழுந்து விடும். அத்தகைய குணாதிசயங்களைக் கொண்ட ஒரு ஆணுடன் அவரது மனைவி எப்போதும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறார்.
விசுவாசமாக இருப்பது
ஒரு நாயின் நம்பகத்தன்மையையும், விசுவாசத்தையும் ஒருபோதும் சந்தேகிக்க முடியாது. ஒரு ஆண் தனது மனைவிக்கும் வேலைக்கும் நாயைப்போல விசுவாசமாக இருக்க வேண்டும். அறிமுகமில்லாத பெண்களைப் பார்த்து பேராசை கொள்ளும் ஆணின் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்..
தைரியமாகவும், அச்சமில்லாதவராகவும் இருக்க வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, நாய் தைரியமானது மற்றும் அச்சமற்றது. தன் எஜமானைக் காக்க நாய்கள் தன் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை; இதேபோல், ஆண்கள் தைரியமாக இருக்க வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் தன் மனைவியையும், குடும்பத்தையும் பாதுகாக்க தங்கள் உயிரைப் பணயம் வைக்க தயங்கக்கூடாது.
மனைவியின் உடல் மற்றும் மன நலத்தைப் பேண வேண்டும்
ஒவ்வொரு ஆணின் முதல் கடமையும், பொறுப்பும் தன் மனைவியை எல்லா வழிகளிலும் திருப்திப்படுத்துவதாகும். தங்கள் மனைவியை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஆண்கள் எப்போதும் மகிழ்ச்சியான மனைவியைப் பெறுவார்கள். மேலும் இதைச் செய்யும் ஒரு ஆண் எப்போதும் தன் மனைவியால் போற்றப்படுவார்.



Click it and Unblock the Notifications