Latest Updates
-
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 4 பேரோட சண்டை போட்டா உங்களை யாராலும் காப்பாத்த முடியாதாம்...!
சாணக்கியர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், தத்துவவாதி, இராஜதந்திரி மற்றும் அரசியலில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர். அவர் தனது கொள்கைகள் மூலம் சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். சாணக்கியரின் கொள்கைகள் சற்று கடினமானதாக இருந்தாலும், பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் விடுபட்டு வெற்றிப் படிக்கட்டில் ஏறலாம்.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதி மூலம் மனித குலத்தின் நலனுக்காக சில முக்கியமான விஷயங்களை வழங்கியுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, அனைவருமே வாழ்க்கையில் வெற்றியை அடைந்து விட முடியாது. கடினமான சூழ்நிலை வரும்போது, பலர் தங்கள் இலக்கை பாதியிலேயே விட்டுவிடுவார்கள், சிரமங்களுக்கு பயந்து ஓடிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டார்கள் என்கிறார் சாணக்கியர்.

சாணக்கிய நீதியின் படி, ஒரு புத்திசாலி நபர் தங்களுடைய நல்லது மற்றும் கெட்டது பற்றிய சரியான அறிவைப் பெற்றிருப்பார். அவர் தனது இலக்குகளை அடைய கடினமாக உழைப்பார். ஆனால் சில சமயங்களில் தன்னை அறியாமலேயே சில தவறுகளைச் செய்துவிடுவார். அதில் ஒன்றுதான் தவறான நபர்களுடன் மோதுவது. அதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட நேரிடும்.
குடும்ப உறுப்பினர்கள்
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். நீங்கள் கெட்ட நேரங்களை எதிர்கொள்ளும் போது அல்லது ஏதாவது உதவி தேவைப்படும்போது உங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு உதவ மாட்டார்கள். தனக்குப் பிடித்தவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு யாராலும் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
முட்டாள்கள்
ஒருவருக்கு புத்திசாலித்தனம் குறைவாக இருந்தால் அல்லது அவரது மனம் மற்றவர்களைப் போல செயல்படவில்லை என்றால், அத்தகைய நபருடன் ஒருபோதும் சண்டையிட வேண்டாம் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்களுடன் வாக்குவாதம் செய்வது அல்லது சண்டை போடுவது உங்கள் நேரத்தை வீணாக்கும். ஒரு முட்டாள்ன் யாருடைய பேச்சையும் கேட்காமல், தான் சொல்வதே சரி என்று அடம்பிடிப்பார்கள். எனவே அத்தகையவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும்.
நெருக்கமான நண்பர்கள்
ஒருவரின் வாழ்க்கையில் இன்பத்திலும், துன்பத்திலும் துணை நிற்பவது நண்பன் மட்டுமே. உங்களைப் பற்றிய எல்லா வகையான ரகசியங்களும் அவருக்குத் தெரியும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நண்பருடன் நீங்கள் வாக்குவாதம் செய்தால், அவர்கள் உங்களுக்கு எதிராக உங்களுடைய ரகசியங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே உங்கள் நண்பருடன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். நண்பர் மீது உங்களுக்கு கோபம் இருந்தாலும் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். ஒரு நண்பரை இழப்பது நீங்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடிய ஒரு துணையை இழப்பது போன்றது என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
ஆசிரியர்
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குருவின் பங்கு மிக முக்கியமானது. இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் சென்று நம் மனதில் உள்ள அறியாமையை அகற்றி அறிவின் ஒளியை நிரப்புபவர் குரு ஒருவரே. எப்போதும் சரியான வழிகாட்டுதலைக் கொடுத்து இலக்கை நோக்கிச் செல்பவர் குரு. குரு இல்லாமல் ஒருவர் சரியான அறிவை பெறவே முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குருவிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்தால் அது உங்கள் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கும் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications
