Latest Updates
-
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்..
சாணக்கிய நீதி படி ஆண்கள் திருமணத்திற்கு பின் இந்த விஷயங்களை மட்டும் செஞ்சுரவே கூடாதாம்...!
Chanakya Niti About Marriage: பண்டைய இந்தியாவின் சிறந்த அரசியல் ஞானியான சாணக்கியரின் கொள்கைகள் இன்றைய காலத்திற்கும் பொருத்தமானவையாக இருக்கிறது. சாணக்கியரின் நீதி சாஸ்திரம் வேலை, நட்பு, திருமண வாழ்க்கை, செல்வம் மற்றும் பெண்கள் தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிடுகிறது. சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பணம், முன்னேற்றம், திருமணம், நட்பு, பகை, வியாபாரம் போன்ற பிரச்சனைகளை தீர்க்க வழி செய்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் சாணக்கியர் பேசியுள்ளார். தம்பதிகள் இருவரின் வாழ்விலும் எப்படி மகிழ்ச்சி வரும், அதற்கு என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.

சாணக்கியரின் கொள்கைகளில், உறவுகளைப் பேணுவது தொடர்பான பாடங்கள் ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. திருமணமான ஒருவர் தனது கற்பனையிலிருந்து விடுபட்டு யதார்த்தத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அவமரியாதை செய்யக்கூடாது
பெண்களைப் புரிந்துகொள்வது ஆண்களுக்கு எப்படிக் கடினமாக இருக்கிறதோ, அதேபோல பெண்களுக்கும் ஆண்களைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது என்கிறார் சாணக்கியர். ஆண்கள் பெண்களை மதிக்க வேண்டும் மற்றும் அவர்களின் வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மனைவியை மதிக்கும் கணவனின் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.
மற்ற பெண்களின் அழகைக் கண்டு மயங்கக்கூடாது
ஆண்கள் எப்போதும் வெளிப்புற விஷயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள். மற்ற பெண்களின் அழகு அவர்களை மயக்குகிறது மற்றும் அவர்களின் மனதை திசை திருப்புகிறது. இதுவே ஆண் பெண்ணை ஒரு பொருளாக பார்க்க காரணம். ஆனால் இதுவே திருமணத்தில் பிரச்சினைகளையும், அழிவையும் ஏற்படுத்துகிறது. ஆண்கள் எப்போதும்வெளிப்புற அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் நிம்மதி கிடைக்கும்.
அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது
ஒரு ஆண் எப்போதும் அழகான மற்றும் கண்ணியமான மனைவியை விரும்புகிறார். அழகான மனைவியைப் பெற்ற பிறகு, ஆண்கள் அவர்களை தங்கள் பொருளாகக் கருதுகிறார்கள் மற்றும் அதனால் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதுகிறார்கள். ஆனால் திருமணத்தைப் பொறுத்த வரையில் அவ்வாறு செய்வது தவறு. மனைவி என்பவர் நீங்கள் தற்பெருமையுடன் காட்டிக்கொள்ள பொருள் அல்ல. மனைவியின் அழகை விட அவருடைய மனதின் அழகில் கவனம் செலுத்த வேண்டும். இப்படிச் செய்யும் ஆண் தன் மனைவியாலும் சமுதாயத்தாலும் எப்போதும் மதிக்கப்படுவார்.
மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடக்கூடாது
மனைவி அழகில்லை என்று சொல்லி அவமானப்படுத்தும் ஆண்கள் வாழ்க்கையில் மிகவும் வருத்தப்படுவார்கள். உங்கள் சிறு எண்ணங்களால், உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியே அழிகிறது. இந்த மாதிரியான சிந்தனை கொண்ட ஆண்கள் வீட்டிலோ வெளியிலோ தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. எனவே உங்கள் மனைவியை ஒருபோதும் அவமதிக்காதீர்கள் அல்லது மற்ற பெண்களுடன் ஒப்பிடாதீர்கள்.
இயற்கையான குணத்தை பாராட்ட வேண்டும்
ஒரு பெண் தங்களின் அழகுக்காக இல்லாமல், அவரது குணம் மற்றும் திறமைக்காக பாராட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எந்த ஒரு மனைவியும் தன் கணவரிடம் மரியாதையையும் பாராட்டையும் விரும்புகிறார். ஒரு கணவர் தன் மனைவியை பாராட்டாமலேயே இருந்தால், அவர் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண மாட்டான்.
எப்போதும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது
ஆண்கள் தங்கள் மனைவியிடம் எப்போதும் குறை காண்பதை தவிர்க்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனெனில் அவ்வாறு செய்வது அவர்களின் பலவீனத்தை காட்டுகிறது. இந்த பழக்கம் உங்கள் திருமணத்தை எந்த நேரத்திலும் அழிக்கத் தொடங்கும்.



Click it and Unblock the Notifications
