Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சாணக்கிய நீதி படி இந்த குணம் உள்ள பெண் உங்க வாழ்க்கையில் நுழைஞ்சா உங்க வாழ்க்கையை அழிச்சிருவாங்களாம்!
ஒருவரின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. திருமணத்திற்கு பிறகான ஒரு நபரின் வாழ்க்கையின் மகிழ்ச்சியும், துக்கமும் அவர்களின் துணையை சார்ந்தே இருக்கிறது. ஆச்சார்ய சாணக்கியர் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பல அறிவுரைகளைக் கூறியிருக்கிறார். சாணக்கியர் ஏமாற்றுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளார்.
ஆச்சார்யா சாணக்கியர் கூறுகையில், திருமண வாழ்க்கை அல்லது காதல் வாழ்க்கை உங்கள் துணை எப்படிப்பட்டவர் என்பதைப் பொறுத்து அமைகிறது. ஒரு நல்ல துணை உங்களை உயரத்திற்கு கொண்டு செல்லும் போது, ஒரு மோசமான துணை உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடுவார்கள்.

சர்வ லட்சணம் பொருந்திய பெண்ணும் மற்றும் உண்மையுள்ள கணவரும் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. ஆச்சார்யா சாணக்கியர் காதலில் அல்லது திருமண வாழ்க்கையில் ஏமாற்றுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தியாகம் செய்ய தயாராக இல்லாதவர்கள்
காதல் அல்லது கணவன்-மனைவி உறவில், அன்போடு, தியாக உணர்வும் மிக முக்கியமானது. உங்கள் மனைவி அல்லது கணவருக்கு இந்த உணர்வு இல்லை என்றால் அவர்/அவள் எப்போது வேண்டுமானாலும் உங்களை ஏமாற்றலாம். தியாகம் இருபுறமும் இருக்க வேண்டும். கணவன்-மனைவி இருவரும் தேவைக்கேற்ப திருமண வாழ்க்கையில் தியாகம் செய்ய வேண்டும், ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, அவ்வாறு செய்யாதவர் நம்பிக்கைக்கு தகுதியானவர் அல்ல.
பாம்பு போன்ற பெண்
ஒரு பெண் அவரது குணம் மற்றும் இயல்பு மூலம் அடையாளம் காணப்படுகிறார். உங்கள் துணையின் குணமும், செயல்பாடுகளும் சரியில்லை என்று நீங்கள் உணர்ந்தால், அத்தகைய பெண்ணிடமிருந்து நீங்கள் உடனடியாக விலகிச் செல்ல வேண்டும். அத்தகைய பெண் பாம்பு போன்றவர், அவர் எப்போது வேண்டுமென்றாலும் தனது நஞ்சை வெளியிடுவார்.
நல்ல குணங்கள்
தியாகம், பண்பு மற்றும் இயல்பு தவிர, எந்தவொரு உறவிலும் நபரின் ஒருவரின் குணங்களும் மிகவும் முக்கியம். ஆச்சார்ய சாணக்கியர் கூறுகையில், ஒரு பெண்ணின் குணங்கள் மட்டுமே குடும்பத்தையும், சமுதாயத்தையும் கட்டமைக்க உதவுகின்றன. நல்ல குணங்களைக் கொண்ட ஒரு பெண் தன் கணவனுக்கும் குடும்பத்துக்கும் அதிர்ஷ்டசாலியாக இருக்கும் அதே நேரத்தில், குறைபாடுகள் உள்ள பெண் குடும்பத்தையும் சமூகத்தையும் அழிப்பார்கள்.
சுயநலமுள்ள பெண்
சுயநலமுள்ள பெண் ஒரு நல்ல மனைவியாகவோ அல்லது தாயாகவோ இருக்க முடியாது. தியாக உணர்வு ஒரு பெண்ணை ஆணை விட விசுவாசமானவராக மாற்றுகிறது. தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் அத்தகைய பெண் எப்போது வேண்டுமானாலும் ஏமாற்றலாம். தன் சுயநலத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம்.
தவிர்க்க வேண்டியவர்கள்
தீய மனைவி, தவறான நண்பர்கள், தந்திரமான வேலைக்காரன், பாம்பு இந்த நான்கு விஷயங்களுக்கும் கருணை காட்டவே கூடாது என்கிறார் சாணக்கியர். இது எப்போது வேண்டுமானாலும் உங்கள் உயிருக்கு பெரிய ஆபத்தாக முடியும். நீங்கள் அவர்களுடன் நல்லுறவைப் பேண முயற்சித்தால், நீங்களே உங்களுக்கு பிரச்சனையை வரவழைத்துக் கொள்வீர்கள். அப்படிப்பட்டவர்களுடன் வாழ்வது மரணத்தைத் தழுவுவது போன்றது.



Click it and Unblock the Notifications

