Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்கள் இருப்பவர்கள் லட்சுமி தேவியின் சாபத்திற்கு நிச்சயம் ஆளாவார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் கிமு 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரி ஆவார். வாழ்க்கைக் குறித்த அனைத்து விஷயங்களிலும் அவருக்கு ஆழ்ந்த புரிதல் இருந்தது. சந்திரகுப்த மௌரியன் சாணக்கியரின் தந்திரத்தால் பேரரசனாக்கப்பட்டார்.
கடினமாகத் தோன்றினாலும், சாணக்கியரின் கொள்கைகளை ஒருவர் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தலாம். ஒரு நபர் செல்வத்தைப் பெறுவதற்கும் அதைப் பாதுகாப்பதற்கும் பல படிகளைக் குறிப்பிட்டுள்ளார் சாணக்கியர்.

லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறார். இருப்பினும், லட்சுமி தேவியின் அருள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. உங்களிடம் உள்ள சில கெட்ட பழக்கங்கள் லட்சுமி தேவியை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும். சாணக்கிய நீதியில் இந்த பழக்கங்கள் என்னென்ன என்பதைப் பற்றி சாணக்கியர் விளக்கியுள்ளார். லக்ஷ்மி தேவி உங்களை விட்டு விலகாமல் இருக்க இந்த பழக்கங்களை நீங்கள் கைவிட வேண்டும் என்று சாணக்யா கூறுகிறார்.
மோசமான பேச்சு
சாணக்கியரின் கூற்றுப்படி, பேச்சில் இனிமையைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் நீண்ட காலம் நீடிக்காது. எனவே எப்போதும் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுங்கள். லட்சுமி தேவி இனிமையான பேச்சு நிலவும் இடத்தில் விரும்பி வசிக்கிறார் இதனால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.
எப்போதும் வீட்டில் சண்டை
சாணக்கியரின் கூற்றுப்படி, மக்கள் எப்போதும் சண்டையிடும் வீட்டில் லட்சுமி தேவி வசிக்க மாட்டார். எனவே உங்கள் வாழ்க்கையில் செல்வம் பெற விரும்பினால் வீட்டில் சண்டை போடாதீர்கள். குடும்பத்தினருடன் அன்புடன் வாழுங்கள்.
வீட்டில் மது மற்றும் அசைவம் உட்கொள்வது
வீட்டில் இறைச்சி உண்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்களின் அருகில் லட்சுமி தேவி இருக்க மாட்டார் என்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய வீட்டில் லட்சுமி தேவியின் அருள் விரைவில் நீங்கும். அதன் பிறகு வீட்டில் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் தொடர்ந்து வர ஆரம்பிக்கும்.
நண்பர்களை விட்டு பிரிவது
சாணக்கிய நீதியின் படி, நண்பர்கள் மற்றும் உங்கள் நலம் விரும்பிகளை விட்டு ஒருபோதும் பிரிந்து விடக்கூடாது. எப்போதும் நண்பர்களை அரவணைத்து செல்பவர்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெறுவார்கள். இதன் மூலம், அவர்களுக்கு ஒருபோதும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது.
அதேபோல நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளை விட்டு வெளியேறுபவர்கள் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். அதன் பிறகு அவர்கள் கடினமான சூழ்நிலைகளில் வாழ வேண்டியிருக்கும்.
பிறரை அவமதிப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி, லட்சுமி தேவி மற்றவர்களை அவமதிப்பவர்களை ஒருபோதும் ஆசீர்வதிக்க மாட்டார். அவமானத்தால் பகை ஏற்பட்டு வாழ்க்கையில் அது பிரச்சனைகளை உருவாக்குகிறது. அதனால் ஒருவர் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை பெற வேண்டுமென்றால் இதுபோன்ற கெட்ட பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
திருட்டு
ஆச்சார்யா சாணக்கியரின் கருத்துப்படி திருடவது மிகவும் மோசமானது. அத்தகைய நபர்களுக்கு ஒருபோதும் சமூகத்தில் மரியாதை கிடைக்காது. மோசடி செய்து பிடிக்கப்படும்போது தண்டிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தின் பெயரையும் அவர்கள் அழிக்கிறார்கள்.
மற்றவர்களை மோசம் செய்பவர்களை லட்சுமி தேவி எப்போதும் ஆசீர்வதிக்க மாட்டார். பணம் சம்பாதிக்க அத்தகைய நபர்கள் நிறைய கஷ்டப்படுவார்கள், அதே போல் அவர்கள் திருடிய பணமும் விரைவில் அவர்களிடம் இருந்து சென்றுவிடும்.



Click it and Unblock the Notifications
